Friday, March 12, 2010

தோட்டா தரணி, கலைஞர்.



இவரது ஓவியங்களில் ஒரு வேகம் இருக்கும், வண்ணங்களில் நேர்த்தியும் கம்பீரமும் இருக்கும். மிகச் சிறந்த ஓவியரான இவரை ஒரு திரைப்படக் கலை இயக்குனராகவே பலரும் இப்போது அறிந்திருக்கிறார்கள். ஒரு கலை இயக்குனராகவும் காட்சி ஜோடனைகளில் இவர் பல அற்புதங்களை உருவாக்கியிருப்பது நிஜம். 

இந்தச் சிறந்த கலைஞனின் உழைப்பு இப்போது தமிழ்நாடு அரசுக்கும் பயன்படுகிறது. புதிதாய் கட்டப்படும் சட்டசபைக்குள் ஓவியங்கள்   இவரை வரையச் சொல்வார்களா என்று தெரியவில்லை, ஆனால் இப்போது அந்தக் கட்டிடத்திற்காகப் பணியாற்றிவருகிறார்.
நாளை சென்னைக்கு சோனியாவும் பிரதமரும் வருகிறார்களாம். புதிய சட்டசபை வளாகத்தைத் திறந்துவைக்கப் போகிறார்களாம். 
கட்டி முடிக்காத கட்டிடத்தை அவர்கள் திறந்து வைக்கும் போது உள்ளே எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, 
ஆனால் வெளியே அழகு குறையாமல் காட்சி தர வேண்டுமாம். 
அதனால் கட்டப்படாத கோபுரத்தை ஒப்புக்காக தற்காலிகமாக அமைக்கப் போகிறார்களாம்! 
இப்படி ஒரு பொய் கோபுரம் உருவாக்க இரண்டு கோடி ரூபாய் செலவு.
தரணியின் கைவண்ணத்தில் அது எப்படியும் அழகாகத்தான் காட்சி தரும். எப்படியும் தரணியின் கீழே தொழிலாளர்கள் கொஞ்சம்பேர் பிழைக்கப் போகிறார்கள் எனும் ஆறுதலுக்காக இந்த ஆடம்பரத்தை சகித்துக்கொள்வதா?
http://timesofindia.indiatimes.com/articleshow/5631692.cms
யாருக்காக இந்த நாடக அரங்க நிர்மாணம்? எவனாவது ஜோஸ்யம் சொல்லியிருக்கிறானா இந்தத் தேதியில்தான் இது திறக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்த அரண்மனையில் ராஜகுடும்பத்தின் ஆட்சி தொடரும் என்று?
கட்ட ஆரம்பிக்கும்போதே தெரியாதா இத்தனை மாதங்கள் ஆகும் என்று? கட்டி முடித்துக் கூப்பிடும்வரை டில்லியில் செல்வாக்கு நிலைக்காதா? அவசரமாகக் கட்டுவது கிடக்கட்டும், முழுமையாகக் கட்டாமல் நல்ல நாள் என்றுகூட திறப்பு விழா நடக்கட்டும். இன்னும் கட்டவில்லை என்று சொன்னால் சோனியாவின் முன் அசிங்கம் என்றுதான் இந்த ஜோடனையா? அந்த அம்மையார் பத்திரிகை படித்து இதைத் தெரிந்து  கொள்ள மாட்டார்கள் என்று இவர்களுக்குத் தெரியுமா?
இரண்டு கோடி! சென்னையில் உள்ள மிகப்பெரிய அரசு மனநலக் காப்பகத்தில் பல கட்டிடங்கள் மிகவும் பழுதுற்றுக் கிடக்கின்றன, அவற்றைச் சரி செய்ய இந்த பொய் கோபுரம் கட்டும் செலவு கூட ஆகாது.
நாம் வெட்கப்பட்டால் என்ன வருத்தப்பட்டால் என்ன?  மன்னர் மனம் குளிர்ந்தால் போதாதா? சாபங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது- நாசமாய்ப் போகட்டும்.

56 comments:

  1. மக்களின் வரிப்பணம் தானே எப்படி போனால் இவர்களுக்கு என்ன?

