Thursday, July 16, 2009

ஆட்டம் முடிவதில்லை


ஆட்டம் முடிவதில்லை தில்லையில்.

இன்னும் எத்தனை காலம்? நடராஜன் ஆடட்டும், அந்த நாட்டியம் ஒரு ககனக்கலைக்கூத்தாகவே இருக்கட்டும்..

அவன் பெயர் சொல்லி கலைஞர்கள் ஆடலாம், கயவர்கள் ஆடலாமா?

அந்தணர் என்போர் அறவோர் என்பதா நிதர்சனம்?

பகுத்தறிவுப்பகலவனிடம் இரவல் வாங்கிய ஒளியில் போலியாய் மினுக்கிக்கொண்டிருக்கும் சாமான்யசாண‌க்கியனுக்கு இதெல்லாம் தெரியாதா, இல்லை இது குடும்ப விஷயமில்லை என்பதால் முக்கியமில்லையா?

சிதம்பரத்தில் ஆறுமுகசாமி என்னும் முதியவர் பக்திக்கும் முதுமைக்கும் உரித்தான முரட்டுப்பிடிவாதத்தில், கோவிலில் தேவாரம் பாட ஆசைப்பட்டார், மறுக்கப்பட்டதும் அடம் பிடித்தார். பொதுவாக கோவில்களில் இப்படி பக்தியோடு உரக்கப்பாடுவது குறித்து எனக்கு உடன்பாடில்லை. பலநேரம் சுருதி இல்லாமல் தாளம் இல்லாமல் சிலர் பாடுவதைக் கேட்கச்சகிக்காமல் மனத்துக்குள் 'கெட்ட' வார்த்தைகள் பொங்கிவருமே தவிர பக்தி பொங்காது. ஒருமுறை ஒரு சிறந்த பாடகி சன்னதியில் பாடிக்கொண்டிருந்த போது, என் மனம் கடவுளையும் அதன் பிம்பத்தையும் விட பாடகியின் மீதும் பாட்டின் மீதுமே லயித்திருந்தது. இங்கே பாட்டின் தரமல்ல ப்ரச்சினை. பாடுபவரும் (?ஜாதியால்) பாட்டும் (?மொழியால்) தான் ப்ரச்சினை. இதனாலேயே ம.க.இ.க போராடி நீதிமன்றம்வரை நின்று அவருக்கு அங்கே பாடும் உரிமை வாங்கித்தந்தது.

அவர் என்ன "வேர் இஸ் தி பார்டி டுநைட்" பாடவா ஆசைப்பட்டார்? தேவாரம் தானே (திருவாசகம் கூட இல்லையே)! இதில் தான் ஆதிக்கவெறியும் ஆணவமும் வெளிப்படுகிறது. இதுமேலோட்டமாகப் பார்த்தால் வெறும் ஜாதிக்கொழுப்பாகத்தோன்றும்;(இப்படி நினைத்துக்கொண்டு சுசாமி வேறு இதில் ஆடி முட்டைவாங்கியதையும் நினைவில்கொள்ள வேண்டும்) உண்மையில் இது பணப்பிரச்சினை. வருமானத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்னும் பதைபதைப்பும் தான் இங்கே பின்னணி.

அரசு அலுவலர் நீதிமன்ற உத்தரவுடன் மக்கள் பக்தியில் தரும் பணம் நேரடியாக நடரஜனுக்குத்தான் போகவேண்டும் என்று பொது உண்டியல் வைத்ததைக்கூட அவர்கள் எதிர்த்ததிலேயே இது புரியும்.

இந்நிலையில், இப்போது-

வினவு

Posted on July 15, 2009 at 2:52 pm

FLASH NEWS

நேற்று இரவு (14.07.09 ) சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமி அங்கே வந்த பக்தர்களிடம் பணம் கேட்ட தீட்திதர்களை எதிர்த்துக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தீட்திதப் பார்ப்பனர்கள் அந்த முதியவரை வயதானவர் என்றும் பாராமல் தாக்கியிருக்கின்றனர். காயமுற்ற சிவனடியார் தற்போது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். ம.க.இ.க வின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிவனடியாரின் கனவான தமிழில் பாடுவதும், கோவிலை அரசு கையிலெடுப்பதும் நிறைவேறிய நிலையில் சிதம்பரம் தீட்சிதர்கள் அவர் மீது கொலைவெறியில் இருப்பதும் இப்போது அதை வெளிப்படையாக காட்டியிருப்பதும் அரசு அவாள்களைக் கண்டு பயப்படுவதன் விளைவே.

