Thursday, July 9, 2009

ஒரே ஒரு மயிர்..

377 பற்றியெல்லாம் கருத்துசொல்ல நான் சட்டநிபுணன் அல்ல, ஆனால், இது ஒரு சட்டம் குறித்த விவாதம் மட்டும் இல்லையே!

ஒத்த பாலினர் பாலுறவில் ஈடுபடுவது ஏற்புடையதா என்பதல்ல கேள்வி, அது ஒரு தண்டனைக்குரிய குற்றமா என்பதே கேள்வி, ஆனால், கேள்வி பற்றிய அக்கறையோ புரிதலோ ஒருவன் பதில் சொல்ல அவசியமான அடிப்படை என்பதே இல்லாமல், இது குறித்து பலர் பேசிவருவதாலேயே நானும் பேசத்துணிகிறேன்.

ஓரினச்சேர்க்கை மனநோய் அல்ல; அதற்காக அது இயற்கையுமல்ல. உள் ஏற்படும் ஒருசில மரபணுமாற்றங்ளும், இயல்பாகிவிட்ட ஒருசில இளமையின் கற்றல்களுமே காரணம் என்று அறிவியல் ஆய்வுகள் கூறும்போது, அதை நோய் என்றும், குற்றம் என்றும் கூறுவதோடு நிற்காமல், இதனைச் சரி செய்யத்தன்னால் முடியும் என்றும், அதைத் தான் கற்றுத்தரப்போகும் (பகிரங்கமாக இன்னும் கட்டணம் அறிவிக்காத‌ ) யோகப்பயிற்சிகளின் மூலம் 'குணப்படுத்த' (இல்லாத நோய்க்கான சிகிச்சை!)இயலும் என்றும் ராம்தேவ் எனும் ஒரு இந்து சாமியார் (கிருத்துவ,இஸ்லாமிய மற்றும் பிற மதத்தினைச்சார்ந்தவைர்களும்)விளம்பரத்துக்காகக் கூறித்திரிவதுதான் ஆபாசமாக உள்ளது.

இப்படி அறிவிக்கும்போதே குறுகித் துடிதுடித்துக்கொண்டிருக்கும் தன் இடது கண்ணையே சரிசெய்து கொள்ள முடியாத ஒரு போலி, ஆழமனத்துள் பதிந்துவிட்டதால் உருவான பாதிப்பை எப்படி சரி செய்ய முடியும்?

ஆனால் நாம் கேள்வி கேட்கத்தான் மறந்துவிட்டோமே, அதுவும் சாமியார்களைத்தான் நாம் கேட்க 'நினைப்பது' கூட இல்லையே.

தன் கண்ணில் வெளிப்படும் tics என்னும் பாதிப்பை கூட யோகாவால் சரிசெய்துகொள்ள முடியாத இந்த சாமியார்......!!!

மொழுமொழுவென்ற முகத்தோடு இருக்கும் சாமியார்களும் மனித தெய்வங்களும் முகத்தின் முடியை மழித்தோ, வழித்தோ பிடுங்கியோ எடுக்காமல் ரோமம் மறையப்போவதில்லை. எந்த பக்தனாவது சாய்பாபா சவரம் செய்துகொள்வதில்லை என்று சொல்லமுடியுமா?

ஒரு மயிரைக் கூட வளரவிடாமல் தடுக்க இவர்களின் ஆன்மிக/தெய்வீக வித்தைகளால் முடியாது...

இவர்களை நம் மக்கள் வணங்கி...நம்பி ...

வெட்கமாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது.


19 comments:

  1. //யோகப்பயிற்சிகளின் மூலம் 'குணப்படுத்த' (இல்லாத நோய்க்கான சிகிச்சை!)இயலும் என்றும் ராம்தேவ் எனும் ஒரு இந்து சாமியார் (கிருத்துவ,இஸ்லாமிய மற்றும் பிற மதத்தினைச்சார்ந்தவைர்களும்)விளம்பரத்துக்காகக் கூறித்திரிவதுதான் ஆபாசமாக உள்ளது. //

    விஷ்ணுவும், சிவனும் கூடியதாக இந்து புராணத்தில் உள்ளதே!

    சிவன் கூட தன் உடலில் பாதி பெண் வடிவன் என்று சொன்னதாக வரலாறு சொல்லுதே!