    ReplyDelete
  2. புதிய சட்டமன்ற வளாகத்தில் நிதிநிலை அறிக்கை தக்கல் செய்த்த ”முதல்”வர். பழைய சட்டமன்றத்தின் கடைசி முதல்வர், போன்ற புகழ்களுக்காக இந்த ஏற்பாடோ? விரைவில் ஓய்வு!!! பெறப்போவாதாக வேறு சொல்லி இருக்கிறாரே.

    ReplyDelete
  3. Well said.. congrats... this is what in every one mind..this govt wasting lost public money for this kind of things and for cinema peoples...

    ReplyDelete
  4. பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னுவது தானே சாத்திரம்.

    ReplyDelete
  5. இதில் என்ன தவறு கண்டீர்கள்....புரியவில்லை.....

    ReplyDelete
  6. நாசமாய்ப் போகட்டும்...

    ReplyDelete
  7. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

    ReplyDelete
  8. 2 கோடியா??
    செட் போட்டு ஒரு திறப்புவிழா...
    இதெல்லாம் ஒரு பொழப்பா...ச்சே

    அருமையான பகிர்வு டாக்டர்.. நன்றி

    ReplyDelete
  9. tamilil elutha mudiyavillai endralum ithan enathu comment... ilaya suriyanai matham piditha yanai mithikattum...

    ReplyDelete
  10. Sir I agree with you. Well lets hope at least our minister change when they enter New Assembly Complex ...

    ReplyDelete
  11. நாம் வெட்கப்பட்டால் என்ன வருத்தப்பட்டால் என்ன? மன்னர் மனம் குளிர்ந்தால் போதாதா? சாபங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது- நாசமாய்ப் போகட்டும்.


    .........வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  12. மன்னராட்சி, மக்கள் பணம். கடை தேங்காய் வழி பிள்ளையாருக்கு. ஒட்டு போட்டோம் திருவோடு ஏந்தவா ?

    :-(
    நா.க.மலர்ச்செல்வன்

    ReplyDelete
  13. என்ன செயவது? விளம்பரம் முக்கியாமாகப் படுகிறது. காங்கிரஸ் ஜெ பக்கம் போகுமோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

    ReplyDelete
  14. பிரகாஷ்March 13, 2010 at 6:29 AM

    "நாசமாய் போகட்டும்" உங்களைப் போன்றவர்கள் வயிறெரிந்து சொன்னால் பலித்து விடும்.

    ReplyDelete
  15. ///நாம் வெட்கப்பட்டால் என்ன வருத்தப்பட்டால் என்ன? மன்னர் மனம் குளிர்ந்தால் போதாதா? சாபங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது- நாசமாய்ப் போகட்டும்.///

    கடை தேங்காய் வழி பிள்ளையாருக்கு.

    உங்கள் பதிவுகளிலேயே எனக்கு ரொம்ப பிடித்த பதிவு இதுதான்.

    ReplyDelete
  16. "நாசமாய் போகட்டும்" வேண்டாம் இந்த கோபம். இது 'அவர்கள்' தனிச் சொத்தாக இருந்தால் பரவாயில்லை. இது சட்ட சபை வளாகம். வாழ்த்தி விடுங்கள். அணையப் போகும் விளக்கு கொழுந்து விட்டு எரிவது போல் அநியாயங்கள் பெருகி விட்டன.

    ReplyDelete
  17. DR. AYYA, AVANGALUKKU THERIYUTHU POLA, ADUTHA AATCHI NAMMATHU ILLENU.

    ReplyDelete
  18. அவரிடம் உருப்படியாக இருந்தது மூளை ஒன்று தான் அதுவும் முடியுடன் சேர்ந்து கொட்டி விட்டது பாவம்
    ........ நாசமாக எல்லாம் போக வேண்டாம் 110 வயசு வரைக்கும் ஆட்சிக் கட்டில்ல இருந்து அவதிப் படனும் தள்ளாத காலத்துல வாழ்க்கை முழுக்க எதை தேடி பேயாய் பறந்தாரோ அதுவே வதைக்கட்டும் !

