பேச்சின் பொருள்மீறி பொய்கள் முன்னிற்க
கூச்சம் சிலநேரம் தடைபோடும்-
நீச்சம்
அடையாத வார்த்தைகளை மட்டும்தான் சில நேரம்
அடையாளம் காணும் மனம்.
அடையாளம் தெரிந்தாலும் பகிரங்கமாக்கிவிட
முடியாத உணர்வுகளை வார்த்தைகள்-
அடிமனத்தில்
புதைக்கின்ற வழக்கத்தால் கனவுகளில் மட்டும் தான்
பதிவாகும் கோபக்குறை.
கோபம் குறைவாக வெளியேறக் காரணமேன்
ஞாபகங்கள் பயமூட்டி வைக்கும்
சாபத்தின்
விளைவாக வாழ்க்கை தடுமாறும் என்கின்ற
பிழையான கற்பித்தல்தான்.
கற்பித்தவை கிடக்கட்டும்
கற்போமே..
சும்மாவும் எழுதுவது உண்டு
அருமை டாக்டர்.
ReplyDeleteஅனல் தெறிக்குது..
அருமை டாக்டர். தமிழ் தவழுது, விளையாடுது.
ReplyDeleteகுப்பன்_யாஹூ
கற்பித்தவை கிடக்கட்டும்
ReplyDeleteகற்போமே..\\
அருமை.
//சும்மாவும் எழுதுவது உண்டு//
ReplyDeleteநாங்க சீரியஸா தான் படிப்போம்!
//வால்பையன் said...
ReplyDelete//சும்மாவும் எழுதுவது உண்டு//
நாங்க சீரியஸா தான் படிப்போம்!//
:-) ஆமாம் டாக்டர்! வெகு அருமை...
do please share those things you have learnt and wish to teach us.
ReplyDeletethat was too good