    சுய இன்பம் தவறில்லையென்றால் இதுவும் தவறில்லை தானே!

    ஆனால் விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி!

    ReplyDelete
  2. ஒரு மயிரைக் கூட வளர‌விடாமல் தடுக்க இவர்களின் ஆன்மிக/தெய்வீக வித்தைகளால் முடியாது...\\

    பர்ஃப்க்ட் ...

    ReplyDelete
  3. malitthalum neettalum vendaa ulagam pazittathu...

    ReplyDelete
  4. இன்றைய சூழலில் முதலீடில்லாமல் அதிக லாபம் கொழிக்கும் தொழில்களில் ஒன்று ஆன்மிகம்.

    ReplyDelete
  5. //
    ஒரு மயிரைக் கூட வளர‌விடாமல் தடுக்க இவர்களின் ஆன்மிக/தெய்வீக வித்தைகளால் முடியாது...
    //

    WELL SAID!!!

    ReplyDelete
  6. //
    விளம்பரத்துக்காகக் கூறித்திரிவதுதான் ஆபாசமாக உள்ளது.
    //

    ஒரு படத்துல செந்தில் கவுண்டமணிட்ட சொல்வாரு...

    "அண்ணே ஒரு வெளம்பரம்..."

    அது மாதிரி தான் இதுவும்....ஆனா, இந்த சாமியானுங்களையும் (இவங்களுக்கு எதுக்கு ர் விகுதி?) நம்புறாங்களே...அவங்களை சொல்லணும்!

    ReplyDelete
  7. கேள்வி கேட்பதே தவறென்றுதானே கற்று வளர்கிறோம், பணிதலே பக்தி, சரணமே கதி, இதுதானே சாமியார்களுக்குத் தேவையான பாதை!

    மக்களின் அறிவீனத்தையும், பயத்தையும் காரணம் காட்டியே பிழைப்பு நடத்தும் இந்தச் சாமியார்களுக்கு இது இன்னொரு வாய்ப்பு.

    ReplyDelete
  8. ஏமாற்று,திருட்டு,கொள்ளை,குறைந்த அளவில் வணிகம் என்று இல்லாததைச் சொல்லி வரும் மதத்தலைமை மனித நேயத்திலும்,மருத்துவத் துறையிலும் மூக்கை நுழைப்பதை அறுக்க வேண்டும்.மனிதர்கள் மட்டுமல்ல,பென்குயின் போன்ற பல மிருக இனத்திலும் இருக்கும் பழக்கத்திற்கும்,இன்று வளர்ந்துள்ள நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் மனிதக் கொள்கைகளிலும் தலையிட இந்த ஏமாற்றுக் காரர்களுக்கு என்ன உரிமை உள்ளது.
    சாயி பாபாவின் வண்டவாளம் பி பி சி யில் வந்ததே.அவரிடமே கருத்துக் கேட்கட்டுமே.
    நாரதர் மூலம் பிறந்த 60 குழந்தகள் கதையில் அறுவருப்பில்லாத முண்டங்களுக்கு இந்த வம்பெல்லாம் எதற்கு?

    ReplyDelete
  9. சரியாகச் சொன்னீர்கள்..

    ReplyDelete
  10. மொழுமொழுவென்ற முகத்தோடு இருக்கும் சாமியார்களும் மனித தெய்வங்களும் முகத்தின் முடியை மழித்தோ, வழித்தோ பிடுங்கியோ எடுக்காமல் ரோமம் மறையப்போவதில்லை. எந்த பக்தனாவது சாய்பாபா சவரம் செய்துகொள்வதில்லை என்று சொல்லமுடியுமா?

    ஒரு மயிரைக் கூட வளர‌விடாமல் தடுக்க இவர்களின் ஆன்மிக/தெய்வீக வித்தைகளால் முடியாது...//

    இது புது செய்தியாக இரு்க்கின்றது.... இப்படி எல்லாமும் கிளம்பிட்டானுங்களா?????

    மக்களை பயமுறுத்தி...சிட்டுகுருவி லேகியம் லாட்ஜ்ல விக்கற கதைதான் டாக்டர் நினைவுக்கு வருகின்றது....

