உன்னை உபாசிக்கவில்லை ஸ்வாசிக்கிறேன், சத்தியமாய். நின்னைச்சரணடையவில்லை, நீயென்றே ஆகிவிட்டேன்.
சொல்லடி சிவசக்தி! எனக்கு மொழி கொடுத்தது மௌனமாய் இருக்கவா?
சபிக்கவல்ல நான் கேட்கும் வரம்! (சிரிப்பதாய் நினைத்துக்கொள்ளும் உதடுகளைச் சிவப்பாக்கும்படியும் உன்னிடம் கேட்கவில்லை வரம்- அதற்கு எதற்கு வரம்?)
உன்னிடம் வல்லமை தாராயோ என்றும் கேட்க மாட்டேன்.. இல்லையென்றால்தானே கேட்க!
இதோ இங்கே இணையத்தில் நட்புகள் வருகின்றன, வெளுத்து வெளியேறுகின்றன. இதுவும் உன் செயல் என்றால் நாத்திக-முற்போக்கு நடிகர்கள் கோபித்துக் கொள்வார்கள்! இதெல்லாம் நானே என்று (பொய்) சொல்லும் துணிவும் எனக்கில்லை. என்னம்மா செய்ய?
செருப்பாலடிக்கச் செருப்பை மட்டுமல்ல, கடியாரக் காட்டலையும் நீ தான் நிர்ணயம் செய்கிறாய்! அப்புறம் எதற்கு நான்? எந்தக் கோட்பாட்டையும் உறுதிபடுத்தும் கருவியாகவா?
நடந்தவை போக நடப்பவை மீது நம்பிக்கை கொள்ள என்னிடம் கீதை இல்லை, மறுகன்னம் காட்டும் மாண்பும் இல்லை.
என் தொழிலாக நானேற்று செவ்வனே இயங்கும் மனநலமருத்துவம் உன் வரம்தான். அதுவே எனக்கு சுமை என்பதுபோல மூடர்கள் ஆக்குகிறார்கள். ஒரு மனநல மருத்துவனுக்குக் கோபம் வரக்கூடாதாம், கொஞ்சம் விட்டால் மலம்கூட வரக்கூடாது என்பார்கள். அவர்களைச் சகித்துக்கொள்ளும் மனதினை நல்ல வேளை நீ எனக்குத் தரவில்லை.
லாசரா போன்றோர் எழுத்தைப் படிக்கும்போது வாசகனாய், ஆதிமூலம்/மருது போன்றோரின் கோடுகளைப்பார்க்கும் போது ரசிகனாய், மருதையன் போன்றோர் பேசுவதைக் கேட்கும்போது மாணவனாய்த்தான் நான் இருக்க முடிகிறது. என் க்ளினிக்கில் மட்டுமே மனநலமருத்துவனாய் இருக்க முடிகிறது. மற்ற நேரங்களில் மனிதனாய் இருக்க முடிகிறதே, அதற்கு நன்றி எப்படிச் சொல்வேன்.
திசைதிருப்பிக் களவாடும் கயவர்களை என் கண்முன் காட்டாதே, உன்னைபோல் அழகுச்சிலையாய் உட்கார்ந்து சிரிப்புடன் வேடிக்கை பார்க்க என்னால் முடியாது. மருந்தாய் மட்டும் இருக்க வைத்துவிடாதே, கிருமிநாசினியாகவும் ஆக்கிவை.
எனக்கு ஆற்றவேண்டிய பணிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது, என்னைக் காரியமாற்ற விடு. எழுத்தாய் வெளிப்படு, எல்லார்க்கும் பயன்படு.
நல்லன எல்லாம் தா என்று உன்னிடம் வரவில்லை, அல்லனவெல்லாம் அகற்றவே இந்த என் வேண்டுதல்.
2011 முதல் என் சமூகத்திற்கு நான் இன்னும் பயன்படவேண்டும், இன்ஷா அல்லாஹ்.
உங்களுக்கும்...
ReplyDeleteWish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...
//ஒரு மனநல மருத்துவனுக்குக் கோபம் வரக்கூடாதாம், கொஞ்சம் விட்டால் மலம்கூட வரக்கூடாது என்பார்கள்.//
ReplyDeleteகாமாஷியின் அழகை ஒருபோதும் உணர முடிந்ததில்லை. ஆனால், தங்கள் கோபத்தில் எப்பொழுதும் ஒரு அழகு இருக்கிறது.
//எழுத்தாய் வெளிப்படு, எல்லார்க்கும் பயன்படு.//:)
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
//திசைதிருப்பிக் களவாடும் கயவர்களை என் கண்முன் காட்டாதே,//
ReplyDeleteஅதெல்லாம் காலம் தோரும் ஏறி, வெளுத்து போயிக் கொண்டே இருக்கும்தானே...
