Tuesday, September 7, 2010

எங்கிருந்து வருகிறது இந்த ஆணவம்?


அடகு வைக்கப்பட்டு விட்டதா என் நாடு- என் அனுமதியில்லாமல்? என் சக மனிதனுக்கு உணவு தர முடியாது என்று எவன் சொல்வான், அதை எவன் விடுவான்? இதோ இங்கே என் தாய்த்திருநாட்டின் மூத்த குடிமகன், முதன்மை அரசியல் தலைவன் சொல்கிறான்- வீணாகட்டும் உணவு அதை ஏழைகளுக்குத் தர முடியாது என்று. பசிக்கு உணவில்லை என்றால் அதை வைத்துக் கொண்டு என்ன புடுங்கப்போகிறார்கள்? எப்படி வீணாக்காது அழிப்பது என்று யோசிப்பார்களாம்! தூ.
இன்று நேற்றல்ல இந்தத்திமிர். இதே பிரதமர் நிதியமைச்சராக இருக்கும் போதே ஆரம்பமாகியது இது. அப்போது குரல்கள் ஒலிக்காமல் இல்லை, ஆனால் செவிகள் தான் தயாராகவில்லை. முடிந்தால் இந்தப் பாடலையும் கேட்டுப்பாருங்கள்.
நேரமில்லாமல் பட்டினி இருப்பவர்கள் இன்று உண்டு, இணைய வாசகர்களும் அதில் உண்டு, ஆனால் நான் பணமில்லாததால் பட்டினி என்னவென்று பார்த்தவன்; போராடி   அந்த நிலையை வென்று விட்டதால் வலியை மறந்து விடவில்லை. உணவு இருக்கிறது கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறான், நாம் சும்மா இருக்கிறோம்.
யாருக்காக இந்தச் சவடால்? எதற்காக இந்த நாடகம்? யார் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இந்த வசனம்?
காலையில் பத்திரிக்கை படித்த உடனே என் காஃபி கசந்தது. ஆனால் நான் என் வேலை பார்க்கப் போய் விட்டேன். வேலை முடித்து வந்தவுடன் மாதவராஜ் எழுதியதைப் படித்தேன். வயிறு மீண்டும் எரிந்தது, எழுத ஆரம்பித்தேன். வசதியாக சௌகரியமாகச் சத்தமிடுவது அல்ல புரட்சி; அப்படி மெத்தனத்தோடு வருவதல்ல கோபம். 
என்ன செய்வது நான் ஒரு நடுத்தரம் என் நாளைக்காக என் இன்றைச் செலவிடும் சாதாரணம். நம் நாளைக்காக இன்று வெகுண்டெழுவோருடன் சேர்ந்து விட்டால் இன்றைய என் அற்ப சந்தோஷங்கள் என்னாவது? அதனால் இணையவெளியில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, தாமிரபரணியை மறந்து விட்டு, கோக் குடிக்கலாமா என்று யோசிக்கிறேன், வெட்கமில்லாமல்.

கேட்க இதுவும்

படிக்க இதுவும்

47 comments:

  1. நமீதாவுக்கு ஏதாவது நடந்தால் துள்ளியெழுதும் பதிவுலகம் இதற்கு மௌனம் சாதிப்பது ஏன்?

    ReplyDelete
  2. புரட்சிக்கு குறைவாக இனி எதை ஏற்ப்பது

    ReplyDelete
  3. இன்று வேகமாக பொங்கி எழுவோம், தேர்தல் அன்று எங்கள் வாக்குகளுக்கு யார் அதிகம் விலை தருவாரோ அவருக்கே நாங்கள் வாக்குகளை விற்போம்/விற்கிறோம்.

    வாக்குகளுக்கு அதிக விலையை கொடுத்தால் இந்த காக்கைகள் ஓடி வந்து விடும் (அங்காடி தெரு வசனம்)என்பதை சிங் நன்கு அறிந்து இருக்கிறார்.

    ReplyDelete
  4. this was seen on facebook.



