Friday, December 11, 2009

ஆன்மிக வெங்காயத்தை உரிக்கலாமா?


இன்று ஒரு பதிவைப்படிக்க நேரிட்டது, அதில், சாமியார்களும் சைக்யாட்ரிஸ்ட்களும் ஒன்றுதான், இரண்டில் எங்குபோனாலும் பரவாயில்லை, வாழ்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எழுதியிருந்தது.இரண்டு நாட்களுக்கு முன்தான் யாரையும் திட்டாமல், கோபப்படாமல் பதிவு எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன், அதற்குள் இது கண்ணில் பட்டுவிட்டது!
பதிவுலகம் தனியொரு பிரசுரப்பெட்டகம். யார் வேண்டுமானாலும் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆசிரியர்க்குக் கடிதம் என்ற பாவனையில் ஆஹா பேஷ் பேஷ் என்று எழுதினால்கூடப் பிரசுரம் ஆகாத எழுத்துத்திறன் கொண்டவர்கள் கூட கருத்துக்களை அள்ளித்தெறிக்கலாம்.
மக்கள்முன் தன் கருத்துக்களைச்சொல்ல தைரியம் இல்லாதவர்கள் கூட அநாமதேயங்களாக வந்து கருத்து சொல்லலாம்..கருத்துச்சுதந்திரம் நிச்சயம் வரவேற்று வள‌ர்க்கப்படவேண்டியது தான், ஆனால், கருத்துக்கள் சரியோ தவறோ சில மன‌ங்களைச் சென்றடையும். படிக்கும் நேரத்தில், வாழ்வின் நிர்ப்பந்தத்தில் தவிக்கும் மனங்கள் தவறா சரியா என்று பார்க்காமல், திசைதவறிப் போகும். இதற்காகத்தான், குறையுள்ள கருத்தோ முரணான கருத்தோ பதிவு செய்யப்பட்டால் அதற்கு மாற்றாக நம் கருத்துக்களையும் பதிவு செய்வது அவசியமாகிறது.

சாமியார்கள் எனப்படுபவர்கள் சிலநேரங்களில் சரியான விஷயங்களைச் சொல்வது போல் தோன்றும். அடிப்படையில் அனைவருக்கும் உள்ள சுயபுத்தி என்பது சொல்லாத விஷயத்தை அவர்கள் கூறிவிடுவதில்லை, ஆனால் அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் அற்புதவிளம்பர வர்ணஜோடனை, அவர்கள் சொல்வதாய் காசு வாங்கிக்கொண்டு விவரிக்கும் நிழலெழுத்தாளர்கள் மனநல நிபுணர்களுக்குக் கிடையாது. ஆனால் மனநல மருத்துவர்களிடம் அடிப்படையாக அறிவியல் இயங்குகிறது.
பூஜ்யத்திலிருந்து பூஜ்யம் போனால் மீதி ஒரு பூஜ்யம் இருக்கும் என்பதை நிரூபிக்க எதை நம்புவீர்கள்? உபநிஷத்தையா algebraவையா? சாமியார்களைப்பற்றி விட்டுவிடுவோம் எங்கள் அறிவுக்கொம்புகள் நன்கு முளைத்துக் கூராக இருக்கின்றன என்று சிலர் சொல்லிக்கொள்ளலாம், அவர்கள் சாமியார் என்பதை வெட்டி அங்கே குரு என்பதை cut and replace மாற்றிவைத்துப் பேசுவார்கள். அறிவுஜீவித்வ நிறத்திலொரு கண்ணாடி அணிந்து பார்த்தால் இதுவும் சரியென்றே தோன்றும். 'சாமி கும்பிடு" என்று நேரடியாகச் சொல்லாத சாமியார்கள் பலர்' தாங்களே சாமி'  என்று ஆகிவிடுவதை உற்று அல்ல, மேலோட்டமாகப் பார்த்தால் கூடத் தெரியும்.
"இவர்களை சந்தித்த பின்பு தற்கொலை எண்ணங்களிலிருந்து மீண்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். தனது கர்வம், பேராசை மற்றும் தீய பழக்கங்களால் தனது வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டவர்கள் எல்லாம் இது போன்ற குருக்களிடம் சென்று மீண்டு வந்திருக்கிறார்கள்." என்று அந்தப்பதிவில் எழுதப்பட்டுள்ளது!
அப்படியா? எத்தனைபேர்? என்ன சதவிகிதம்? மேலும் இந்தக்கதைகளைச் சொன்னது யார்? பாதிக்கப்பட்டவரா அல்லது பாதிப்பின் மூலம் ஏதோ ஒரு லாபத்தைப் பார்த்தவரா? இந்தக் கதைகள் எந்த அறிவியல் தொகுப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளன? ஒரு திறமையான விளம்பர நிறுவனம் என் கைவசம் இருந்தால் நான் கூட ஒபமாவைத் தற்கொலை செய்துகொள்வதிலிருந்து மீட்டு அமெரிக்க அதிபர் ஆக்கினேன் என்று மக்களிடையே கதை பரப்பமுடியும். இப்படிச் சொன்னால் என் மீது வழக்கு வரும் நான் சிறைக்குப்போவேன், ஆனால் இப்படி சாமியார்கள் கூறிகொண்டு திரிவதை யாரும் கேள்வி கேட்பதில்லை!
எனவே எதையும் அறிவியல்ரீதியாக சிந்திப்பவன் என்று கூறிக்கொண்டு மட்டையடியாக, ஆன்மிக குருக்களிடம் செல்பவர்களை கிண்டலடிக்க வேண்டியதில்லை. மூட நம்பிக்கைகளை வலியுறுத்தாமல், நெருக்கடி மிக்க மனித மனத்திற்கு ஒரு அமைதியை தந்தால், தனி மனித வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டுவந்தால், அது ஒரு ஞானத் தேடல் என்ற அளவோடு நின்றுவிட்டால், இன்றைய உலகத்தில் ஆன்மிக குருக்களுக்கும் ஒரு பெரும் தேவை இருக்கத்தான் செய்கிறது.  இதுவும் அந்தக்கட்டுரையிலிருந்துதான்!
இந்த ஆன்மிகத்தேடல் ஒரு சிக்கலான வியாபாரம். வாங்க முடிவு செய்துவிட்டால் வாங்கிவிடவேண்டும், கேள்விகள் இங்கு தடை செய்யப்பட்டுள்ளன. பேரங்களும் சாத்தியமில்லை! வாங்கியதைப் பரிசோத்தித்துப் பார்த்துவிட்டுத் திரும்பத்தரவும் அனுமதியில்லை! இந்தப் பொருளை நான் வாங்கினேன் அது வேலை செய்யவில்லை என்று பிறரிடம் கூறுவதும் சாத்தியமில்லை. ஒரு மருத்துவரிடம் சென்று சரியாகவில்லை என்றால் இன்னொரு மருத்துவரை நாடலாம், அல்லது தெரிந்தவர்களிடம் 'அவனிடம்போகாதே' என்று அறிவுறுத்தலாம். சாமியார்/குரு விஷயத்தில் வாங்கிக்கொண்ட சமாச்சாரம் வேலை செய்யவில்லை என்றால், உனக்கு அதைப் பயன் படுத்தும் தகுதி இல்லை என்றே மீதி முட்டாள்கள் அனுமானிப்பார்கள்.
ஒரு மனநல மருத்துவன் உருவாக பள்ளியிறுதி தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று முதலில் MBBS பெறவேண்டும், பிறகு நான்கரை ஆண்டுகள் படித்துப் பட்டம் பேற்று முதுகலை படிப்பில் நுழைய வேண்டும். அதன்பிறகு ஒழுங்காகப் படித்தால் தான் அதிலும் தேர்வாகி ஒரு மனநல மருத்துவனாக வெளியில் சொல்லிக்கொள்ளவே முடியும். இதைவிடச் சுலபமாகவும் விரைவாகவும் ஒரு குருவாகக் காட்டிக்கொள்ள முடியும். காட்டிக்கொள்ள என்று குறிப்பிடக்காரணம் உண்மையான நேர்மையான‌ குரு தன்னைக் காட்டிக்கொள்வதில்லை.