//2011 முதல் என் சமூகத்திற்கு நான் இன்னும் பயன்படவேண்டும்,//
ஆமாம்! தொடர்ந்து எழுதுங்க - ருத்ரன்!
நண்பரே
ReplyDeleteவலி புரிகிறது
புத்தாண்டு வாழ்த்துகள் !
தமிழர்களுக்கு
மனநலம் , வாழ்க்கை குறித்து
எழுத்தாய் வெளிப்படு,
எல்லார்க்கும் பயன்படு
பயணத்தில்
சில தேவையற்ற குரைப்புகள்
ஒதுக்கி
எழுத்தாய் வெளிப்படு,
எல்லார்க்கும் பயன்படு
நீங்கள் யார் என்பதில் நீங்கள் தெளிவாக இருகிறிர்கள் . காமாஷி குங்குமமும் கம்யுனிச பார்வையும் சரியாகவே உணர்ந்து உள்ளிர்கள் . பிறர் கூறும் குறைகளுக்கு மறைமுகமாக நேரடியாக பதில் சொல்லும் துணிவை ரசிக்கிறேன் . மருத்துவம் உம தொழில் மனிதன் உம நிலை . நீங்கள் நீங்களாகவே இருக்க கொடுத்து வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துகிறேன் இன்று போல் என்றும் தென்றல் -- தென்றலாகவும் புயலாகவும் கருணை காட்டும் மழையாகவும் , கடுப்பு ஏற்றுவோற்கு வெள்ளமாக சீறி பாய்ந்தும் .!
ReplyDeleteருத்தரரின் பார்வை ருத்திர பார்வை அல்லவா இருக்கிறது. ருத்திரத்திர்க்கு காரணமானவர் அருகில் வந்தால் அதிக காயங்கள் நிச்சயம் உண்டு.
ReplyDeleteஒருவர் என்றும் கோவமே படமாட்டாரமாம் அவரிடம் ஒருவர் கேட்கிறார் நீங்க எப்பவுமே கோவமே படமாட்டிங்கலாமே எப்படி" என்றாராம் அதற்கு அவர் "ஆமாம் நான் கோவமே படமாட்டேன்". என்று சொல்லிருக்கிறார். கேள்வி கேட்டவர் "அதுஎப்படி உங்களால் முடிகிறது." என்றதுக்கு அவர், "அது என்னால் முடியும்" என்றார் மீண்டும் கேள்வி கேட்டவர் "சும்மா சொல்லாதிங்க சார் கோவபடாம எப்படி ஒருவரால் இருக்க முடியும்" என்றதுக்கு அவர்,. ஏ அதான் கோவ்பட மாட்டேன் என்று சொல்ட்றேன்லா என்ன சும்மா திரும்ப திரும்ப கேட்டு டென்ஷன் பண்ற இந்த இடத்தைவிட்டு கிளம்பு" என்றாராம்.என்றுமே எப்போதும் கோவபடாதவர்.....
இதைதான் ஓஷோ அவர்கள் அருமையாக விளக்குகிறார்.
"எல்லா அன்பும் உடனடியாக மறைந்து விடுகிறது. அன்பை பற்றிய எல்லா பேச்சுகளும் மேலோட்டமானவை பொருத்துகொள்ளுதலை பற்றிய எல்லா பேச்சுக்களும் அடி ஆழத்தில் பொருமையற்றவை."
ஓஷோவே மீண்டும் சொல்கிறார். சாதாரண மனிதனுக்கும் பையயத்தியதிர்க்கும் என்ன வித்தியாசம் என்றால் சாதாரணம் மனிதன் 99% நிலையில் இருப்பான். பைத்தியம் 100% நிலையில் இருக்கும் .
பொருத்தமற்ற கோவங்களும் நம்மை 100% அழைத்து சென்றுவிடும். அது ஒரு பெரிய சிரமமே கிடையாது.
Thank you.
ReplyDeleteஆத்திக , நாத்திக முன் தீர்மானங்கள் இல்லாமல் எழுதும் ஒரே பிரமுகர் நீங்கள்தான்..
ReplyDeleteமகிழ்ச்சியாக இருக்கிறது
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!
ReplyDelete//எழுத்தாய் வெளிப்படு, எல்லார்க்கும் பயன்படு.//
ReplyDeleteநல்லதொரு கோரிக்கை..
யாரயுமே உங்கள் ருத்ர வட்டத்திற்குள் தெளிவு செய்யாமலேயே தாண்டவம் செய்திருக்கிறீர்கள்..
ReplyDeleteஉங்கள் போக்கில் நீங்கள் போங்கள் உலகம் அதன் போக்கில் போகட்டும் .
ReplyDeleteDoctor I was one among the person who told that you should no get angry. But you have misunderstood me. I am saying if anyone gets angry, then we can constructively use them. Sorry If I have told anything wrong. I really love reading your blog ...
ReplyDelete