    Kavitha Sornavalli
    ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்குவது குறித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டாம்;மன்மோகன்
    சிங்:- என்ன பாஸ் இது....கோடி கோடியா தானியங்களை தேடி தேடி வீணாக்குவோமே தவிர ஏழைகளுக்கு மட்டும்
    இலவசமா கொடுக்க மாட்டோம்னு சரத் பவார்ல இருந்து நீங்க வரைக்கும்
    இம்பூட்டு பிடிவாதம் காட்டுறீங்க?இதே பிடிவாதத்தை அமெரிக்க
    கிட்ட, பாகிஸ்தான் கிட்ட , ஏன் பக்கத்துல வாலாட்டிட்டு இருக்ற இலங்கை
    கிட்ட காட்டுங்களேன் பாப்போம்

    ReplyDelete
  5. பிரதமர் பதவியை இலவசமாய்ப் பெற்றவர், ஏழைகளுக்கு உணவை இலவசமாய்த் தருவது தவறு என்கிறார். நாட்டில் 100க்கு 37 பெயரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வைத்துக்கொண்டு கடந்த ஆறு ஆண்டுகளாக மாவோயிசுடுகள் இந்த நாட்டின் பிரச்சனை என்கிறார். எலிகளை உணவுதானியங்களைக் கொடுப்பேன், ஆனால் மக்களுக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறது கல்வி உதவித்தொகை பெற்ற படித்த இந்தப் பெருச்சாளி!

    ReplyDelete
  6. ப‌சியைப் போல் கொடிய‌ த‌ண்ட‌னை வேறேது? ஆட்சி அதிகார‌ம் கையில் வ‌த்திருக்கும் கார‌ண‌ங்க‌ளால் ம‌னிதாபிமான‌ம‌ற்று சொல்லியிருக்கும் ம‌ன்மோக‌ன் 5 ந‌ட்ச‌த்திர‌ உண‌வ‌க‌த்தில் சாப்பிடலாம். எம்பி ச‌ம்ப‌ள‌ உய‌ர்வுக்கு ம‌க்க‌ள் காட்டாத‌ எதிர்ப்பிலிருந்து ஆர‌ம்ப‌மாகுது இந்த‌ எதேச்சிகார‌ம்.

    ReplyDelete
  7. இந்த ஆணவம் நம் அலட்சியத்தில் இருந்து ஏன் வந்திருக்க கூடாது?

    ReplyDelete
  8. இந்த ஆணவம் நம் அலட்சியத்தில் இருந்து ஏன் வந்திருக்க கூடாது?

    ReplyDelete
  9. oh I forgot to notice this "Your comment has been saved and will be visible after blog owner approval."

    ReplyDelete
  10. என்ன ஒரு அலட்சியம்...உணவுப்பொருளுக்கான தேவை இருக்கும்போது


    கொதிப்படைகிறது...

    :((

    ReplyDelete
  11. இந்த கருத்தை சொன்ன -பிரதமர் -பதவி விலக வேண்டும் !!!

    அதன் ஒரு துளி புரச்சியாய், பதிவர்கள் அனைவரும் -ஒரு நாள்

    பதிவு இட வேண்டும் !!

    வேறு எந்த பதிவும் இட கூடாது !!!

    இதை எதிர்த்து -ஜனாதிபதிக்கு -தந்தி அனுப்ப பதிவு எழுதவூம் !!

    த சேகர்

    ReplyDelete
  12. தானியங்கள் வீணாவதை எப்படி குறைப்பது தவிர்பது என்பதை பற்றியும் சிந்திக்கலாம்

    ReplyDelete
  13. ஒரு பக்கம் கோடி கோடியாக ஊழலில் மக்கள் பணம் சுருட்டப்படுகிறது. இன்னொரு புறம் தானியங்கள் யாருக்கும் பயனின்றி அழுக விடப்படுகிறது. "தானியங்களை வீணாக்காதீர்கள், ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுங்கள்" என்று உச்ச நீதி மன்றம் சொன்னது அறிவுரையல்ல, கட்டளை என்ற பிறகும் "உங்க வேலையைப் பாருங்க"-ன்னு சொன்னா, இந்த நாட்டில் சாமான்யனின் குரலுக்கு என்ன மரியாதை இருக்கும்?

    வெட்கக் கேடு.

    ReplyDelete
  14. //நமீதாவுக்கு ஏதாவது நடந்தால் துள்ளியெழுதும் பதிவுலகம் இதற்கு மௌனம் சாதிப்பது ஏன்?//

    நமீதாவுக்கு ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் எழுத்துக்களை சேர்த்து வைத்துக்கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete
  15. தான் உண்டு தன் வேலை உண்டு ....... தனக்கு மட்டும் வாழ்வு என்ற குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே பெரும்பாலான மக்கள் வந்து விட்டதை காட்டுகிறது. :-(

    ReplyDelete
  16. மன நலம் பாதிக்கப் பட்டவர்கள் பேசுவதைப் பெரிதுபடுத்த வேண்டுமா?