    ReplyDelete
  11. Mayadi avargalin blogspot il yelipi irundha vivadhangal satru yosikka vaithadhu..Indru Orina serkaiyalargalukku satta poorva angihaaram yendral naalai "Incest" vaiyrakkalum ketpaargale yendru kelvi yelippi irundhar..Thangal karuthai therindhu kolla aavali ullaen...Krish

    ReplyDelete
  12. //இது மனநோயும் அல்ல, அதற்காக இயற்கையும் அல்ல. உள் ஏற்படும் ஒருசில மரபணுமாற்றங்ளும், இயல்பாகிவிட்ட ஒருசில இளமையின் கற்றல்களுமே காரணம்//

    நானும் மனநோய் என்று தான் ரொம்ப காலம் நினைத்திருந்தேன்.

    //ஒரு மயிரைக் கூட வளர‌விடாமல் தடுக்க இவர்களின் ஆன்மிக/தெய்வீக வித்தைகளால் முடியாது...

    இவர்களை நம் மக்கள் வணங்கி...நம்பி ...

    வெட்கமாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது.//

    சரியாகச் சொன்னீர்கள். மிக்க வேதனை தான்.

    ReplyDelete
  13. போலிகளை மக்கள் இனங்கண்டு பிரித்தாளவேண்டும். நல்ல பதிவு

    ReplyDelete
  14. மிக நல்ல பதிவு டாக்டர் சார்.

    ReplyDelete
  15. Ramdev's views are silly. He is not the only one who talks nonsense in this . There are many others who are against repealing Section 377. TMMK organised a protest and supported Section 377. Has the church accepted that homosexuality is not deviation. Doing yoga has its own benefits and that has nothing to dow ith views of Ramdev. Persons like Ramdev should talk sense and try to understand the facts instead of clinging to ideas expressed in the byegone eras. They dont' say all this for publicity.

    ReplyDelete
  16. ருத்ரன் ஒரு மருத்துவர்.
    ஆன்மீக அனுபவம் அற்றவர்.
    யோகம் பற்றிய அறிவு இல்லாதவர்.
    அவர் மருந்துகள் பற்றியோ
    மருத்துவம் பற்றியோ பேசினால்
    எடுத்துக் கொள்ளலாம்.

    யோகம் பற்றியோ ஆன்மீகம்
    பற்றியோ பேசினால் பெரிதாக
    எடுத்துக் கொள்ள வேண்டியது
    இல்லை.

    இவர் ஆன்மீக புத்தகங்களை
    படித்து இருக்களாம்.அதுவும்
    அரைகுறையாக.புத்தகங்களை
    படித்து பெறுவதற்கு ஆன்மீகம்
    ஒன்றும் டாக்டர் பட்டம் இல்லை.

    இதுநாள் வரை மருத்துவ உலகம்
    ஒருபால் உறவு நோய் என்றுதான்
    சொல்லி வந்தது இருக்கிறது.இப்போது
    நோய் என்று சொல்பவர்களை கெட்ட
    வார்த்தையில் ஏசுகிறது.

    மயிர் முலைக்காமல் இருக்க ஆன்மீகத்தில்
    வழி இருந்தால் தான் ஆன்மீகத்தை ஏற்றுக்
    கொள்ள வேண்டுமா.டாக்டர்ளும்
    தினமும் சவரம் தானே செய்கிறார்கள்.

    ReplyDelete
  17. //யோகம் பற்றியோ ஆன்மீகம்
    பற்றியோ பேசினால் பெரிதாக
    எடுத்துக் கொள்ள வேண்டியது
    இல்லை.//

    விளக்கமா சொல்லுங்க!
    ஏன் எடுத்து கொள்ளவேண்டியதில்லை!

    ReplyDelete
  18. ருத்ரன் ஒரு மருத்துவர்.
    ஆன்மீக அனுபவம் அற்றவர்.
    யோகம் பற்றிய அறிவு இல்லாதவர்.
    அவர் மருந்துகள் பற்றியோ
    மருத்துவம் பற்றியோ பேசினால்
    எடுத்துக் கொள்ளலாம்.
    யோகம் பற்றியோ ஆன்மீகம்
    பற்றியோ பேசினால் பெரிதாக
    எடுத்துக் கொள்ள வேண்டியது
    இல்லை.

    ReplyDelete
  19. Dear Neelan, to criticize you dont need to be an expert. In addition, to prove something is right, you need to be an expert in that domain. Hence, the article and the writer has every right to criticize.

    ReplyDelete