சாமியார்கள், ஆன்மிக குருமார்கள் ஆகியோர் சாதாரணமாகப்பேசும் போது பெரிய தவறுகள் வெளிப்படையாகத் தோன்றுவதில்லை, ஆனால் அவர்களே மனவியல் பற்றிப்பேசும் போது நிறைய‌ உளறுவார்கள். ஓஷோ ஜேகே போன்ற மேதைகளானாலும்! சுருக்கமாக சொல்வதென்றால் மனநல நிபுணர்கள் செய்வது ஒரு அறிவியல் சார்ந்த தொழில், சாமி/ குரு செய்வது நேர்மையில்லாத வியாபாரம். ஆரம்பத்தில் இலவசமாக உரைகளை வழங்கிய குருமார்களின் இன்றைய நிதிநிலையைச் சிந்தியுங்கள்.  

ஒருமுறை 1986ல் நான் அசல் (அவர் விட்டுச்சென்ற நிறுவனத்தில் இப்போதிருப்பவை அவரது நகல்கள்)குரு என் முதுகைத்தொட்டு ஒரு மணியடித்தார். குண்டலினி எழும்பும் என்றார். முதுகின் மேல் தோல் அவர் தொட்டதால் குறுகுறுப்படைந்ததைத்தவிர வேறெதுவும் நடக்கவில்லை. 
இன்னொரு (இன்று பிரபலமாக பல நிழலெழுத்தாளர்கள் உதவியுடன் வசீகரமாக வியாபாரம் செய்யும்) 'குரு' 1996ல் அப்போது நான் தொலைகாட்சியில் சற்று பிரபலமாக இருந்ததால் இரண்டு மணிநேரம் என்னிடம் தன் ஆன்மிகச்சக்தியைக் காட்ட முயன்றார்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் சந்திக்காமலோ சிந்திக்காமலோ நம்மிடையே ஆன்மிடம் விற்கும் 'குரு'மார்களை நான் சாடவில்லை. நம்பிக்கை தவறில்லை, நம்புமுன்னோ நம்பும்போதோ கேள்விகளைக் கேட்காமல் இருந்தால் அது தவறாக முடியும். இங்கே நான் குறிப்பிட்டப் பதிவின் எழுத்தாளரைப்போல.

அவர் குறிப்பிட்டதைப்போல் 'அவர்களும்' தேவை என்று எப்படி எடுத்துக்கொள்வது? கரப்பான்பூச்சி கூடத்தான் சுழலில் ஒரு தேவைக்காக இருக்கிறது, அதைச் செல்லப்பிராணியாக வளர்த்துக் கொஞ்சலாமா?
சுட்டிவேறு கொடுத்து மதில்மேல் இருப்பவர்களைக் குழப்பவேண்டாமென்றுதான் தரவில்லை. இது குறித்து மேலும் இன்னும் விரிவாக நிதானமாக இன்னொரு நாள்

.

57 comments:

  1. பகிர்விற்கு நன்றி.

    இலவசமாக உரைகளை வழங்கிய குருமார்களின் இன்றைய நிதிநிலையைச் சிந்தியுங்கள்../////

    அதெல்லாம் நாங்க சிந்திக்க மாட்டோம். சிந்திச்சா அவங்க பிழைப்பு எப்படி நடக்கும் டாக்டர்.??

    ReplyDelete
  2. Hi Doctor,

    My general feeling is because of these Guru's now a days Yoga, meditation are become more popular among people. they are aware of these terms and showing their interest in learning these things..

    Generally in our society, people still hesitant to approach doctors for their psychological problems..

    In this case, don't you feel these persons are somewhat important to the society?

    This is just my thought and would like to know your opinion in that.

