Wednesday, May 27, 2009

ஒவ்வொன்றும் பொய்யாக மாறும்போது

ஏனோ இன்று காலை எழும்போதே மன‌த்துள் இந்தப்பாடல் ஓடியது..
இத்தணைக்கும் எனக்கு மிகச்சமீபத்தில் பெரிய இழப்போ அதன் தொடர்பான சோகமோ ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. நான் கண்ணாதாசனின் தீவிர ரசிகன்தான் என்றாலும், தினமும் காலை அவன் பாட்டோடு ஆரம்பிக்கும் வெறியெல்லாம் எனக்கு இல்லை.
பின் ஏன்?
ஒருவேளை இன்று காலை என் குடும்பக்கோயிலின் கும்பாபிஷேகம் ஒரு காரணமாயிருக்கலாம்..குடும்பம் பல காலமாய் சென்றுவந்த கோவிலே தவிர அது ஒன்றும் என் குடும்பச்சொத்து அல்ல..அங்கே ஏதோ சரியில்லை என்று தோன்றினாலும், அது குறித்து எனக்கு ஒன்றும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை (என்று நினைக்கிறேன்).

பின்?
சில நேரங்களில் காரணமேயில்லாமல் ஒரு சோகம் நம்மைக்கவ்வி, விழியில் இருட்டடிப்புச்செய்யும்.
அது ஒரு நோயின் அறிகுறி..இதற்கு மருத்துவவுதவி உண்டு என்றெல்லாம் தெரிந்தாலும்...
இப்போது தோன்றுவது இதுதான்..
ஊரேது உறவேது உற்றார் ஏது...
உறவெல்லாம் பகையாக மாறும்போது,
ஒன்றேது இரண்டேது மூன்றுமேது,

ஒவ்வொன்றும் பொய்யாகிப்போகும்போது"


ஈழத்தமிழனின் மனநிலை போலவும் இவ்வரிகள் தொனிக்கின்றன‌..டெல்லியில் மகுடாபிஷேகம், மக்கள்வதையில் அசிரத்தை, பொய்களின் வியாபார முழக்கம், போலி அரசியலின் பம்மாத்து..ஒவ்வொன்றும் பொய்யாகிப்போகும்போது

பாடலை நான் தேடிய சிரமம் உங்களுக்கு வேண்டாமென்றே இங்கே சுட்டி

10 comments:

  1. மனதை தொடும் பதிவிது

    ReplyDelete
  2. //காரணமேயில்லாமல் ஒரு சோகம் நம்மைக்கவ்வி, விழியில் இருட்டடிப்புச்செய்யும்.//

    ஆம்

    ReplyDelete
  3. ருத்ரனா இப்படி எழுதுவது?
    இதைப் படித்ததும் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் அடிக்கடி தன் பேச்சுக்களில் சொல்லும்:
    “மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்;
    கங்கையே சூதகமானால்..?”
    என்ற வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  4. //ஈழத்தமிழனின் மனநிலை போலவும் இவ்வரிகள் தொனிக்கின்றன‌..டெல்லியில் மகுடாபிஷேகம், மக்கள்வதையில் அசிரத்தை, .....ஒவ்வொன்றும் பொய்யாகிப்போகும்போது//

    நித்தம் நடக்கும் நாடகங்கள் பல ,
    நினைவில் நிற்பவை வெகு சில மட்டும் !!
    நிஜத்தின் ஆழத்தை அறியா பாமரர்கள் நாம் ..
    மொத்தத்தில் குழம்பி நிற்கும்கோமாளிகள்தாம் நம்நிலை!!

    நல்ல சிந்தனையை தூண்டிய பதிவு!!
    keep goin !!

    ReplyDelete
  5. DEAR DOCTOR SIR, DISTURBING POST.HENCE NOT CONVINCING .BECAUSE WE WERE ONLY DEAF WHILE HEARING AT THE ROTTEN POLITICIANS.AND DUMB WHILE THERE ARE CHANCES TO QUESTION THEM.

    ReplyDelete
  6. But u r the expert to control and stop the negative thoughts.

    If you are not able to rejuniviate , who else can do?. Think about us.

    ReplyDelete
  7. i thank all those who care.. i care to do so.. it makes life better when you care

    ReplyDelete
  8. வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,

    அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

    நன்றி
    தமிழ்ர்ஸ்

    ReplyDelete
  9. //சில நேரங்களில் காரணமேயில்லாமல் ஒரு சோகம் நம்மைக்கவ்வி, விழியில் இருட்டடிப்புச்செய்யும்.
    அது ஒரு நோயின் அறிகுறி.//

    Same Happens to me sometimes.

    ReplyDelete
  10. நல்ல பயனுள்ள பதிவு

    ReplyDelete