    ReplyDelete
  19. "நாசமாய் போகட்டும்"

    :))

    ReplyDelete
  20. ..// சாபங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது- நாசமாய்ப் போகட்டும். //..

    சட்ட மன்ற வளாகமா?
    சட்ட சபையில இருக்குறவங்களா??
    இல்ல
    நம்மள(?) மாதிரி
    அப்பாவி(??) பொது மக்களா???

    ReplyDelete
  21. :(
    //சென்னையில் உள்ள மிகப்பெரிய அரசு மனநலக் காப்பகத்தில் பல கட்டிடங்கள் மிகவும் பழுதுற்றுக் கிடக்கின்றன, அவற்றைச் சரி செய்ய இந்த பொய் கோபுரம் கட்டும் செலவு கூட ஆகாது.//

    ReplyDelete
  22. When it will get change..Its the continuity from long time,we only sufferings..No curses make changes..

    ReplyDelete
  23. சாபங்கள் இன்னும் பிற கருணாநிதியின் நிலைப்பாடுகள்,சூழ்ச்சிகள் எல்லாம் கால வெள்ளத்தில் மறந்து போய் விடும்.நின்று பெயர் சொல்பவை வள்ளுவர் கோட்டம்,திருவள்ளுவர் சிலை,இன்றைய சட்டசபை திறப்பு விழா.

    ReplyDelete
  24. //கட்ட ஆரம்பிக்கும்போதே தெரியாதா இத்தனை மாதங்கள் ஆகும் என்று? //

    கேட்கப்பட வேண்டிய கேள்வி.வளைகுடா நாடுகளின் வரைபட உள்கட்டமைப்பு மாற்றங்களுக்கு கட்டிடங்கள் ஒரு முக்கிய காரணம்.ஒரு கட்டிட அஸ்திவாரம் துவக்க காலத்திற்கு முன்பே டெண்டர் நிர்ணயமாக மொத்த செலவு,கட்டி முடிக்கப்பட வேண்டிய காலம்,கட்டிடத்தில் உபயோகமாகும் பொருட்கள்,தயாரிப்பாளர்கள்,மின்சாரம்,நிலப்பரப்பு,கட்டிட வேலைகள் பயணிகளின் பயணத்தை பாதிக்காமை,தொழிலாளர்கள் எண்ணிக்கை,சுற்றுச்சூழல் பாதிக்காமை இன்னும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு அது சரியாக கடைப்பிடிக்க படவும் செய்கிறது.

    குறிப்பிட்ட காலத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்படாமை நிர்வாக ஊழல்களை வெளிக்கொண்டு வருகிறது.மேலும் அரசியல் சுயநோக்காக திறப்பு விழா என்பதும் தெளிவாகிறது.

    இவைகள் எல்லாம் நமக்கு பழக்கப்பட்டு விட்ட காரணத்தாலும்,விமர்சிக்க மட்டுமே இயலும் என்பதாலும்,தமிழக தலைநகரின் பெயர் சொல்லும் அடையாளமாக சட்டமன்றம் நிலைத்து நிற்க போவதாலும் குறைகளிலும் நிறையாக கட்டிட திட்டத்தை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  25. ஆட்சியிலிருப்போர் தவறு செய்யும் போது மக்களின் சார்பாக எதிர்க்கருத்தை உரத்து வைக்க வேண்டிய எதிர்க்கட்சி சுரண்டுவதற்கு வழி இருக்கும் போதுதான் தான் செயல்படுவேன் என்று வாளாவிருப்பதும்,ஆட்சியிலிருப்போர் இப்படிக் மோனக்கனவில் நினைத்தது போல நடப்பதும்,நாம் ஜனநாயகத்தில்தான் வாழ்கிறோமா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  26. புது கட்டிடத்துக்கே செட்டு போட்ட தான தலைவனுக்கு பாராட்டு விழா! அனைவரும் வருமாரு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொல்!கிறோம்.

    வரமுடியாதவர்களுக்காக உங்கள் வீட்டு கொலைஞர் தொல்லைக்காட்சியில் இந்த கன்றாவியைக் காண ஏற்பாடு செய்யப்படும்.

    ReplyDelete
  27. நாசமாய்ப் போகட்டும்.

