Saturday, November 12, 2011

நெட்டி முறிப்பு


வெட்டி முடிக்க வேலையில்லாமல் நெட்டி முறிப்பது போல சில நேரம் எண்ணங்கள்...
இது போல....

mind bargains for dreams when eyelids beg for sleep

தூங்க இரக்கும் விழிகளிடம்  கனவு வேண்டும் என்று பேரம் பேசுகிறது மனம்.




மொழிக்கேற்ப விரிந்து சுருங்கும் வார்த்தைகளில் எண்ணங்கள் கேலிச் சித்திரமாய் நிஜங்களைக் கோடிடுகின்றன.

பொய்கள் சுலபமாக கவிதைகளாகின்றன..... 


இதை ஒரு கவிதையாகவும் ஆக்கிக்கொள்ளலாம்....
நான் ஆக்கவும் இல்லை, அள்ளிப்படைக்கவும் இல்லை...
இது சும்மா, ஒரு சோம்பலின் நெட்டி முறிப்பு  

இன்னும் பேரம் படியவில்லை என்பதால் எழுத்தின் சப்தம்

9 comments:

  1. கவிஞன் என்றால் அருமை என்றிருப்பேன், நீங்களோ ருத்ரன்.. என்ன சொல்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  2. கனவுகளுக்கு அனுமதி தராத உண்மையான உறக்கத்தின் போது, மனமும் உறங்கிவிடும். ஆனால், அது ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே கிட்டும் அனுபவம். மீதி நேரங்களில் இப்படி நெட்டி முறிக்கலாம். பகிர்விற்கு நன்றி சார்.

    ReplyDelete
  3. "மொழிக்கேற்ப விரிந்து சுருங்கும் வார்த்தைகளில் எண்ணங்கள் கேலிச் சித்திரமாய் நிஜங்களைக் கோடிடுகின்றன."

    தமிழின் அழகியல் உரைநடையில்.....நான் பழகவேண்டும்....பழகுவேன்....

    ReplyDelete
  4. இசை ,
    ஓவியம்,
    கவிதை எல்லாம் ஒரே வகை தான் ,
    புரிந்தவர்க்கு அது இசை ,
    புரியாதவர்க்கு அது வெறும் சத்தம் .
    புரிந்தவர்க்கு அது ஓவியம் ,
    புரியாதவர்க்கு அது வெறும் வண்ணகள் கொண்டு செய்த கிறுக்கல் .
    புரிந்தவர்க்கு அது கவிதை ,
    புரியாதவர்க்கு அது வெறும் எழுத்து .

    எனக்கு இது கவிதையாகவே தெரிகிறது ..
    கவிதை அருமை sir..

    ReplyDelete
  5. பொய்கள் கவிதைகளாகும்
    பொன்மானே எனும்போது

    வெடித்து தெறிக்கும்
    வேதனைகளை சொல்லும்போது

    அது
    முடித்து வைக்கும்
    முயற்சியுடைய யாருக்கும்

    நெட்டி முறிக்கையில்
    நிதானம் தவறும்
    சமயத்தில்

    தவறெனில் மன்னிக்க

    ReplyDelete
  6. Sir, can you please write about your views about 'Ezham Arivu' Bodhidharma? I first came to know about Bodhidharma from your book 'Thedathey' several years back.

    ReplyDelete
  7. அப்படி ஒரு பேரம் நிகழ்வதால் இன்னும் விழித்திருக்கிறேன்( மணி இரவு 12.45). “எனதைப் போல் இன்னொரு அனுபவம்” என்கிற நிம்மதியில் அநேகமாக இப்பொழுது உறங்க முயற்சிக்கலாம்...எப்படி கிளம்புவது மேலும் படிக்கும் ஆர்வத்தை மறந்து....?

    ReplyDelete
  8. கவிதை இல்லையா ?
    அப்படியானால் நான் எழுதுவது எல்லாம்?
    தயவு செய்து என் கவிதைகளை படித்து விடாதீர்கள்.

    ReplyDelete