Wednesday, December 23, 2009

படித்து,

மூடிய புத்தகங்களும்
திறந்துகொண்ட பேனாவும்
எதை மூட எது என்று
எல்லாவற்றையும் மூடிக்கொண்டபின்
திறக்கக் க்றீச்சிடும் மனக்கதவு
யாருமே தட்டாமல் வரவேற்கும் எண்ணம்;


படித்து என்ன பயன்
எழுது என்று ஆணவம் ஆணையிடும்போது
பகலிலும் வரும் கனவு.
பின்,


 நாடகமும் இந்த மேடையில்
முடிவுக்கு வரும் முன்னமேயே
ஒப்பனைகள் கலைக்க
விரும்பும் மனம்




நாடகங்கள் முடிவதில்லை
திரைகளே விழுகின்றன,
திரும்பி எழ..

5 comments:

  1. /நாடகங்கள் முடிவதில்லை
    திரைகளே விழுகின்றன,
    திரும்பி எழ.. /
    இது எனக்குப் பிடிச்சிருக்கு!

    ReplyDelete
  2. திறக்கக் க்றீச்சிடும் மனக்கதவு
    யாருமே தட்டாமல் வரவேற்கும் எண்ணம்; ..............ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  3. //முடிவுக்கு வரும் முன்னமேயே
    ஒப்பனைகள் கலைக்க
    விரும்பும் மனம்//

    உண்மைதான். பரிட்சைக்குப் படிக்கும்போது,இன்னும் எவ்வளவு இருக்கிறது எனப் புரட்டிப் புரட்டிப் பார்ப்போமே அது போல.

    ReplyDelete
  4. "மோனோலிசா ஓவியம் போல" ரொம்ப அருமையாக இருக்கிறது.

    முதலில் படித்து கடைசி வரிக்குள் வந்து முடிக்கும் போது, ஏன்? இந்த வார்தைகளில் ஒரு சோக ரேகை ஓடுகிறது! என்று சிரித்துகொண்டே மீண்டும் முதலில் இருந்து படித்தேன், இப்போது அதே கடைசி வரிக்குள் நுழையும் போது உற்சாகமாய் இனிதான் எல்லாம் ஆரமிக்க போகிறது என்று புது தெம்புடன் தொடர்கிறேன்...

    காரணம் அங்கு "முற்று புள்ளியும்" இல்லை "கேள்வி குறியும்" இல்லை "ஆச்சரிய குறியும்" இல்லை.

    படிப்பவர் மன நிலையை பொறுத்து மாறும் "மோனோலிசா ஓவியம் போல" ரொம்ப அருமையாக இருக்கிறது.

    ReplyDelete