தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் நிறையவே இருந்தும் அதற்கான முயற்சி, பயிற்சி, பக்குவம் பொறுமை இல்லாததால் இத்தனை மாதங்களாக தயக்கம் இருந்தது. இப்போதும் ஒன்றும் பெரிதாக வேகம் வந்துவிடவில்லை. வேகமாக எழுதிப்பழகிவிட்டதால் மெதுவாக தட்டச்சு செய்வதில் பல சிந்தனைகள் வார்த்தைகளாவதற்குள் காணாமல் போய் விடுகின்றன. இருந்தும் முயற்சிக்கிறேன்.
posted by Dr.Rudhran at 10:07 AM on 8 Feb, 2009
ஓராண்டு ஓடி விட்டது!posted by Dr.Rudhran at 10:07 AM on 8 Feb, 2009
இடையில் எவ்வளவு மாற்றங்கள்.
ஆர்வம் தாகமாகியதும், கணக்குகள் முக்கியமாகியதும்,
அங்கீகாரம் அத்தியாவசியமானதும்,
எழுத்தும்கூட ஒப்பனை கூட்டிக்கொண்டதும்,
புதிய முகங்களின் புன்சிரிப்பும்,
பதுங்கிய முகங்களின் நச்சுச்சீண்டலும்,
நாகரிகத்தின் மௌனங்களும்,
சலிப்பும், வெறுப்பும், கோபமும்,
உள்சிலிர்ப்பும், உத்வேகமும்,
பரிச்சயமும் நெருக்கமும் பகையும்,
மீறி எழுதுவது,
இதுவரையும் இனியும்
வருடும் கண்களுக்காக மட்டுமின்றி மனங்களுக்காகவும்
அந்த மனக்கூட்டத்தில் என் மனமே முண்டியடிக்கும்
ஹூம்.
best wishes and congrats for 1st year anniversary
ReplyDeleteபல ஆண்டுகளுக்கு முன் 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்' என்ற மெட்டுடன் துவங்கும் உங்கள் நிகழ்ச்சியை ராஜ் டிவியில் தவறாமல் பார்த்த பின்னர் சில காலம் உங்கள் கையில் மருந்தும் சாப்பிட்டு பெருத்த கால இடைவெளிக்கு பின்னர் என்னை கணினியில் எழுத்துலகம் காணச்செய்த இயக்குநர் சங்கர்ராம் மூலம் வலையுலகத்தை யதேச்சையாக வந்தடைந்தேன் அப்போது உங்களது ஆங்கில பதிவுகளை பார்த்தேன், அதன் பின்னர் பல காலம் உங்களது பதிவுகள் வலைப்பூவில் இடம் பெறாமலிருந்த போது, முட்டாள் நான் உங்கள் ஆங்கில வலைப்பூவை சரியாக கவனியாமலேயே எழுதுவதை நிறுத்தி விட்டாரா என்று நினைத்தேன், பின்னர் நீங்கள் தமிழிலில் எழுதுவதை கவனித்தேன், எழுதுங்கள் நாங்கள் படிக்கிறோம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமணற் கேணியாய் ஊரும் எழுத்து, இந்த உலகை திருத்தும். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
ReplyDelete-தோழன் மபா
வாழ்த்துகள் டாக்டர் !!!
ReplyDeleteவாழ்த்துக்கள்..:)
ReplyDeleteவாழ்த்துக்கள் டாக்டர்!
ReplyDelete//அங்கீகாரம் அத்தியாவசியமானதும்,
ReplyDeleteஎழுத்தும்கூட ஒப்பனை கூட்டிக்கொண்டதும்,//
very realistic ....Rudhran,...
its true for me too...
//புதிய முகங்களின் புன்சிரிப்பும்,
ReplyDeleteபதுங்கிய முகங்களின் நச்சுச்சீண்டலும்//
TRUE TRUE TRUE...!!!,
//எழுதுவது,
ReplyDeleteஇதுவரையும் இனியும்
வருடும் கண்களுக்காக மட்டுமின்றி மனங்களுக்காகவும்
அந்த மனக்கூட்டத்தில் என் மனமே முண்டியடிக்கும்//
U R ALWAYS WELCOME ...
WE R AWAITING ...RUDHRAN...
வாழ்த்துகள் டாக்டர்!
ReplyDelete/இதுவரையும் இனியும்
வருடும் கண்களுக்காக மட்டுமின்றி மனங்களுக்காகவும்
அந்த மனக்கூட்டத்தில் என் மனமே முண்டியடிக்கும் /
:-)
தொடர்ந்து எழுதுங்கள்...வருடும் மனங்களோடு வாசிக்க காத்திருக்கிறோம்!
போற்றுவார் போற்றட்டும்....
ReplyDeleteதூற்றுவார் தூற்றட்டும்....
பட்டயக்கிளப்புங்க டாக்டர் சார்...
