Tuesday, December 29, 2009

ஒரு விழிப்புணர்வு சிறுபடம்.

மனநல விழிப்புணர்வுக்காக நான் மேற்கொண்ட பல்வேறு பணிகளில் ஒன்று இந்த ஒரு நிமிடப்படம். ஒரு நிமிடம் ஓடும் இப்படத்திற்காக நான்குபேர் மட்டுமே உழைத்தோம். நடிக்க பாலாசிங், வைத்யநாதன், ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீதரன், மற்றும் நான். வேறொரு விளம்பரப்படம் எடுக்கும் நேரத்தில் அந்த சாதனங்களை இதற்குப் பயன் படுத்திக்கொண்டு, செலவு எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்டது.

எடுக்கப்பட்ட ஆண்டு 1987.
இரவு ஒருமணிக்குமேல் இருக்கும், பாலாவிடம் நாளைக்கு அந்த .....ஷூட் போகும்போதே ஒரு குட்டி படம் பண்ணலாமா என்று கேட்டு, அப்போது தோன்றியது தான் இது. காலை ஷூட் செய்யவிருந்த படத்திற்கான காமெராவுடன் நாங்கள் நால்வரும் சென்று அருகிருந்த கோவில், வீடு என்று ஒரு மணிநேரத்தில் முடித்துவிட்டு, அன்று செய்யவிருந்த வேலையை முடித்தோம். இதில் அந்த அவசரம் தெரியும். தொழில் நுணுக்கங்கள், திரைப்பட அழகியல் ஆகியவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் எடுத்தது இது.
இதில் சொல்ல விரும்பியது இதுதான்- அன்பும் அனுதாபமும் போதாது, அக்கறை தான் முக்கியம்.
மனநோயாளிகளை அருவெறுப்புடனும் பார்க்காதீர்கள், அன்புடனும் பார்க்காதீர்கள். உதவ அக்கறை தான் முக்கியம். உதவ அறிவியல்தான் உதவும். 

http://www.youtube.com/watch?v=gO4JqCV2EII  இங்கும் இது பதிவிடப்பட்டுள்ளது! 

5 comments:

  1. Thanks for sharing, Nicely taken, One minute movie has explained one thousand feeling.

    This is what they called PADIPPATHU RAAMAAYANAM IDIPPATHU PERUMAAL KOIL.

    Helping hands are better than praying lips. In 1 minute you have covered everything, Middle class person spends time and money in temple, reading hifi newspaper but do not have time and money to speak or care an insane person.

    ReplyDelete
  2. அக்கறை.....அதுதானே இல்லை!

    ReplyDelete
  3. அது மாதிரி மனிதர்களை கடக்க நேரும்போது நாங்கள் செய்யவேண்டியதை விளக்குங்கள்

    ReplyDelete
  4. //அன்பும் அனுதாபமும் போதாது, அக்கறை தான் முக்கியம்.//

    மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  5. ஹ்ம்ம்... குறுகுறுக்கிறது எனது குற்றமுள்ள நெஞ்சம்! :-(

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete