Wednesday, January 12, 2011

முடியாத ஒரு முன்னுரை


நான் எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டதேயில்லை. எழுதியே வாய்க்குச் சோறும் வண்டிக்குப் பெட்ரொலும் போட்டுக்கொள்ள முடியும் என்று பீற்றிக்கொண்டவனும் இல்லை, அப்படி எந்த உத்தேசமும் இப்போதைக்கு இல்லை.

அதே நேரம், எழுத்துக்களைக்கூட்டி வார்த்தைகளாக்கி, வார்த்தைகளைக் கூட்டி வாக்கியங்களாக்கும் வித்தை மட்டுமே எழுத்தாளன் எனும் புகழுக்குத் தகுதியாவது இல்லை என்று மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்  -மற்றவர்க்கும் எனக்கும்.

நான் கம்யூனிஸ்ட் என்றும் சொல்லிக்கொண்டதில்லை. சுயசௌகரிய மயக்கத்திலிருந்து மீளாமல் அப்படிச் சொல்லிக்கொள்வதன் அபத்தம் விளக்கத் தேவையிலாத வெட்டிவாதம்.

நான் நாத்திகன் என்று சொல்லிக்கொண்டதில்லை, நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். கடவுள் நம்பிக்கையும் சாதீயத்திமிரும், பார்ப்பனீய குயுக்தியும் வேறுவேறு என்பது என் இன்றைய நம்பிக்கை. நான் நம்புவதால் நீங்களும் நம்புங்கள் என்று பிரச்சாரம் செய்தவனும் இல்லை, செய்யப்போவதும் இல்லை. கம்யூனிஸத்தைப் பிரச்சாரம் செய்யாத நான் கடவுள் நம்பிக்கையும் பிரச்சாரம் செய்வதில்லை – எனக்கு இரண்டுமே பிடிக்கிறது, இன்னும் மற்றவர் மீது திணிக்கும் அளவுக்கு இல்லை.

எனக்குப் பிடிக்கும் பிடிக்காது என்பது மீறி எனக்குச் சரியில்லை என்று தோன்றினால் அதைப் பதிவிடுவதும் என் வழக்கம். சில வேளைகளில் பதிவிடாத என் மௌனம் எனக்கே கூச்சம் தந்ததும் உண்டு. இதையெல்லாம் மீறி எனக்கென்று ஒரு சமூகப்பொறுப்பு இருப்பதாக நினைப்பவன் நான்.  வயதும் வசதியும் கூடியதால் இனி களப்பணி எனக்குச் சாத்தியமில்லை. ஆகவே இப்போதைக்கு வார்த்தைகள் மட்டுமே என் வேலை.

இந்த ஆண்டு நிறைய எழுதுவதாய் இப்போதைக்கு உத்தேசம். யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ எனக்காவது பயன்படும் எனும் (கடவுள் போன்ற) நம்பிக்கையில் –இவ்வகை நம்பிக்கை தான் கனவு என்றும் ஆசை என்றும் சொல்லப்படும்: நிறைவேறினால் பேரானந்தம், நிறைவேறும் வரையும் நிழலானந்தம்.

வாழ்க்கை பற்றிய என் புரிதலை, அனுபவங்களின் அடிப்படையில் நான் அலசித் தேர்ந்துகொண்ட சித்தாந்தங்களை, என் கோணங்களை, கோணல்களை விமர்சிப்பதாய் மட்டுமல்லாமல் விளக்கி விளக்கம் பெறுவதுமாக எழுதுவதே இன்றைய சபதம்.
அடுத்த பதிவில் நட்பு பற்றி எழுதலாம், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. கிசுகிசுவாக அல்ல. நேர்மையாக. பூச்சிகளையும் புழுக்களையும் அடையாளம் காட்டும் நேரத்தில் தேவரூப விந்தைகளையும் வியந்து போற்றும் வண்ணமாக.
இன்ஷா அல்லாஹ்.


17 comments:

  1. புலம்புவதில் நாத்திகர்களுக்கு இணை அவர்கள்தான்!

    ReplyDelete
  2. நீங்கள் வயது கூடாத போது எதுபோல களப்பணி செய்தீர்கள். சொன்னால் தெரிந்துகொள்கிறோம்.

    தேவருப விந்தைகளை நீங்களே போற்றி புகழ்ந்துகொ(ல்லு)ள்ளுங்கள். உங்கள் நேர்மை பூச்சிகளிடமும், புழுக்களிடமும் காட்டி என்ன நேரபோகுது...

    ReplyDelete
  3. நல்லா எழுதுங்க.....

