Thursday, January 21, 2010

சாதுர்யங்கள்


சாதுர்யங்கள் நமக்குத் தேவைப்பட்டால்தான்.
ஆனால் எப்போதுமே அவை நம் கைவசம்.


பிறந்து சில நாட்களிலேயே எப்போது அழலாம் என்று கற்றுக்கொண்டபின், எப்போது வேண்டுமானாலும் அழுகை நம் வசம். கோபமும். ஆனால் சிரிப்பு அப்படி இல்லை.


யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் , சிந்திப்பது போல் நடிக்கலாம், ஒப்புக்காகக் கூட அழலாம். சிரிக்க முடியாது. இதை முயன்று தோற்றவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்... சிரிப்பது தான் மிகக் கடினம்.


: என்பதையும் ) என்பதையும் சேர்த்துப் போட்டு, சிரிப்பதாய் ஏமாற்றுவது எளிது. ஆனால் சிரிப்பு, உதடுகளின் விரிதலிலோ விரல்களின் தட்டுதலிலோ இல்லை. கண்கள் சிரித்தால் தான் அது சிரிப்பு.

கண்கள் பொய்சொல்வது கடினம், முடியாதது என்பதல்ல.
என் கண்கள் பொய் சொல்லக் கற்றுக்கொள்ளவில்லை, ஆனால்  பொய்யான கண்களைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொண்டுள்ளன. .

பொய்களை நான் அருகே விடுவதில்லை.
ஆனாலும்,

மெய்நிகர் மெய்யாகிவிடாது. 

இங்கே உறவுகள் சுலபமாக ஆரம்பமாகின்றன. எல்லா உறவுகளையும்போல் எதிர்பார்ப்புடன், அந்த எதிர்பார்ப்புக்கேற்ற பொய்களுடன்.
ஒரு நாள், 
மெய்நிகர்  மெய்யாகும்போது, 
மெய் பொய் மீறி 
அந்தந்தக் கணத்தின் மெய்யோடு உறவாடலாம்.



10 comments:

  1. அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. sir, since we are not able to smile in lips not from the heart , it is difficult to move smoothly with most of the people.
    there is a convenience in blog that it is possible to lay people like us to communicate with u

    ReplyDelete
  3. true... may be that's why one who always keeps smiling are considered to be 'taken for granted'
    LOL
    --vidhya

    ReplyDelete
  4. /ஒரு நாள், மெய்நிகர் மெய்யாகும்போது,
    மெய் பொய் மீறி
    அந்தந்தக் கணத்தின் மெய்யோடு உறவாடலாம்/
    அட! அருமை!

    ReplyDelete
  5. :என்பதையும்) சேர்த்துப்போட்டு //

    இனிமே எங்கேயாவது ஸ்மைலி போட்டால் உங்களின் இந்த வரிகளும் ஞாபகம் வந்துடும் சார்

    ReplyDelete
  6. படிப்பவர் எவரையுமே சுயபரிசீலனை செய்யத் தூண்டும் இடுகை.
    அமித்து அம்மா சொன்னதையும் வழிமொழிகிறேன்.
    - தீபா
    (நேற்று முதல் முயன்றும் என் கூகுள் அக்கவுண்டில் கமெண்ட் போட முடியவில்லை. கமெண்ட் செட்டிங்க்ஸ் full window ஆக மாற்ற முடியுமா?)

    ReplyDelete
  7. உண்மைதான் கண்கள் காட்டும் உண்மையான சிரிப்பா இல்லையா என்பதை.தொடர்ந்து படிக்கிறேன் சார்.நன்றி.

    ReplyDelete
  8. விதூஷ் - சரியாக சொன்னீங்க(என் அனுபவத்தில்)

    ------------

    பொய்களை நான் அருகே விடுவதில்லை. - நல்ல விடயம்.

    ReplyDelete
  9. Hi Sir, What is your view about empathy. Can you please talk about this ?

    ReplyDelete
  10. If anybody is emotionally depressed let them come to your site and be cured. Hallucinations would go away.

    ReplyDelete