    ReplyDelete
  17. நீங்கள் சொல்வது போல் இந்தக் கோபம் எல்லோருக்கும் வரவேண்டும்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. உணவு பொருட்கள் மட்டுமல்ல...

    முதலாளித்துவத்தை தூக்கி கொண்டிருக்கும் மன்மோகன் போன்ற அதிகார அடிமைகளின் மூளை மற்றும் இதயமும் அழுகி இருக்கிறது போல் உள்ளது...

    மக்கள் பட்டினியால் சாகும் நாட்டில் முதலாளித்துவம் வாழ வைத்து கொண்டிருப்பதாக சொல்லும் மக்களின் உடலும் அழுகி கொண்டே இருக்கும்...

    ReplyDelete
  19. தனி யொருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று வெள்ளையன் காலத்திலேயே முழங்கினான் பாரதி. சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகளாகியும் பட்டினி சாவுகளை தடுக்கமுடியாத இந்த அரசியலாளர்கள்,உழைப்பில் கிடத்த தானியங்களை தூக்கி எறிவதற்கு முன்னணியில் நிற்க்கிறார்கள்

    ReplyDelete
  20. பொருளாதார மேதையான இந்தப் பிரதமர் அறிமுகப்படுத்தி, அடுத்து வந்த ஆட்சியாளர்களால் அச்சுப் பிசகாமல் பின்பற்றப்பட்டு வந்ததில் பெரு்ம் பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் இந்தியாவில், இன்னமும் 37 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதேன்?

    ReplyDelete
  21. நீங்கள் இறையாண்மையை ஏற்கும் இந்தியக் குடிமகனாக இருந்தால் இப்படியெல்லாம் எழுதிக் கொண்ருக்க மாட்டீர்கள்

    ReplyDelete
  22. These guys forget their roots and got transformed by their so-called education with the orientation of western capitalists; who even started believing themselves as westerners although day in and out ,they claim to be Indians in thinking. Basic humane nature of our country has been smoked out of their conscience , and these are the ramifications.
    I am an apolitical man and do not stick with any selfish attitude and orientation of any party or any organisation.May be this is the reason why I am a lower middle class man despite the positions I held.Dr, I am one with your writing and its outbursts.

    ReplyDelete
  23. உண்மையில் ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுதல் என்பது.. அந்த பொருளினை விட அதிக செலவு பிடிக்கும்.

    அப்படியே அனுப்பினாலும்.. இடையே நடக்கும் deprication

    அதை கருத்தில் கொண்ட சுருக்கமே பிரதமர் கூறியது....

    அரசாங்க வேலைகளில் உச்சநீதிமன்றம் இது போன்று தலையிடுவது சரியில்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
  24. Is it not possible to ask Dr. Manmohan Singh using Right For Information, why it can not be given. Any reasons behind so.

    Lets hear from him before jumping to conclusions.

    ReplyDelete
  25. another way of saying this-
    http://konjamvettipechu.blogspot.com/2010/09/blog-post_07.html

    ReplyDelete
  26. சட்டம் ஒரு இருட்டறை...நாமெல்லாம் எது சொன்னாலும் தங்குவோம் என்று பிரதர் நினைக்கிறார்..

    ReplyDelete
  27. நம் நாளைக்காக இன்று வெகுண்டெழுவோருடன் சேர்ந்து விட்டால் இன்றைய என் அற்ப சந்தோஷங்கள் என்னாவது? அதனால் இணையவெளியில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, தாமிரபரணியை மறந்து விட்டு, கோக் குடிக்கலாமா என்று யோசிக்கிறேன், வெட்கமில்லாமல்...........இது தானே இன்று பெரும்பாலானவர்களின் நிலையாக இருக்கிறது.......அங்கிருந்துதான் இந்த ஆணவம் வருகிறது.......நன்றி சார்.

    ReplyDelete
  28. நமீதாவுக்கு ஏதாவது நடந்தால் துள்ளியெழுதும் பதிவுலகம் இதற்கு மௌனம் சாதிப்பது ஏன்?
    ///

    NAMITHA VA PADRI PODDA ODDU KIDAIKKUME ATHUKKUTHAAN

    ReplyDelete
  29. "எங்கிருந்து வருகிறது இந்த ஆணவம்?"
    //////

    MANUSANA ILLAMA JATHI MATHAM ARASIYAL KADCHI APPADINU MANUSAN PIRINCHU KIDAKKUM VARAI ITHU IPPADITHAN IRUKKUM

    ReplyDelete
  30. @BSudakkar
    There is no need for RTI, he himself has stated that it is not possible to cater the needs all the people under below poverty line(say 37%, not sure on the statistics)

    @D.R.Ashok
    நீதி மன்றம் தலையிடவில்லை என்றால்; இவர்களை வேறு யார் கேள்வி கேட்பது, நீங்களும் நானுமா?