    Selvi

    ReplyDelete
  3. பக்கத்து வீட்ல ஒருத்தர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாரு, அவுங்க வீட்டில் மருத்துவமனைக்கு செல்லாமல் ஒரு சாமியாரை அழைத்து மந்திரித்து வூபூதி போட்டு போனார்கள், எவ்ளவோ சொல்லியும் கேட்கல, கடைச்யில் கண்ணு சொருகி வாய் திறந்த மானிக்கே இருக்க ஆரம்பித்தது, அந்த பூசாரி கடைசியா மருத்துவமனைக்கு கூட்டிட்டு போக சொல்ல,

    அங்க போய் பார்த்தா அவருக்கு மஞ்சல்காமாலை!
    கடைசி நேரம் அவரை சிலர் வற்புறுத்தியதால் தான் அதுவும் நடந்தது, இல்லையென்றால் அந்த மனிதர் வீட்டிலேயே இறந்திருப்பார்!

    இந்த சாமியார் பயலுகளை கட்டி வச்சு உதைக்கனும்!

    ReplyDelete
  4. //இன்று பிரபலமாக பல நிழலெழுத்தாளர்கள் உதவியுடன் வசீகரமாக வியாபாரம் செய்யும்) 'குரு' //

    இந்த நிழலெழுத்தாலர்கள் வார்த்தை பிரயோகம் அருமை, நிழலுலக தாதாக்களைப் போல.

    ReplyDelete
  5. இது கொஞ்சம் குழப்பமா இருக்குங்க டாக்டர்...

    மன நோயை குணப்படுத்த Psychiatrist கிட்ட போகலாம். மருந்து மாத்திரை மூலம் சரி செய்யலாம். சரி.
    ஆனால், ஆரோக்கியமான மன நிலையில் உள்ள மனிதனின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை யாரிடம் ஆலோசிப்பது? இதற்கு Psychiatrist கள் உதவுவார்களா?
    மேற்கத்திய உலகில், இதற்கு Psychologist கிட்ட Counselling போறாங்க. அது மாதிரி நம்ம ஊர்ல ஆன்மீகவாதிங்க கிட்ட போறாங்கன்னு வசசுக்கலாமே ?

    பெரும்பாலும் பணம் சம்பாதிக்கும் ஆன்மீக குருக்கள் தான் இருக்காங்கங்கறது வேற மேட்டர்... : )

    ReplyDelete
  6. A good point made. Science and Faith, or Science of Pseudo-faith?

    All your points seem to relate to those fake gurus. As you have pointed out, the real gurus dont show themselves up.

    I wish you wrote a blog on those real gurus, and how they stand in relation with you, the Science lobby.

    About your writing on the fake gurus, they are fishing in troubled waters. The society is troubled in various ways; and people go helter-skelter in search of some remedy or any remedy for their mental ills.

    As someone has said, in India, pyschiatric counseling comes with a stigma on the person seeking it. The stigma is, of course, ill-founded; but who cares?

    Even as a hearsay, if a groom or his family comes to know that the girl had gone for counseling sometime in her youth, the proposal will be called off. So also, for a boy.

    No such thing happens if one goes to a guru, even if he is fake.

    Majority of us are ordinary folk. They seek things ordinary. For e.g a farmer, or a labourer, does not like to enter a sleek bank where the clerks are well dressed and the room reeks of modernity. He recoils in alienation and, so, goes to neighborhood PO to open his SB ac, as everyone there looks a next door neighbor. No matter however much we advertise ourselves as 'Banker to Every Indian'.

    Maybe, you can blame the cultural milieu of our society, to some extent.

    ReplyDelete
  7. வெங்காயத்தை உரிச்சிகிட்டே போனா ஒன்னும் மிஞ்சாதுன்னு சொல்றீங்க.

    ReplyDelete
  8. //ஆரோக்கியமான மன நிலையில் உள்ள மனிதனின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை யாரிடம் ஆலோசிப்பது?//

    சுத்தி இருக்குறவங்களை மனுசனா மதிக்க தெரியாதவன் தான் சாமியார் கிட்ட்ட போவான்!

    ReplyDelete
  9. Neeye oru fraud doctor

    ReplyDelete
  10. சார் ! நானே மொதல்ல உங்களை பாக்கும்போது ( டிவிலதான் ) ஓஷோவோட சீடர்னு நெனச்சுட்டேன் ( ராத்திரி அன் டைம் வேற சௌண்ட மியூட்ல வெச்சதுனால )...

    அப்பறம் ஒரு தாட்டி நீயா நானாலத்தான் புரிஞ்சுது

    ReplyDelete
  11. //குண்டலினி எழும்பும் என்றார். முதுகின் மேல் தோல் அவர் தொட்டதால் குறுகுறுப்படைந்ததைத்தவிர வேறெதுவும் நடக்கவில்லை. //

    ஹா ஹா ஹா ! நல்ல வேலை திரும்பி நின்னீங்க !

    ReplyDelete
  12. //குண்டலினி எழும்பும் என்றார். முதுகின் மேல் தோல் அவர் தொட்டதால் குறுகுறுப்படைந்ததைத்தவிர வேறெதுவும் நடக்கவில்லை. //

    ஹா ஹா ஹா ! நல்ல வேலை திரும்பி நின்னீங்க !//


    எனக்கும் சிரிப்பு வந்துருச்சு!

    ReplyDelete
  13. //சார் ! நானே மொதல்ல உங்களை பாக்கும்போது ( டிவிலதான் ) ஓஷோவோட சீடர்னு நெனச்சுட்டேன் // நானும் முதல்ல அப்படி தான் நினைத்தேன்ன்

    ReplyDelete
  14. //.இரண்டு நாட்களுக்கு முன்தான் யாரையும் திட்டாமல், கோபப்படாமல் பதிவு எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன், அதற்குள் இது கண்ணில் பட்டுவிட்டது!//

    நீங்க பரவால்ல சார்! இதவிட பயங்கரமான பதிவெல்லாம் இருக்குது !

