Friday, November 20, 2009

வலிகளை அழகாக்கிய கவிஞர்


வலிகள் எப்போதும் கண்களில் கலங்கும்..வலிகளின் நினைவுகள் அப்படியல்ல.
இங்கே கணிணிமுன் உட்கார்ந்து மெதுவாக எழுத்துக்களைத் தட்டித்தட்டி உருவாகிக்கொண்டிருக்கும்போது, வழக்கத்தை விடவும் வேகம் குறைவாக இருக்கிறது. பிற்பகல் தபாலில் இரண்டு புத்தகங்கள் வந்தன. பிரித்துப்பார்த்து, அங்கங்கே மேய்ந்து விட்டு, இதோ என் மேஜையின்மீது தான் வைத்திருக்கிறேன். கணிணியின் திரையிலிருந்து அடிக்கடி கண்கள் அந்த புத்தகங்களை ஆசையோடு பார்க்கின்றன.
Anne Sexton ன் இரண்டு புத்தகங்கள். ஒன்று அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பு, மற்றது அவர் பலருக்கு எழுதிய கடிதங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட சுயசரிதை. அவரது கவிதைகள் 36 ஆண்டுகளாகப்பரிச்சயம்.
அவை கல்லூரி நாட்கள். பகலிலேயே கல்லூரியை விட்டு கிளம்பி விடுவேன்..அமெரிக்க நூலகம், குளிரூட்டப்பட்டு இதமாக இருக்கும். அங்கே தான் Langston Hughes, Joyce Carol Oates, Sylvia Plath..ஆகியோரை முதலில் படித்தேன்.. ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் woodlands drive-in. மூலையாகப்பார்த்து ஒரு மேஜையில் அமர்ந்துவிட்டால் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். சாப்பிட எதையும் வாங்கவேண்டியதுமில்லை..மாலையில் யாராவது நண்பர்கள் வந்து காபி வாங்கிக்கொடுக்கும் வரை கவிதைகளைப்படித்துக்கொண்டிருக்கலாம். வரும் நண்பர்களிடம் பேசவும் அது உதவும்.. அந்த எழுத்துக்கள் பசியைப்போக்கின..
எவ்வளவு வீம்புடன் எழுதுவதுதான் முக்கியம் என்று முயன்றாலும் Anne Sexton மீதுதான் மனம் தாவுகிறது.
 Anne Sexton  வலிகளை அழகாக்கிய கவிஞர். இன்று பலவருடத்தேடலுக்குப்பின் அவரது புத்தகங்கள் அவரது அழகான எழுத்துகளை மட்டுமல்ல..என் இளமையை அதன் தேடலை, சந்தித்த வலிகளை சிந்தித்த விஷயங்களை..செய்துகொண்ட சபதங்களை, சகித்துகொண்ட பொய்களை, சுமந்துகொண்ட கனவுகளை..ஓர் இனிதான இதமான நினவுமீட்டலின் சுகராகமாக உருவாக்கும்போது...வலிகள் யாவும் வெறும் வார்த்தைகளாகிப்போகின்றன..
எதிரே கவிதை இருக்கும்போது, கட்டுரை எப்படி வரும்? கவித்துவ விதைகள் உள்ளே திமிறியெழக்காத்திருக்கும்போது.. கண்கள் கொஞ்சம் நீரூற்றிக் காத்திருக்கவேண்டும்

5 comments:

  1. Beautiful post...could almost see how you would have sat in Woodlands devouring the poems...in a greener city; and perhaps a more political and a self-respecting city too...:)

    ReplyDelete
  2. நண்பர்கள் கவனத்திற்கு

    தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

    ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
    காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?

    ReplyDelete
  3. /எவ்வளவு வீம்புடன் எழுதுவதுதான் முக்கியம் என்று முயன்றாலும் Anne Sexton மீதுதான் மனம் தாவுகிறது/
    சமயத்தி்ல் இப்படித்தான் அடம் பிடிக்கும் மனம்...

    ReplyDelete
  4. ”கவித்துவ விதைகள் உள்ளே திமிறியெழ காத்திருக்கும் போது........”மனமும் இளக கண்கள் நீரூறக் காத்திருக்க வேண்டும்......

    ReplyDelete