    ReplyDelete
  28. யார் எப்படி போனால் என்ன. அவர் புகழ் வரலாற்றில் கிருக்கப்பட்டால் சரி. உங்களோடு சேர்ந்து வைத்தெரிச்சலை நானும் பங்கு போட்டுக்கொள்கிறேன்.

    அன்புடன்
    ram

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  29. ஹூம். நீங்கள் சொல்லிய விஷயத்தைதான் டீக்கடையிலிருந்து வங்கி வரை பேசிப் பேசி மாய்ந்து கொண்டிருக்கிறோம் நாள் நட்சத்திரம் பார்த்து தான் இதெல்லாம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள ரொம்ப ஒண்ணும் மெனக்கெட வேண்டியதில்லை. இவர்களிடம் மற்ற அறிவுஜீவிகள் தங்கள் வாய்ச்சொல் வீரத்தைக் கூட‌ காட்ட மாட்டார்கள் போலும்...

    அதென்ன, பொதுவில் மன்னிப்பு கேட்ட பின்னும் சூடு குறையாமல் ஜெய்ராம் வீட்டில் கல்லெறிவது, கூழைக் கும்பிடு போட்டு விட்டு பின்னர் பழியாய்க் கிடந்த‌ ஆசிரமத்தை எரிப்பது என்பதெல்லாம் நம்மூரில் வீரம் என்றாகி விட்டது? அதிகாரத்தில் இருப்பவர்களிடம் காட்டட்டுமே, இந்த சுரணையையும் வீரத்தையும்.

    ஒரு விஷயம். இது சும்மா தகவலுக்காக. நீங்கள் படித்திருப்பீர்கள் என்றுதான் நினைக்கிறேன். ஒன்று, இந்த வார 'தி வீக்' பத்திரிகையின் கவர் ஸ்டோரி. ஓவியர் ஹூசைன் லெஜென்டாம். இந்தக் குடியுரிமை விஷயத்திற்குப் பின் அவர் சகாப்தமாகி விட்டார். என்னத்த சொல்ல...இங்கு எல்லாமே extremes ஆகத்தான் இருக்கிறது...

    சரி டாக்டர். இப்பதிவுக்குச் சம்மந்தமில்லாத இன்னொரு விஷயம். எனக்கு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம். இந்த செய்தியைப் படியுங்களேன்:

    http://www.deccanchronicle.com/tabloids/shed-kilos-hypnotherapy-492

    எனக்கென்னவோ இதை நம்பத் தோன்றவில்லை. ஆனால் இதைப் படித்து விட்டு உடல் இளைக்க ஹிப்னோதெரபியை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தில் குதிக்கும் இருவரை நான் ஏற்கனவே சந்தித்து விட்டேன். தயவு செய்து இதைப் பற்றி எழுதுங்களேன். நீங்கள் இது பற்றி எழுதினால் நிச்சயம் பலருக்கு உதவும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  30. அய்யா,
    இது மட்டுமல்ல, கிட்டதட்ட திறப்புவிழா என்கிற பெயரில் இவர்கள் செய்யும் செலவினம் எல்லாம் வயத்தெரிச்சலை கிளப்புவைதான். அரசு விழா என்றால் ஆயிரம், ஆயிரம் பயனானிகளை முன்தினமே கொண்டுவந்து ஆள்வோர் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல... தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சபிக்கபட்ட இனம் ஒன்று உண்டு என்றால் அது பாவபட்ட அரசு பயனாளிகள்தான். திறப்புவிழாவில் அவர்கள் திறக்கும் பெயர்பலகைகள் எல்லாம் கட்டிடத்தில் பதிக்க இயாது. வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே. கோடிக்கணக்கில் செலவழித்து செய்யப்படும் திறப்புவிழா (அ) அரசு விழா மேடைகள் அரசு கணக்கில் அல்லது கணக்கு காட்டாமல் எப்படி, எவன் தலையை உருட்டுகிறார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது.