    கமென்ட்லையே காமாலைய குணப்படுத்தறேன்னு கடை போட ஆரமிச்சுட்டானுங்க!

    ஒரு ஆளு இஸ்கூலே நடத்தறாரு !

    ReplyDelete
  15. இருக்கறதுலையே கொடுமை இந்த அம்மா பகவான் ரவுசு தான் ! யப்பா சாமி ! உலக நடிப்பு !

    ReplyDelete
  16. தெளிவாக சிந்திக்க முடியாத தருணங்களில் நல்ல psychiatrist ஐ சந்தித்து வாழ்வின் பிரச்சனைகள் பார்வையை மறைக்கும் போது உதவி கேட்கலாம் என இந்தக் காலத்தில் கூடவா கேள்வி .

    ReplyDelete
  17. //சுருக்கமாக சொல்வதென்றால் மனநல நிபுணர்கள் செய்வது ஒரு அறிவியல் சார்ந்த தொழில், சாமி/ குரு செய்வது நேர்மையில்லாத வியாபாரம்.//


    நீங்கள் சொல்வது சரி என்றே வைத்துக் கொண்டாலும், மதங்களில் அறிவியல் இருக்கிறது என்று அளந்துவிடும் மதச்சார்பு அறிவியலாளர்கள், மனவியல் மருத்துவர்கள் உண்டு.

    படிப்பு வழியாகவே மனவியல் தொடர்புடைய எல்லாவற்றையும் 100 விழுக்காடு புரிந்து கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். கேஸ் பை கேஸ் அனுபவ அறிவு வழியாகத்தான் மனவியல் மருத்துவரும் அனுபவம் பெறமுடியும் என்றே நினைக்கிறேன். எல்லா மனவியல் மருத்துவரும் உங்களைப் போல் பிரபளம் இல்லையே :) மனவியல் படிப்பு அறிவு அற்றவர்களாலும் சில மனவியல் சிக்கல்களுக்கு சிறப்பாக தீர்வு சொல்ல முடியும்.

    மன உளைச்சலால் தற்கொலை செய்துக் கொள்ளும் மனநல மருத்துவர்களும் உண்டு.

    ReplyDelete
  18. //இரண்டு நாட்களுக்கு முன்தான் யாரையும் திட்டாமல், கோபப்படாமல் பதிவு எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன், அதற்குள் இது கண்ணில் பட்டுவிட்டது!//

    சரிதான்...முடிவெடுத்த அன்றே சமரசமா?

    பதிவர்கள், எழுத்தாளர்கள் என்ற பெயரில் காயகல்ப லேகியம் விற்பனை செய்யும் இந்த நடிப்புச் சுதேசிகளைப் பற்றி என்ன சொல்வது.....


    நாம் எழுதுகிறோம், மக்கள் படித்து உடனே நம்பிவிடுவார்கள் என்று இந்த முட்டாள்கள் நம்புகிறார்கள். நம்பவில்லை என்றாலும் இவர்களுக்கு அதைப் பற்றிய கவலையில்லை. அந்தச் சாமியார்களும் அடுத்த விளம்பர நிறுவனதிடம்(வேறு எழுத்தாளர்களுக்கு)செல்வார்கள்.

    பொருளின் தரம் பற்றிய கவலை, விளம்பரக் கம்பெனிக்காரனுக்கு அவசியமில்லை. விளம்பரப்படுத்துவதோடு அவன் பணி நிறைவடைக்கிறது.

    விட்டுடுங்க.....டாக்டர்.....பிதற்றலுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

    ReplyDelete
  19. But we should accept the fact that in Tamilnadu lot of counsellor too working with money minded and not giving cures.

    Sorry to write this, but it is my experience, lot of pyschriatric doctors too do not cure the patient soon and they keep the treatment for 6 months to 1 years, thats why people do not have trust/faith on medical/science side.

    ReplyDelete
  20. ருதரன்
    ஒரு மென்டோர் தேவை அனைவருக்கும். கிராமங்களில் அந்த ஊர் வாத்தியார் பலருக்கு மென்டோராக இருப்பார். எனது தந்தை ஆசிரியர். அவரிடம் வழிகாட்டல பெற அக்கம் பக்கம் கிராமவாசிகள், பிள்ளைகளின் பெற்றோர்கள் எப்போதும் வருவார்கள்.

    குடும்பம், நட்பு, மென்டோர்,கோச்சிங்,கவுன்சிலிங்.... இவற்றின் வெற்றிடத்தை காசாக்க சாமியார் தொழில் வந்துவிட்டது.

    மேரேஜ் கவுன்சிலிங், குழந்தைகள் கவுன்சிலிங் எல்லாமெ வெளிப்படையான முறைகள். குண்டலனி எழுப்புவது , ஜோசியம் , தகடு எல்லாம் மாந்தீர்கத் தொழில் என்று சொல்லலாம்.

    ReplyDelete
  21. //ருத்ரன் ....
    குண்டலினி எழும்பும் என்றார். முதுகின் மேல் தோல் அவர் தொட்டதால் குறுகுறுப்படைந்ததைத்தவிர வேறெதுவும் நடக்கவில்லை. //

    //ராஜன் .....
    ஹா ஹா ஹா ! நல்ல வேலை திரும்பி நின்னீங்க !//

    ‍‍
    அட்டகாசம் ராஜன்.. :-‍))))))

    **

    ReplyDelete
  22. இலவச விளம்பரம்

    இன்னர் பீஸ் (வைகிங் மரற்றும் விக்டோரியா சீக்ரட் இன்னர் பீஸ் அல்ல ) மற்றும் இன்டர்னல் பிலிஸ் கிடைக்க வேண்டுமா அதிகம் இல்லை ஜென்டில்மேன் 450 யூரோதான்.