ஆட்டம் முடியவில்லை! நடராஜன் ருத்திரனாக இருந்திருந்தால்...?

11 comments:

  1. //அரசு அலுவலர் நீதிமன்ற உத்தரவுடன் மக்கள் பக்தியில் தரும் பணம் நேரடியாக நடரஜனுக்குத்தான் போகவேண்டும் என்று பொது உண்டியல் வைத்ததைக்கூட அவர்கள் எதிர்த்ததிலேயே இது புரியும். //

    சாமி என்றைக்கு கோயில்ல இருந்தார்? அவர் வீதிக்கு வந்துவிட்டார்

    ReplyDelete
  2. கோயிலுக்கு மிக அருகில் சென்று விட்டு திரும்பும் போது ” ஒரு டிஜிட்டல் பிளக்ஸ் போர்டினை பார்த்தேன் “இலவச அன்னதானம் அனைத்து பக்தர்களும் தவறாது அன்னதானத்தை பெற்றுக்கொள்ளவும். இப்படிக்கு நவதாண்டவ தீட்ஷிதன்” என்றிருந்தது. கூட வந்தவர் சொன்னார் ” அவன் யார் தெரியுமா? கோயிலில் கொலுசு திருன கேசுல அவன் தான் முதல் A1 குற்றவாளி” மறுபடியும் அவனை(போட்டோவை) பார்த்தேன். நல்ல திருட்டு முகம்.........


    தில்லையில் பார்ப்பன சதிராட்டம்
    அடிவருடிகளின் ஒயிலாட்டம்

    http://kalagam.wordpress.com/

    ReplyDelete
  3. நடராஜன் ருத்திரனாக இருந்திருந்தால்...?
    ருத்ர‌ தாண்ட‌வ‌மும் ஒரு ந‌ட‌ன‌ வ‌கைதானே, ந‌டராஜ‌னின் 'போஸ்' மாறியிருக்கும் அவ்வ‌ள‌வே.
    நடராஜன்கள் ருத்திரர்க‌ளாக‌ மாற‌வேண்டும். ஆம்
    ம‌க்க‌ள் கோப‌ம் கொள்ள‌வேண்டும்.

    தோழ‌மையுட‌ன்
    செங்கொடி

    ReplyDelete
  4. //பகுத்தறிவுப்பகலவனிடம் இரவல் வாங்கிய ஒளியில் போலியாய் மினுக்கிக்கொண்டிருக்கும் சாமான்யசாண‌க்கியனுக்கு இதெல்லாம் தெரியாதா, இல்லை இது குடும்ப விஷயமில்லை என்பதால் முக்கியமில்லையா?//


    அரசியலில் பலன் இருக்கும் செயலுக்கு தானே முதலிடம். இன்று பெரியாரே இருந்தாலும் அவருக்கு கடைசி இடம் தான்!
    காரணம் பெரியாருக்கு சந்தர்பவாத அரசியல் தெரியாது!

    ReplyDelete
  5. If they had used violence against him, that should be condemned. Let the law take its course. Let them be arrested if necessary.
    But Vinavu and you had justified violence whenever it suited you. It is a pity that you are in the company of psycopaths and bigots.

    ReplyDelete
  6. நிதர்சனம்
    யானும் இட்ட தீ மூள்க மூள்கவேன்னு பாடி இருப்பார்

    ReplyDelete
  7. ஆட்டநாயகனுக்கே ஆட்டம் காட்டும் அந்தணர்களின்
    ஆட்டம் அடக்கபடும் அடியோடு.

    -
    கிறுக்கன்

    ReplyDelete
  8. ungal aduththa padhivu eppodhu doctor?

    ReplyDelete
  9. இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
    நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

    http://www.srilankacampaign.org/form.htm



    அல்லது

    http://www.srilankacampaign.org/takeaction.htm



    என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
    அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

    ReplyDelete
  10. தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவரான திருநாளைப்போவார், என்ற நந்தனாரின் சிலை, சிதம்பரம் கோவிலில் உள் மண்டபத்திலிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நகற்றப்பட்டு இப்போது அது அங்கு இல்லை.

    நந்தனார் கீர்த்தனை பாடி நாட்டைப் பிடித்த பலரும் இதை கண்டுகொள்வதும் இல்லை.
    கவலைப்படுவதுமில்லை...

    பதிவு அருமை.......தொடருங்கள்.....

    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  11. தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சி தின வாழ்த்துக்கள்

    அந்தக் கனலை நெஞ்சில் ஏந்துவோம்
    அதற்காகவே வாழ்வோம்

    தோழமையுடன்
    செங்கொடி

    ReplyDelete