படிக்க நாங்கள் இருக்கிறோம்...
ditto mullai
ReplyDeleteவாழ்த்துக்கள் டாக்டர்!
ReplyDelete//எழுதுவது,
ReplyDeleteஇதுவரையும் இனியும்
வருடும் கண்களுக்காக மட்டுமின்றி மனங்களுக்காகவும்
அந்த மனக்கூட்டத்தில் என் மனமே முண்டியடிக்கும்//
என் மனமும்!
ஓராண்டு ஓடி விட்டது இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
சந்துரு.
வாழ்த்துக்கள் டாக்டர்!!!
ReplyDeleteWrite much doctor. wishes!
ReplyDeleteஉங்களைப் புகழ்ந்து புல்லரிப்பவர்க்கு நடுவே பொருந்தாத இகழ்ச்சிகளை பொருட்படுத்தாதீர்கள். எழுதுங்கள்.
ReplyDelete//மீறி எழுதுவது,
ReplyDeleteஇதுவரையும் இனியும்
வருடும் கண்களுக்காக மட்டுமின்றி மனங்களுக்காகவும்
அந்த மனக்கூட்டத்தில் என் மனமே முண்டியடிக்கும்
//
:-)
வாழ்த்துக்கள் டாக்டர்!
வாழ்த்துக்கள் டாக்டர்.
ReplyDeleteஒரு வழியாக பழைய டெம்ப்ளேட்டை மாற்றி விட்டீர்கள். ரொம்ப சந்தோசம் டாக்டர்.
அது! :-)
ReplyDeleteவீரியமான இரண்டாம் ஆண்டுக்கு காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் அய்யா அவர்களே!
ReplyDeleteவாழ்த்துக்கள் டாக்டர்..
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
வாழ்க வளமுடன்..
ReplyDeleteஇன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்...
ReplyDeleteaandu onraaka irukkalaam aanaal karuththu pallaandu nilaiththathu. valththukkal doctor.
ReplyDeleteஇலகு வழியில் இணையத்தினூடு பணம் தேட இங்கே அழுத்துங்கள்:
ReplyDeletehttp://www.clixofchange.com/index.php?ref=kaviyan
வாழ்த்துக்கள் டாக்டர்.
ReplyDeleteஉங்கள் தமிழும் நன்றாக இருக்கிறது.. தொடருங்கள்..
ReplyDeleteஒரே ஒரு விண்ணப்பம்.. அனானிமஸ் மட்டும் எக்ஸ்க்ளூட் செய்தீர்களானால் பின்னூட்டங்களின் தரமும் கூடும்.. அனுமதி கூட தேவையிருக்காது..
இதுவரையும் இனியும்
ReplyDeleteவருடும் கண்களுக்காக மட்டுமின்றி மனங்களுக்காகவும்
அந்த மனக்கூட்டத்தில் என் மனமே முண்டியடிக்கும்
............ எதையுமே அருமையாக சொல்வது உங்கள் தனித்துவம். வாழ்த்துக்கள்!
ஐயா .. எம் பேரு முக்கியமில்லீங்க•.. ஓராண்டு கொண்டாடுறீங்க• ஓராண்டு ங்கிறது முன்னால நூறு நாளாத்தான் இருந்துதாம். அப்போ எல்லாம் இந்த ஆண்டுக்கு இனிமேங்காட்டியும் என்ன அர்த்தமுங்க• நீங்கள எழுதுனது அதுப்படி 3.65 ஆண்டுங்கோ.. சின்ன கருத்துதான் ஆனா பாருங்க எனக்கு நம்பர கொண்டாட முடியலிங்கே... ஆனாங்காட்டியுங் வாழ்த்துக்கோங்க சும்மாங்கானாட்டியூம் உங்க ஆசக்காக
ReplyDeleteநலமுடன் பல்லாண்டு தொடருங்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் டாக்டர்.
தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்!
ReplyDeletehttp://deepaneha.blogspot.com/2010/02/few-pages-from-my-teenage-diary.html
வாழ்த்துக்கள் சார்..,
ReplyDeleteதொடர்ந்து பல ஆகச்சிறந்த பதிவுகளை எழுத வாழ்த்துகள் டாக்டர்.
ReplyDeleteதொடர்ந்து பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாத்திருக்கிறோம் டாக்டர், இன்னும் அருமையான சுவாரஸ்யமான எழுத்துகளுக்காக..
ReplyDeleteவணக்கம் சார்! தொடர்ந்து உங்க பதிவுகளைப் படிச்சிட்டு வரேன். உங்களை வாழ்த்துறதுக்கு எனக்கு வயசு பத்தாதுங்க!
ReplyDeleteஇந்த டெம்ப்ளேட் நல்ல காண்ட்ராஸ்ட்டோட இருக்கு..
ReplyDeleteஎழுதறேன் எழுதறேன்னு சொல்லிட்டே இருக்கீங்க.. நானும் தெனம் வந்து பாக்கறேன். :))