    யூரோன்னதும் ஏதோ அய்ரோப்பிய நாட்டுல நடக்குற சிகிச்சைன்னு நினைக்காதீங்க. எல்லாம் நம்ம வளர்ந்துவரும் ஸ்வாமி ஓம்கார் திருவண்ணாமலையில் நடத்தும் மெடிட்டேசன்தான்.


    http://pranavapeetam.org/retreat.html

    //....During this retreat, you can feel the inner peace and get internal bliss.
    ...spiritual master will make you to enter in a new realm of existence of life on this planet.
    //


    Cost and regulations:

    * Ten days Meditation Retreat Cost 450 Euro.
    * If you are booking after December 15th 2009 will cost 490 euro
    * Double room accommodation will be arranged in Ashram or other places Cost 9 t0 11 Euro /Day
    * Single occupancy cost 6 to 10 Euro/Day
    * Vegetarian breakfast and meal for 10 days- 65 Euro.

    ***

    ReplyDelete
  23. /// ஒபமாவைத் தற்கொலை செய்துகொள்வதிலிருந்து மீட்டு அமெரிக்க அதிபர் ஆக்கினேன் என்று மக்களிடையே கதை பரப்பமுடியும் ///

    ///உனக்கு அதைப் பயன் படுத்தும் தகுதி இல்லை என்றே மீதி முட்டாள்கள் அனுமானிப்பார்கள். ///

    /// காட்டிக்கொள்ள என்று குறிப்பிடக்காரணம் உண்மையான நேர்மையான‌ குரு தன்னைக் காட்டிக்கொள்வதில்லை ///


    இவையெல்லாம் கொஞ்சம் உச்சமான எழுத்துகள் நன்றி ! (நான் ஆழ்ந்து சிந்திக்க தூண்டியவை)

    ReplyDelete
  24. // குப்பன்.யாஹூ said...
    Sorry to write this, but it is my experience, lot of psychiatric doctors too do not cure the patient soon and they keep the treatment for 6 months to 1 years, thats why people do not have trust/faith on medical/science side.//

    I agree with you in following

    1.In general most of the doctors are using patient as money resource. This is because it is a business. For doctors only patients are the source of income. Same like attorneys and client.
    2.Coming to psychiatric case , it is a long-term care. I thing you know about Shrinks

    ***

    The problem is psychiatric and general medical practices are based on science and saamiyar treatments are based on belief. You can challenge a doctor for his wrong doing but you cannot challenge the saamiyar because it is a based on belief.

    ReplyDelete
  25. i think i have been answered. it would be nice to take some saamiyaar/guru to a consumer court!

    ReplyDelete
  26. and, kuppan, if you need to take medicnes for six months, it is always better to start earlier than wasting time on these spiritual quacks.

    ReplyDelete
  27. //கோவி....
    மனவியல் படிப்பு அறிவு அற்றவர்களாலும் சில மனவியல் சிக்கல்களுக்கு சிறப்பாக தீர்வு சொல்ல முடியும்.//

    கோவி,
    படிப்பு என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட கற்கும் முறை. இது பழைய அனுபவம் ஆராய்ச்சிகளில் இருந்து வருவது. விமானம் கண்டுபிடித்த ரைட் பிரதர்ஸ் ஏரோநாட்டிகல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அல்ல. அவர்களுக்குப்ப்பின் அந்த துறைமேலும் வளர அவர்களின் அனுபவ அறிவை அடிப்படைக் கல்வியாக வைத்து வளர ஆரம்பித்தது.

    மனவியல் மருத்துவம் ஒரு புள்ளியில் எழுதப்படாத அனுபவங்களைக் கொண்டே ஆரம்பித்து இருக்கும். இது எல்லா கல்விக்கும் பொருந்தும். இன்று படிக்க நினைப்பவர்கள் முறைப்படுத்தப்பட்ட பழைய பாடங்கள் (பட்டப் படிப்பு) வழியா ஆரம்பித்தால் அது அவர்களுக்குத்தான் நல்லது.

    **

    எனவே நீங்கள் சொல்லும் தாத்தா/ பாட்டி அனுபவ அறிவு எந்த விதத்திலும் பட்டப்படிபிற்கு குறைந்தது அல்ல.

    நாம் இங்கே பேசுவது ஏமாற்றும் தொழில் பற்றியே.

    ReplyDelete
  28. தமிழில் தத்துவ மரபுகளை தேடவோ படித்துத் தெரிந்து கொள்ளவோ மக்களுக்கு அறிவோ அனுபவமோ இல்லாத பட்சத்தில் சாமியார்களையும் குரு'க்களையும் தேடும் கூட்டம் அதிகமாகிறது.

    திருக்குறளை ஆழ்ந்து படித்து உணர்ந்தவர்களில் எத்தனை பேருக்கு உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்கு அயல் மனிதர்களின் தேவை இருக்கக் கூடும்? அல்லது உளவியல் ரீதியான பிரச்னைகள்தான் இருக்கக் கூடுமோ?

    ReplyDelete
  29. திருக்குறள் என்று நீங்களும் பகவத்கீதை என்று அவர்களும் மட்டுமல்ல, ஃப்ராய்ட் எழுதியதையெல்லாம் படித்துவிட்டேன் என்று பீற்றிக்கொண்டால் கூட மனநோய் வரலாம், யாருக்கும். நோய்கள் உடலின் சில சுரப்புக்களின் தன்மையால் வருபவை, இதற்கும் படிப்பிற்கும் எந்த புத்தகத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
    இன்னொரு விஷயம், ந்ம் சாமியார்கல்/குருமார்கள் பலபேர், அறிவியல் சார்ந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அப்புறம் தான் சாகிறார்கள். அவர்களது எந்தப்பெயரால் அழைக்கப்படும் கலையும் மூச்சு இழுத்துக்கொள்ளும்போது உதவுவதில்லை!

    ReplyDelete
  30. ருத்ரன் சார்,திருக்குறளின் படிப்பு தரும் அறிவும்,பகவத் கீதையின் வாசிப்பனுபவமும் ஒன்றல்லவே..

    தர்க்கரீதியான,மன நலனுக்கு எடுத்துக்காட்ட சொன்னேன்.