    The news is foodgrain are rotten in open storage. This happen only after stocks flooded the covered storage. some times covered storage exceeds 130% and results only in damaging the grains. Buffer storage for 3 years is well sufficient and procurement & storage morethan the buffer storage and allotments to states under PDS and other programs is not in national interest. It is all politics, no matter which party rules the centre. Just to pacify collision in punjab, BJP government forced FCI to procure sub standard wheat.
    எல்லாம் ஏழைகள் வயித்தில் அடிக்கும் வேலை.

    Procurement is source of income for politicians and middlemen. If you stop procuring internally, Mr.Sharad Pawar will start importing.

    I think supreme court order is appropriate and government should think on some schemes to deliver the foodgrains(which will in course of time become unfit for consumption) free of cost atleast to a section of people in below poverty line if not to all.

    ReplyDelete
  31. பாடல் கேட்டேன். மிக அருமை.
    நரசிம்மராவுக்குப் பதில் மன்மோகன் சிங். வேறெந்த மாற்றமும் இல்லை.
    :(

    ReplyDelete
  32. தீபா அப்போது இதே மன்மோகன் நம் நிதியமைச்சர்!

    ReplyDelete
  33. ghost writer என்று ஒரு படம். பாருங்கள், நாம் நாட்டில் இப்படி நடந்து வருகிறதா என்றும் யோசியுங்கள்.

    ReplyDelete
  34. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுப்பவன் இருக்க தானே செய்வான். ஏமாளியாக இருப்பது நம் குற்றம் தானே? குறை கூறுவதை தவிர்த்து விட்டு, மாற்றத்தை நம்மில் இருந்து ஏன் நாம் முதலில் ஆரம்பிக்க கூடாது? சராசரி வாக்கு பதிவு 60 % என்றால் அதில் 80 % வாக்காளர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தானே? பணத்துக்காகவோ அல்லது ஏதோ ஒரு வசீகரத்துகாகவோ வாக்களிக்கும் இவர்கள் விழிபுற்றால் எல்லாம் மாறி விடாதா?

    ReplyDelete
  35. மக்களுக்காக தான் ஆட்சி , கட்சி , அரசு எல்லாம் , மக்களுக்கு பயன் படாத அரசு இருந்து என்ன பிரயோஜனம் ? யாரும் இதற்கெல்லாம் கவலை படுவதாக தெரியவில்லை , சமூக பார்வை என்பதே இல்லாமல் சுய முனைப்பும் ,சுய நலமும் எல்லா இடங்களிலும் நிறைந்து விட்டன .

    ReplyDelete
  36. மத்திய உணவு மந்திரி ஏழு கோடி மதிப்புள்ள உணவுதான் வீணாய் போனதாம் , அதை மற்றவர்கள் மிகைபடுத்தி கூறுவதாக கூறுகிறார் , அப்ப ஏழு கோடி மதிப்புள்ள உணவு வீணாகிப் போனால் பரவா இல்லையா ? வெட்கக்கேடு

    ReplyDelete
  37. பொருளாதார அறிவற்ற அறிவிலி என்பார்களோ என்று, எதையும் எழுதுவதற்கு பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் பாமரன் கேட்கிறேன்.
    உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு, இவற்றிற்காக மட்டுமே "தாய்த்திருநாட்டின்" சராசரி குடிமக்கள் உழைக்கிறார்கள்.
    இதில் பொழுதுபோக்கினை அடிப்படைத் தேவையில்லையென்று விலக்கி விடுவோம்.
    தனக்குத் தேவையான, உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், இவற்றிற்குத் தேவையான அளவு உழைக்காத எத்தனை பேர் நம் இறையாண்மை பெற்ற "தாய்த்திருநாட்டில்" உள்ளனர்?
    அந்தத் தேவைகள் நிறைவேறாத மக்களின் எண்ணிக்கை என்ன?
    பொருளாதார மேதை, மன்மோகன் சி்ங் அவர்களே!
    இந்த இரண்டு எண்ணிக்கையும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்?
    இந்தக் கணக்கீடுகளைச் செய்ய நிதியமச்சருக்கு நேரமில்லையா? அல்லது தகுதியான நிபுணர்கள் நாட்டில் இல்லையா?

