Wednesday, March 14, 2012

எதுதான் எது?


நான் வேறு நான், தேடினால் தொலைந்து போகிறேன்...
என்று பத்தொன்பது வயதில் எழுதிய நான் இன்று, 
நான் வேறு நான் ஆகி விட்டதைத் தெரிந்து கொண்டதால் வெட்குகிறேன்.

வறுமையில் இருந்த வேகம், வசதி கூடுமுன் இருந்த வீரம், சௌகரியத்தில் சோம்பலாகிவிட்டது.

புலம்புவதற்கு இரவின் தனியான தலையணை போல  கணினியின் வெளிப்பாட்டு வசதி...
 தெரியாதவர்களும் சில நேரம் எழுதியதைப் புரியாதவர்களும்
சொறிந்து வளர்த்த ஸோஷ்யல்’  அரிப்பில் இன்னும் ஆக்ரோஷ அவதாரம் தொடர்கிறேன்.
இங்கே புலம்பி போர்க்குரல் எழுப்பி கூடங்குளம் மூடப்படுமா இலங்கையை மன்+ஸோ கூட்டம் விட்டுக்கொடுக்குமா?
ஆனாலும் நானும் இங்கேதான் புலம்பவும் போர்க்குரல்களுக்கு ஆதரவும் தர முடிகிறது..

கையாலாகாது கை பிசைவது போல.
வெட்கத்தை சோகம் மறைப்பது போல..
நாடகமாடுவதை நடிகனே ரசிப்பது போல...

16 comments:

  1. RkR க்குமட்டும் சொற்கள் எப்படி ஒடி வந்து பணிகின்றன பாருங்கள்...

    ReplyDelete
  2. நடை அபாரம் சார்,,,

    ReplyDelete
  3. //வறுமையில் இருந்தவேகம், வசதி கூடுமுன் இருந்தவீரம், சௌகரியத்தில் சோம்பலாகிவிட்டது.//

    உண்மையான வரிகள் என் வாழ்விலும்

    ReplyDelete
  4. /கையாலாகாது கை பிசைவது போல.
    வெட்கத்தை சோகம் மறைப்பது போல..
    நாடகமாடுவதை நடிகனே ரசிப்பது போல.../

    சாட்சி பாவத்தோட கொடுமையே இதுதானோ ...அப்பறம் 'என்ன' தேடி என்ன ஆகபோகுது.

    ReplyDelete
  5. தனக்குள்ளே தன்னை ஒருவர் இப்படி பார்த்து கவனிக்க முடிகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
  6. புலம்புகிறவர்களை நானாக்கி புலம்பும் ருத்ரன் புலம்பல்களை போர்க்குரல் ஆக்க புனைகிறார். புனைவு வினையாகும்.

    ReplyDelete
  7. //கையாலாகாது கை பிசைவது போல.
    வெட்கத்தை சோகம் மறைப்பது போல..
    நாடகமாடுவதை நடிகனே ரசிப்பது போல.//

    மிகச்சரியான வார்த்தைகள் சார். நாம் நம் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டிருப்பவை, முடிவில்லாதவை இவை...

    ReplyDelete
  8. நிஜமாகவே அருமை

    ReplyDelete
  9. மன் + ஸோ விட்டாலும் டெஸோ விடாது போலும்.

    ReplyDelete
  10. Dear Dr. - Your posts are fantastic. Please keep up your writing and keep us alive.

    Nandri
    Senthil Nathan M

    ReplyDelete
  11. Dear Dr. - Your posts are fantastic. Please keep up your writing and keep us alive.

    Nandri
    Senthil Nathan M

    ReplyDelete
  12. வறுமையில் இருந்த வேகம், வசதி கூடுமுன் இருந்த வீரம், சௌகரியத்தில் சோம்பலாகிவிட்டது.

    Velaiyil kavam selvathai vida, matra visayangalil kavanam selgirathu En?

    ReplyDelete
  13. " வறுமையில் இருந்த வேகம், வசதி கூடுமுன் இருந்த வீரம், சௌகரியத்தில் சோம்பலாகிவிட்டது."

    1419. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    Volume :2 Book :24

    ReplyDelete
  14. "வறுமையில் இருந்த வேகம், வசதி கூடுமுன் இருந்த வீரம், சௌகரியத்தில் சோம்பலாகிவிட்டது."

    but, still we are not trying to get back to that mentality... because we like....!!!

    ReplyDelete
  15. True revelations of his sub concious thoughts which was made visible to touch the conscious of many including me.Hope his sense of expression will shake the inner sense of everyone to contribute the best of his ability to the betterment of humanity to keep the balance of value system.P.Balasubramanian

    ReplyDelete
  16. True revelations of his sub concious thoughts which was made visible to touch the conscious of many including me.Hope his sense of expression will shake the inner sense of everyone to contribute the best of his ability to the betterment of humanity to keep the balance of value system.P.Balasubramanian

    ReplyDelete