    உடலின் கேடுகளால் வரும் நோய்கள் இவற்றில் வகைப்படுத்த முடியாது..ஆனால் உடலின் கோளாறுகளுக்கா மக்கள் பெருமளவில் சாமியார்களிடம் செல்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?

    ReplyDelete
  31. 'சாமி கும்பிடு" என்று நேரடியாகச் சொல்லாத சாமியார்கள் பலர்' தாங்களே சாமி' என்று ஆகிவிடுவதை உற்று அல்ல, மேலோட்டமாகப் பார்த்தால் கூடத் 'சாமி கும்பிடு" என்று நேரடியாகச் சொல்லாத சாமியார்கள் பலர்' தாங்களே சாமி' என்று ஆகிவிடுவதை உற்று அல்ல, மேலோட்டமாகப் பார்த்தால் கூடத் தெரியும். . ....... சவுக்கடி. பல சாமியார்கள் மக்களின் அறியாமையில் குளிர் காய்கிறார்கள். மனோ தத்துவ நிபுணர்களை குறை சொல்லும் மனங்களை என்ன என்பது.

    ReplyDelete
  32. மற்றபடி குண்டலினி,பாம்புகளுக்கெல்லாம் நான் செல்ல விரும்பவில்லை.

    ஆனால் உடல்,மனம் சார்ந்த பயிற்சியில்-toning- யோகாப்பியாசத்தின் பலன் அளவற்றது என்பது என் சொந்த அனுபவம்.

    ReplyDelete
  33. //
    அறிவன்...
    ஆனால் உடல்,மனம் சார்ந்த பயிற்சியில்-toning- யோகாப்பியாசத்தின் பலன் அளவற்றது என்பது என் சொந்த அனுபவம்.//

    மனம் , மனம் அப்படி என்ற ஒரு வஸ்தாது இல்லை.

    எல்லாமே Thought process சரியா.

    அது நிகழும் இடம் மூளை.
    ஒரு பயமோ அதிர்வோ உணரப்படும்போது மூளையின் தூண்டுதலால் மற்ற பாகங்கள் ரியாக்ட் செய்யும். சரியா?

    மூளை செய்வதைச் செய்துவிட்டு கல்லுளிமங்கன் மாதிரி அப்படியே இருக்கும். இதயம் கிடந்து அடித்துக் கொள்ளும். தோலில் வேர்க்கும்.

    அதற்காக இதயமும் தோலும் சிந்திக்கிறது என்று பொருள் அல்ல. அவைகளைப் தியானம்மூலம் கட்டுப்படுத்த நினைப்பது இல்லாத ஊருக்கு வழி கேட்டல் போன்றது.


    எனவே மனப்பயிற்சி என்பது இல்லாத மனதிற்கானது.

    **

    சூழ்நிலைகளைக்கு ஏற்ப நம்மை நாமே பழக்கிக்கொண்டால், அடுத்து அப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது Thought process எழுப்பும் அதிர்விற்கு உடல் பாகங்கள் பழக்கப்பட்ட விதமாக ரியாக்ட் செய்யும்.

    Fire drill என்ற ஒன்று உண்டு.
    ஏன் தெரியுமா? எதிர்பாரமல் வரும் தீ விபத்திற்கு , நம் Thought process எப்படி நாம் எதிர்பார்த்த வண்ணம் நடக்கச் சொல்வது எனபதே அதன் குறிக்கோள்.

    பலமுறை இதுவும் சொதப்பும். :-))
    நம் மூளை வேறுவகையில் கட்டளையிடும். அது அப்போது எடுக்கும் முடிவு.

    **

    1.தம் அடித்தால் சிலருக்கு மன இலேசாகும்.
    2.இமயமலை சாமிகளுக்கு கஞ்சா
    3.சிலருக்கு செக்ஸ் மனதை இலகுவாக்கும்

    எனக்கு , 5 மைல் ஓடினாலே மனம் உடல் இலகுவாகி பரப்பது போல் உணர்வேன். அந்த உணர்வுக்காக ஏங்கியே/ விரும்பியே நான் தடர்ந்து தூரங்களை அளக்காமல் ஓடுவேன்.

    சிலருக்கு இந்த உணர்வை ஊட்ட ஊதுபத்தி,பஜனை,சாமியார் என்று தேவைப்படலாம். :-))))

    எல்லாம் அவர்கள் அவர்களின் உடலையும், தாட்புராசசையும் பழக்கியவிதம்.

    ReplyDelete
  34. There appears to be a fallacy in some comments made here, including Dr R's.

    It is not for mental illness to cure which one goes to saamiyaars - the word is being used in its positive sense. It may include even a teacher like the commentator Kalvettu's dad. It may include my own deceased sister to whom I used to turn for comfort and advice in times of stress.

    Happiness is nothing but agreeable circumstances. But such circumstances don't fall delectably into our laps. We cant get them always. We cant overcome them when they come disagreeably.

    Stress results: seriously in some cases which our dear Dr can call a mental malady and sense an opportunity to strike! (Humor here!)

    In all other cases, it is not a psychiatrist, but a sammiyar, we turn to.

    The role of such adviser, or saamiyar, will always be there. (No doubt, the exploiters (who are the fake saamiyaars) will sense a golden opportunity and grab it quickly (No humor here!)

    Like money, science can buy all things. But there are certain things which are beyond its touch. There enters saamiyaars, and exits science. There appears to be a fallacy in some comments made here, including Dr R's.

    It is not for mental illness to cure which one goes to saamiyaars - the word is being used in its positive sense. It may include even a teacher like the commentator Kalvettu's dad. It may include my own deceased sister to whom I used to turn for comfort and advice in times of stress.

    Happiness is nothing but agreeable circumstances. But such circumstances don't fall delectably into our laps. We cant get them always. We can’t overcome them when they come disagreeably.

    Stress results: seriously in some cases which our dear Dr can call a mental malady and sense an opportunity to strike! (Humor here!)

    In all other cases, it is not a psychiatrist, but a sammiyar, we turn to.