    சரி விடுங்கள். இதையெல்லாம் அழுது தீர்க்க சராசரிக் குடிமகனுக்கு 49-O என்ற வசதி இருக்கிறது என்பது என் போன்ற படித்த பாமரனுக்கு மட்டும்தான் தெரிகிறது. பாதிக்கப்பட்ட இவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதற்கு ஒரு விழிப்புணர்வு விளம்பரம் செய்ய கருவூலத்தில் காசில்லையா?

    ஒட்டுப் போடுவது என் கடமை. அதை இரகசியமாக செய்ய எனக்கு உரிமை உண்டு, ஆனால் 49-O பயன்படுத்த பூத் அதிகாரியிடம் பல்லைக் காட்ட வேண்டுமா?. அதை இரகசியமாகச் செய்ய வசதி செய்ய மென்பொருள் வல்லுநர்கள் கிடைக்கவில்லையா? பயமா? பலரும் 49-O பயன்படுத்தி விடுவார்கள் என்றா?

    ஆண் பிள்ளை அரசியல்வாதி எவனாவது அல்லது எவளாவது வரும்வரை நான் பொத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான். அவ்வளவுதான் என் ஆண்மை.

    ReplyDelete
  38. பொருளாதார அறிவற்ற அறிவிலி என்பார்களோ என்று, எதையும் எழுதுவதற்கு பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் பாமரன் கேட்கிறேன்.
    உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு, இவற்றிற்காக மட்டுமே "தாய்த்திருநாட்டின்" சராசரி குடிமக்கள் உழைக்கிறார்கள்.
    இதில் பொழுதுபோக்கினை அடிப்படைத் தேவையில்லையென்று விலக்கி விடுவோம்.
    தனக்குத் தேவையான, உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், இவற்றிற்குத் தேவையான அளவு உழைக்காத எத்தனை பேர் நம் இறையாண்மை பெற்ற "தாய்த்திருநாட்டில்" உள்ளனர்?
    அந்தத் தேவைகள் நிறைவேறாத மக்களின் எண்ணிக்கை என்ன?
    பொருளாதார மேதை, மன்மோகன் சி்ங் அவர்களே!
    இந்த இரண்டு எண்ணிக்கையும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்?
    இந்தக் கணக்கீடுகளைச் செய்ய நிதியமச்சருக்கு நேரமில்லையா? அல்லது தகுதியான நிபுணர்கள் நாட்டில் இல்லையா?

    ReplyDelete
  39. சரி விடுங்கள். இதையெல்லாம் அழுது தீர்க்க சராசரிக் குடிமகனுக்கு 49-O என்ற வசதி இருக்கிறது என்பது என் போன்ற படித்த பாமரனுக்கு மட்டும்தான் தெரிகிறது. பாதிக்கப்பட்ட இவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதற்கு ஒரு விழிப்புணர்வு விளம்பரம் செய்ய கருவூலத்தில் காசில்லையா?

    ஒட்டுப் போடுவது என் கடமை. அதை இரகசியமாக செய்ய எனக்கு உரிமை உண்டு, ஆனால் 49-O பயன்படுத்த பூத் அதிகாரியிடம் பல்லைக் காட்ட வேண்டுமா?. அதை இரகசியமாகச் செய்ய வசதி செய்ய மென்பொருள் வல்லுநர்கள் கிடைக்கவில்லையா? பயமா? பலரும் 49-O பயன்படுத்தி விடுவார்கள் என்றா?

    ஆண் பிள்ளை அரசியல்வாதி எவனாவது அல்லது எவளாவது வரும்வரை நான் பொத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான். அவ்வளவுதான் என் ஆண்மை.

    ReplyDelete
  40. அழுகும் உணவுப் பொருட்கள் குறித்து உச்ச நீதி மன்றம் சொல்லி இருப்பதன் சாராம்சம் இதுதான்.

    " வீணாகும் உணவுப் பொருட்களை ஒரு தற்காலிக அடிப்படையில் ஏழைகளுக்குக் கொடுங்கள்"

    நம் பிரதமர் இதை எப்படிப் புரிந்துகொண்டார் எனபது எனக்குப் புரியவில்லை.

    என் வரையில் இந்தத் தீர்ப்பின் அர்த்தம் இதுதான்.