    நேற்றைய சட்டமன்ற திறப்புவிழா பாதுகாப்பு செலவு மட்டும் '42 கோடியாம்'. ஒரே ஒரு வார்த்தை 'ஒழக்கரிசி அன்னதானம், விடிய, விடிய மேளதாளம்' என்கிற சொலவடை நினைவுக்கு வருகிறது.

    - சென்னைத்தமிழன்

    ReplyDelete
  31. கட்டி முடிக்கும் வரை மன்னர் உயிரோடு இருக்க வேண்டுமே, அதுக்குதான் இந்த அவசரம் என்று நினைக்கிறேன். பாட்டிக்கு வயதாகிவிட்டது கண் மூடுவதற்குள் நடத்திவிடலாம்.என்று சிறுமிகளுக்கு திருமணம் செய்யும் நாடு இது.

    ReplyDelete
  32. One can clearly see that Dr Rudhran has been bought over by the powerful aryan media tycoons and has started casting aspersions on the greatest tamil leader.I can only say "et tu Brutus?"

    ReplyDelete
  33. i just could not resist replying veerapandian, - my hon'ble friend, i do not have the power or proximity to be a brutus; but i take solace in the fact that there will not be a mark anthony to talk people into pseudo- democracy after the end of this demonic rule.

    ReplyDelete
  34. //but i take solace in the fact that there will not be a mark anthony to talk people into pseudo- democracy after the end of this demonic rule.//

    Dear doctor, I am afraid you cannot be more wrong.There is our dear Stalin who is more than equal to Mark Antony since he is assisted by the lion hearted Azhagiri and together they will ensure the continuation of demonic rule.

    ReplyDelete
  35. Fake Fake ....they shown their film fake here

    ReplyDelete
  36. மிக வருத்தமான விஷயம்.. இரண்டு கோடி என்பது மிகப் பெரிய தொகை... மக்கள் பணம் தானே அது...

    தங்கள் கூட்டணி இன்னும் பலமாக இருக்கிறது என்பதை காட்ட இப்படி ஒரு அவசர கால கட்டிடம், செட் எல்லாம்...

    இந்த முதல்வருக்கு நல்ல சாவே கிடையாது..

    ReplyDelete
  37. 2 கோடியில் செட் மற்றும் 42 கோடியில் செலவு செய்து திறப்பு விழா.. இந்த பணம் என்ன முத்துவேலர் வீட்டு பணமா? 44 கோடியில் எவ்ளவு நல்ல காரியங்கள் பண்ணி இருக்க முடியும்.. அதெல்லாம் விட்டு விட்டு.. இவர்கள் செய்யும் அடாவடி தனம் மற்றும் அட்டூழியத்திற்ற்கு - நாசமாக போக!!!

    ReplyDelete
  38. ருத்திரனின் பார்வையில் உக்கிரம் தெறிக்கிறது

    ReplyDelete
  39. //யாருக்காக இந்த நாடக அரங்க நிர்மாணம்? எவனாவது ஜோஸ்யம் சொல்லியிருக்கிறானா இந்தத் தேதியில்தான் இது திறக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்த அரண்மனையில் ராஜகுடும்பத்தின் ஆட்சி தொடரும் என்று?// அஸ்ட்ரோபகுத்தறிவலோஜி என்பது இதன் பெயரோ? விழாவை ஒரு ஞாயிற்று கிழமையில் வைத்திருக்கலாம், மக்கள் போக்குவரத்து நெரிசலில் அவதிபட்டிருக்க மாட்டார்கள் அல்லது "chopper" பயன்படுத்தி இருக்கலாம். இவர்கள் நட்டு வைத்த கொடியையும், வொட்டி வைத்த போஸ்டரையும் தலைவர்கள் பார்க்க வேண்டும் என்ற காரணமா? 86 வயதில் ஆட்சி ஆசை அடங்கவில்லை என்பது பைத்தியநிலைதானே! இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே(at any cost), நடத்துங்கள்.

    ReplyDelete
  40. Venkat
    Dear Dr...very well said. Falsely hoping that this message reaches the deaf and dumb ears!!!

    ReplyDelete
  41. Good post Doctor. But for them, this 2 crores is peanuts, when compared to the thousands of crores being wasted in schemes like free colour TVs,etc. TN govt debt has now balloned to nearly 90,000 crores and climbing. and corruption too is balloning. They officialy 'spent' some 200 crores for 'beautification' of Marina beach while the actual amount spent would have been around 20 crores or so. this is for an example.