    The role of such adviser, or saamiyar, will always be there. (No doubt, the exploiters (who are the fake saamiyaars) will sense a golden opportunity and grab it quickly.

    Like money, science can buy all things. But there are certain things that are beyond its touch. There enters saamiyaars, and exits science.

    ReplyDelete
  35. .






    Mentoring is free of cost by nature and by it own terms.

    Like father guiding his son/daughter or Grandpa and Grandma or some family uncle guiding youngsters.

    When you ask money for Mentoring (what most of samiyaras and GODs does) that then it is a business you cannot call that as Mentoring.

    ***

    Mentor can be any one and in any form based upon the needs of Mentee and capability (specialized knowledge) of the Mentor.

    I am a mentor for my kids and also I do mentoring for others, which is my passion, not a business.

    You cannot make a living or you cannot choose mentoring for your living. If you do that concept dies there.




    .

    ReplyDelete
  36. ”i think i have been answered. it would be nice to take some saamiyaar/guru to a consumer court!”

    வாய்ப்பில்லை...ஒருவர் (மருத்துவர்) தனது தொழிலில் கவனக்குறைவாக இருந்தால்தான் நுகர்வோர் மன்றத்தில் அவர்களை இழுக்க முடியும்.

    சாமியார்களுக்கு தொழிலே ஏமாற்றுவ்துதான்...எனவே அதில் கவனக்குறைவாக இருந்தால், என்ன சொல்லி அவர்கள் மீது வழக்கு தொடுப்பது?

    ReplyDelete
  37. Kalvettu,
    Yours views are well tought. Basically any information from anyone we get is quite subjective. It is upto the listener how he interprets and makes use of them. For some it may mean good and worthy and for many others, it could be an utter waste. Hence, by this logic the speaker or teahcer or mentor cannot attach any value to his information since it means different to different people. It is upto the listener to find worth and give in return as a sense of gratitude.

    True teaching or mentoring should be devoid of money . Money mindedness on the part of teacher makes him a bad teacher and the truth is the first victim. However, in todays world everybody needs some money at least for self maintenance. So, a mentor and teacher or counsellar can charge a small amount I suppose. This is a delictae part anyway. Free mentoring and teaching , is it possible?

    Regards,

    SIva.T.Nagar

    ReplyDelete
  38. .


    // SIva.T.Nagar

    Free mentoring and teaching , is it possible?//

    Siva,
    If mentoring is not possible without getting paid for that…..then it is not a mentoring.
    It becomes a job. Lets call that in some name other than Mentoring.

    In my opinion.....

    1. You cannot make a living or you cannot choose mentoring for your living.

    2. If you do, that concept dies there. Please call that as a job like any other paid job.

    3. Mentoring is possible only if you have extra time and passion for that.

    4. If you cannot mentor freely and with real passion and with true heart , staying away from that is good.

    ----------------------

    A: Mentoring is already practiced in following relationship.

    Father /Mother – Children
    Grandma/ Grandpa – Grand Kids
    Friends - Friends
    Some time lucky people get their teachers as the first mentor.

    B: Indirect mentoring opportunity (Kids / Teens)

    1. Soccer coaching or any sports coaching.
    2. Entertaining Kids
    3. Simply hanging out with teen kids and being there for them.
    4. NSS, NCC, Scouts

    -----------------

    In early days Guru/Samiyars mentored the whole community/village. People go to them for all kind of reasons.

    Now , Guru / Samiyar concept is merely a business.When it becomes a business profit/loss are the main criteria.
    To make a living or to seek profit there are lot more business opportunities are there. At least we can try not to corrupt the value of mentoring.


    .

    ReplyDelete
  39. ருத்ரன் சார்,

    சிந்திக்க வைக்கிற கட்டுரை. ஜேகே வை ஆன்மிக லிஸ்டில் சேர்க்க முடியாது. அவர் ஒரு அக்னாஸ்டிக். மாயாஜால சாமியார்களையும், குண்டலினி ஏற்றுகிறேன் என்று சொல்கிற சாமியார்களையும் பற்றி நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.

    ஆனால் உடம்புக்கும் மனதுக்கும் இருக்கிற நெருங்கிய தொடர்பைச் சொன்னவர்கள், சொல்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். யோகாவின் எட்டு அங்கங்களில் ஒன்றான ஆசனம் உடம்பை ஹார்ட்ஷிப் களுக்குத் தயார் செய்து அதன் மூலம் மனதை ஆரோக்யப் படுத்துகிறது.

    நீங்கள் சுவாமி விவேகானந்தாவின் ராஜ யோகம் பற்றி எழுத வேண்டும்.

    பிராணா யாமத்தால் மனதைப் படிக்கிற சக்தி வரும் என்கிற ரீதியில் (ஒரு நம்பிக்கையாக அல்ல, ஒரு சவாலாக) அவர் எழுதியிருக்கிறார். இதற்கும் மன நல மருத்துவத்துக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்த உங்கள் கருத்துக்கள் எல்லாருக்கும் பயன் தரும்.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  40. கல்வெட்டு,
    மனம் என்று thought process'யைத்தான் சொன்னேன்.
    'இல்லாத'மனத்தை லேசாக்கத்தான் 5 மைல் ஓடுகிறீர்களா என்ன?
    :)

    ReplyDelete
  41. ஓவியம் நன்றாக இருக்கிறது ருத்ரன்!

    ReplyDelete
  42. //
    அறிவன் said...
    கல்வெட்டு,
    மனம் என்று thought process'யைத்தான் சொன்னேன். 'இல்லாத'மனத்தை லேசாக்கத்தான் 5 மைல் ஓடுகிறீர்களா என்ன?
    :)
    //

    :-))))))


    அதாவது, இல்லாத மனம் மனப்பயிற்சி இல்லாமலேயே உடல் பயிற்சியில் இலேசாகிறது. எனவே மனப்பயிற்சிகளை நம்ப வேண்டாம்.