    "உங்களிடம் (அரசு) உணவு சேமித்து வைக்கப் போதுமான வசதிகள் இல்லை. அதனால் உணவு கெட்டுப் போகிறது. அது வீணாகப் போவதற்குப் பதில் உணவு இல்லாதவர்களுக்குக் கொடுங்கள். இதுவும் தற்காலிக அடிப்படையிலேயே. நீங்கள் போதுமான கிடங்குகள் கட்டி முடித்ததும் அதை நிறுத்திக் கொள்ளலாம்".

    இந்தத் தீர்ப்பின் நியாயத்தை யாரும் மறுக்க முடியாது என்றே உணர்கிறேன்.

    இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் கொள்கை ரீதியான முடிவுகளில் உச்ச நீதி மன்றம் தலையிட வேண்டாம் என்று பிரதமர் கேட்டுக் கொள்வதுதான். போதுமான உணவுக் கிடங்குகள் இல்லையென்பதால் வீணாகப் போகக் கூடிய உணவை எப்படி கையாள்வது என்ற நடைமுறை அறிவுரையை உச்ச நீதி மன்றம் சொல்லியுள்ளது. பார்க்கப் போனால் இந்த யோசனை அரசாங்கத்திற்கே இருந்து இருக்க வேண்டும். அதை விட்டு விட்டுச் சொல்பவரின் மேல் பாய்வது, வடிவேல் சொல்வது போல், "என்ன சின்னப் புள்ள தனமா இருக்கு"

    இந்தச் சிக்கல் வேறு சில கிளைக் கேள்விகளை எழுப்புகிறது. அரசுக் கொள்கைகளில் நீதி மன்றம் தலையிடக் கூடாது என்றால்:

    1 . தவறான அரசுக் கொள்கைக்கு எதிராக மக்கள் யாரை நாடுவது?

    2 . உச்ச நீதி மன்றம் ஒரு விஷயத்தில் தலையிடக் கூடாது என்று அரசு சொல்லுமானால் அரசுக்கு எதிரான வழக்குகளில் என்ன மாதிரியான தீர்ப்புகளை எதிர்பார்க்க முடியும்?

    3 . நீதி மன்றங்கள் தன்னிச்சையாக இயங்கக் கூடியவை என்ற நம்பிக்கை என்னாகும்?

    வாழ்க இந்திய ஜனநாயகம்!

    http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_11.html

    ReplyDelete
  41. அக்காலத்தில் கொடுங்கோல் மன்னர்களும் அவர்களுடன் கூட்டுக்கள்ளர்களாக பிரபுக்களும் ஆண்டார்கள். இன்று அவர்களது பெயர் மட்டும் பிரதமர் என்றும் அமைச்சர்கள் என்றும் மாறியுள்ளது. சுரண்டல் இப்போதும் தொடர்கிறது. புலம்பல்களும்.

    ReplyDelete
  42. The ref here below explains as to why this is done deliberately;

    http://tjsgeorge.blogspot.com/2010/09/starve-this-is-ncredible-ndia.html

    This is by one of the well known blogger and writer.

    ReplyDelete
  43. கிடங்கில் உள்ள தானியங்களை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று பிரதமர் கூறியதை பற்றிய கருத்தை தவறாக அர்ப்படுத்துவதை தவிர்த்து அதற்காக அவர் சொன்ன காரணத்தையும் அறிந்து கொள்ள முயற்ச்சியுங்கள். எம். பீ க்களுக்கு சம்பள உயர்வை கொண்டுவந்தபோது எதிர்கட்சிகள் ஒருவர் கூட [கம்யுனிஸ்ட் கட்சியை தவிர] வேறு ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்காதது சுயநலத்தை காண்பிக்கவில்லையா, வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோ தெரியல

    ReplyDelete
  44. ரத்னா மேடம்!
    நாங்கள் தவறாகப்பரிந்து கொண்டிருக்கக்கூடும். சரியாகப்பரிந்துகொள்ள ஒரு சுட்டி (link) தரவும்.

    ReplyDelete
  45. நாம் அதையெல்லாம் கண்டுக்க மாட்டோம். நமக்குத்தான் இந்திரன் ரிலீஸ் ஆயிடுச்சே.
    இதையெல்லாம் பார்க்கும்போது பயங்கர கோவம் வருது. அனா எப்படி யாரிடம் சொல்வதென்று புரியல. என் பங்குக்கு நான் என்ன பண்ணனும்..? சொல்லுங்க.

    ReplyDelete