    தங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Very closely read the article and am convinced about you sir.I hope I will read interesting self analysis and happenings around you in the future.Regards,
    Utham

    ReplyDelete
  5. விஷப் பூச்சிகளுக்கு எதையும் கெடுக்கும் ஜந்துக்களுக்கு மருந்து அடிச்சுதானே ஆகனும்.

    ReplyDelete
  6. அன்புள்ள Dr. அண்ணா,
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .நீங்கள் இவ்வருடம் முடிவில்லாத கடவுள் பிரச்னை விடுத்து மன நலம் பற்றியோ ,,வேறு சமுதாய சீர்திருத்த பதிவுகள் தொடர்ந்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எது என் அன்பான வேண்டுகோள் .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  7. இந்த ஆண்டு நிறைய எழுதுவதாய் இப்போதைக்கு உத்தேசம். //

    எழுதுங்க அதான் வேணும். நிறைய தெரிஞ்சிக்க இருக்கு!

    ReplyDelete
  8. DR Pls Write more in Tamil

    With Regds,
    Swarna Latha(Palani), Chennai.

    ReplyDelete
  9. உங்களின் அன்்றைய (90களின்) பேச்சுக்களும் எழுத்துக்களும் இன்றைக்கும் என் சிந்தனைக்கு வழிகாட்டியாக இருக்கிறதென்பது முழு உண்மை.

    உங்களின் எழுத்தும் அதன் தீவிரமும் கூடட்டும்!

    அன்புடன்,
    நம்பி.பா.

    ReplyDelete
  10. உங்கள் பதிவுகளை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம், எதிர்பார்க்கிறோம்.dr.

    ReplyDelete
  11. தங்களின் வார்த்தைகள் சித்தத்தை ஜாலம் செய்ய வைக்கிறது.. சந்தோஷமாக..

    ReplyDelete
  12. நீங்கள் வலைப்பக்கம் வைத்திருப்பதை இன்று தான் அறிந்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் உங்களைத் தொடர்கிறேன்.
    முடிந்தால் என் வலைப்பக்கமும் வந்து பாருங்கள் Dr.

    ReplyDelete
  13. ருத்ரன் சார்,

    //இருத்தலை நினைவூட்டும் ஒரு முயற்சியாக.//

    இது பிடிச்சிருக்கு. எல்லாரும் இதற்காகத்தான் எழுதறாய்ங்களோ?

    நாம பெட்டர் . ஒருத்தன் சீனச்சுவர் ,இன்னொருத்தன் தாஜ்மஹால்.

    நிகழ்காலம் நீர்த்துப்போகும் போது உயிர்ப்பு மங்கிப்போகும் போது இது அவசியமாகும் போல..

    ஏங்க நான் கரெக்டா சொல்றேனா?

    ReplyDelete
  14. //கடவுள் நம்பிக்கையும் சாதீயத்திமிரும், பார்ப்பனீய குயுக்தியும் வேறுவேறு //

    நூத்துல ஒரு வார்த்தை. அனுபவம் பேசுதோ?

    மத்தவுக "அட என்னங்க 2011லயும் அதே பாட்டா"னு சலிச்சுக்குவாய்ங்க

    ReplyDelete
  15. சக்தி அவர்களே,

    //முடிவில்லாத கடவுள் பிரச்னை விடுத்து //

    கடவுளை பிரச்சினையாக்குவது நாத்திகம் மற்றும் ஆத்திகத்தில் அரிச்சுவடிகளாக இருக்கும் அரைகுறைகள் தாம்.

    உச்சத்தை அடையும் போது இரண்டுமே மனிதனில் முடியும்.

    அல்லவை யாவும் மடியும். ஒரு சமுதாயம் வளம் பெற , நலம் பெற இந்த கடவுள் பிரச்சினை குறித்த அதன் பார்வையே உதவும் அ இடுப்பொடிக்கும்.

    ருத்ரன் அய்யா.. நீங்க நோண்டி நுங்கெடுங்க..

    ReplyDelete
  16. sir, i did well ur all written words, super sir.... ayya, i want tell something in tamil words, because
    we have show more expression in tamil words only...

    kadavul erukirar engirargal silaper, kadavul ellai engiraral sillaper, ayya naan solli kolla aasai padugirean, erundhal nalla erukumnu naan nenaikurean

    ReplyDelete
  17. You have chosen direction as per your conscious.No one has any right to question your perceptions,Whereas they can express their opinion regarding the subject matters made public.your experiences in the field of Psychiatry and the dogmas from different idealogical perspectives have moulded your strong personality to express your considered opinion.viduthalaibalan

    ReplyDelete