    It is atrocious that Mu.Ka thorws public money around, while he is very careful, prudent and stingy with his personal funds and DMK party funds. If only, he and others can adapt the same parameters for public funds too ?

    ReplyDelete
  42. The present office space and assembly complex in fort St.Geroge is more than enough. We don't need more office space. on the contrary, it can be reduced by merging depts and abolishing unnecessary and unproductive posts and depts.

    Or if there is acute need to shift out of the fort, then the ideal place would be somewhere near GST road, near or behind the airport (to avoid traffic jams when VVIPs visit Chennai secratatriat), withing walking distance of a railway station. Govt Estate is located in a conjested place abutting Mount Road and getting more conjested over the years.
    Highly irrational choice and in future people will pay a heavy price for all this.

    but who cares really ?

    ReplyDelete
  43. உண்மையான வருத்தம் ருத்ரன் ..வழிமொழிகிறேன் நானும் உங்கள் சாபத்தை ..

    ReplyDelete
  44. கருணாநிதிக்குப் பைத்தியம் முற்றிப்போய்விட்டது. பைத்தியக்காரன் கையில் மக்கள் பணம்.

    தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்திக் கேட்டுப் பார்க்கலாமே இந்த இரண்டு கோடி நாடகத்துக்கு யார் உத்தரவிட்டது என்று.

    ReplyDelete
  45. சார் நீங்க எப்ப மதத்தில சேருவீங்க முன்னாடியே சொல்லிட்ட நாங்க உங்களுக்கு சொம்பு தூக்க மாட்டோம்ல

    ReplyDelete
  46. Huge waste of public money. But who cares ? How to bring in accountability among politicians ??

    ReplyDelete
  47. 23 ம் புலிகேசி படத்தில் வடிவேலு சொல்வார்...வரலாறு முக்கியம் அமைச்சரே.....100 வருடங்களுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு ,நான் எப்படி இருந்தேன் என தெரியவா போகிறது?
    அது போலத்தான்..இது..இறப்பதற்க்குள் வரலாற்றில் சில கோக்கு மாக்கு வேலைகளை செய்து முடிக்க துடிக்கிறார்...தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது,,,,செந்தமிழ் மாநாடு.....திரை துறை வீடுகள்,கலைஞர் காப்பீடு,தமிழ் எழுத்துக்கள் சீர்சிருத்தம்,சட்டமன்றம் திற்ப்பு,5 படங்களுக்கு வசனம் இன்னும் என்ன என்ன கூமுட்டை வேலைகள் இருக்கோ

    ReplyDelete
  48. நல்ல வேளை கொல வெறியோட நடிகைகளின் குத்தாட்டம் ஏற்பாடு செய்யாம போனாரே அது வரைக்கும் மகிழ்ச்சி

    ReplyDelete
  49. நாலாயிரம் கோடி ரூபாய்க்கு மின்னணு கழிவு (தமிழக அரசு தொல்லை காட்சி பொட்டி), ஏழாவது முறையாக கூவம் வாரப்படுதல், வடபழனி ரோட்டில் இரண்டு வருடங்களுக்கு முன் கட்டிய பல கிலோ மீட்டர் divider இடித்து அதிலேயே சென்னை மெட்ரோ ரயில் போடுதல், நாற்பதாவது தடவை மெரீனா சுத்தம் செய்தல். ச்சே துக்ளக்கேயே மிஞ்சி விட்டார் இந்த சினிமா வசனகர்த்தா.
    குறிப்பு: இவருடைய இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு வாங்கினால் நாமும் கொள்ளை லாபம் பெறலாம்.

    ReplyDelete
  50. -----
    வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.....100 வருடங்களுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு ,நான் எப்படி இருந்தேன் என தெரியவா போகிறது? ------

    அருமை அருமை, இந்த கூத்தை விவரிக்க வேறு வார்த்தைகளே வேண்டாம்.

    நா. க. மலர்ச்செல்வன்

    ReplyDelete