    :-))

    ReplyDelete
  43. To practise yoga and meditation you dont need a spiritual guru, a DVD by Shipla Shetty would do :).But in the name of condemning 'gurus' who have commercialised what all they do let us not ignore the dialog between scientists and spiritual gurus like Dalai Lama or research by scientists on compassion, mental health and meditation.Rudran stops at one level without going further. Reality is complex and in countries like India there are
    merits and demerits in using indigenous healing traditions and healers in mental health. Sudhir Kakkar has written about these healers.Cross-cultural psychiatry is another area where dialogs and comparative studies are common.Criticisng Juggi Vasudev or anyone else is fine.But dont stop with that. It is better to suggest meditation and breath exercises that need no subservience to any guru.In that Buddhist meditation and yoga can help for atheists and agnostics also.Karunanidhi learnt yoga at Krishnamachariya Yoga Mandiram from Desikarcharyar.His father Krishnamacharya taught yoga for decades.That yoga does not demand worship of any god or deity, nor imposes any faith on false gurus and false prophets. Rudran stops at the level of criticism and that is not sufficient.
    It is easy to criticise but suggesting alternatives is not all that difficult in
    this case.I think the problem for persons like Rudran or Gnani is that they think that their rationalist and atheist image would be affected if they go beyond denials and recommend practices that are faith-neutral.
    Perhaps Gnani is unaware and Rudran is aware
    and unwilling to suggest them. This comment has been posted as an annony comment because what I say is more important than who am I.
    I am more comfortable in expressing myself in English and my mother tongue is Tamil.

    ReplyDelete
  44. the reason why i prefer to anwer comments by persons who are showing their names is to engage in a conversation in which others can participate.
    and where does gnani come into this?
    alternative for what? for all the psychiatric problems and illnesses there are medicines. karunanidhi with all the yoga is finding it difficult to even walk without support. in what way has it helped him? to further his interests politically? well, to keep you body fit, go to a gym. to keep your mind at ease listen to music.

    ReplyDelete
  45. //ஜேகே வை ஆன்மிக லிஸ்டில் சேர்க்க முடியாது. அவர் ஒரு அக்னாஸ்டிக். //


    யார சொல்றீங்க ! அவரொன்னும் அக்னாஸ்டிக் இல்ல ... அவரு எம் பி !

    ReplyDelete
  46. dai neeye oru pshyco, neeyellam kadavul pathy pesaathe. Mudhal fraudugale psychiatric than. Evenugala vayuthu polappukku Ooora Yemathittu irukkanuga.
    Ivanuga ella therunja yegambaranga.Yevano eluthivachatha patuchittu Olaravanuga.
    Dai Rudra nee mudhalla Kilpauk hospital poda.

    ReplyDelete
  47. நாராயணா ! இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல !

    மருந்தடிச்சு கொல்லுங்கடா

    ReplyDelete
  48. Dai Rudra nee mudhalla kilpauk hospital poda.//

    ஹலோ மிஸ்டர் அனானி....உங்களைப் பார்க்க அவ்ளோ தூரம் எல்லாம் சார் வர முடியாது.

    வேணும்னா நீங்க அவுரு க்ளினிக்குக்கு போய் பார்த்துக்கிடுங்க..ஏன்னா , உங்க வியாதி முத்தினா ரொம்ப ஆபத்து.

    ஹிஹி

    ReplyDelete
  49. i am allowing these comments so that everyone can see how some react. you need not answer those who remain anonymous with cowardice. it is their trait!

    ReplyDelete
  50. I want to share my experiance. I had mind related issues. so many confusion. I attened
    Sudarsan kriya, Nithya dyan. I got releief. I heard all my friends saying that i become so happy. We can't blame all saints as bad. There are good and bad like other fields(medicine,...)

    samiyars do reaserch in inner science. So people who looks outward cant see what they tell.

    Its like explaining things to a person who is blind by birth.

    ALSO CURRENT WORLD NEEDS LOTS OF SAINTS. LOTS OF STRESS AND VOILENCE.

    ReplyDelete
  51. ஓஷோவை எப்படி மேதை என்கிறீர்களோ? அமெரிக்க சரித்திரத்திலேயே அவர் ஆட்கள் பண்ணியதுதான் ஒரே பயோ டெர்ரிச தாக்குதல் என்கிறது விக்கிபீடியா!

    ReplyDelete
  52. டாக்டர் , ஆன்மிகத்துக்கு டுடோரியல் காலேஜ் நடத்தும் சாமியார் கூட்டம் பெருகி விட்டது..People are frantic about quick fix solutions.. விவேகானந்தர் சரியாகத்தான் சொன்னார்.. பாரதத்தில் மக்களை ஏமாற்ற கூட ஆன்மீகத்தின் பெயரால் தான் இயலும்..மகாபெரியவரரும் ரமணரும் நடந்த மண்ணில் நித்யானந்தர்கள் புரள்கிறார்கள் பக்தைகளோடு!நாமும் அங்கலாய்ப்போடு
    அடுத்த சாமியாருக்காய் காத்திருப்போம்.
    மோகன்ஜி,ஹைதராபாத்

    ReplyDelete
  53. உங்கள்பதிவு அருமை நம்ம மக்களுக்கு எதுவுமே கொஞ்சம் மெதுவாத்தான் புரியும் பழையநம்பிக்கைகள் அம்மிபோல் உக்காந்துருக்கு மெதுவாதான் நகதனும்ு ஏழு மலை
    ஏழு கடல் தாண்டி சாகசம் புரிவதுபோல் தான் உங்க படிப்பு
    என்முதுகை என்னால் பாக்க முடியாது அதுபோல் தான் மனநல சிகிச்சையும்
    நோய்க்கு மருந்துண்டு
    குறைபாடுக்கு நிவர்த்தி உண்டு
    அது யாரிடம் கிடைக்கும் என்று தெரியவே கொஞ்சம் அறிவு வேணும்
    இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா மக்களுக்கு தெரியவருது

    ReplyDelete