Tuesday, October 26, 2010

நாத்திகமும் சுயமரியாதையும்


இது முதல் பகுதி அடுத்த பகுதி எழுதும் அவசியம் வரும்வரை.


நாத்திகமும் சுயமரியாதையும், நானும் என்றே இந்தத் தலைப்பு இருந்திருக்க வேண்டும். ஒரு நண்பரின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்திவிட்டு வந்தால், நான் மணமக்களை மட்டுமே பார்ப்பேன்- அங்கிருக்கும் புரோகிதனை அல்ல. தெரிந்தவர் தென்பட்டால் பேசுவேன். நண்பர்களுடன் சிரிப்பேன். என்னை எதிரியாக நினைத்துச் செயல்பட்டவர்களைத் தவிர்ப்பேன்- அச்சத்தினால் அல்ல, நாகரிகத்தினால். எதிர் கருத்து உள்ளவர்களுடனும் அம்மாதிரி நேரங்களில் விவாதம் தவிர்ப்பேன், அச்சத்தினால் அல்ல, நாகரிகத்தினால்.

நாகரிகம் தான் சுயமரியாதை- எனக்கு.

எனக்கு என் சுயமரியாதை மீது தீவிரமான ஈடுபாடு உண்டு. சுயமரியாதை என்பது உண்மை. அது இல்லாதவன் நடமாடினாலும் பிணம்தான். தன்னைத்தானே வெளிப்படுத்திகொள்வதுதான் சுயத்தின் மீது ஒருவனுக்கு இருக்கும் மரியாதை. நாகரிகத்திற்காகத் தன் விருப்பிற்கு மாறாக நடித்தாலும் அது சுயமரியாதை ஆகாது. இதை இப்போதைக்கு ஒப்புக்கொண்டே மேலும் எழுதத்துணிகிறேன்.
எது சுயம்? அது எப்போதிலிருந்து, எது வரை?
என் முகமும் விலாசமும் எல்லார்க்கும் தெரிவது போல என் அகமும் விகாரமும் தெரிவதில்லை- வெளிப்படுத்தாதலால். அப்படியெனில் எது சுயம்- இருப்பதா, இல்லை இருப்பதாய்க் காட்டுவதா? அதைப் பேணும் பொருட்டே சுயம் தனக்குத்தானே மதிப்பளித்துக்கொள்கிறது. (வள்ளலாருடன் எனக்கு உறவு வேண்டும்.)

சுயத்தை சமரசம் செய்து கொள்ளலாமா? செய்துகொண்டால் சௌகரியமாகக் கூட இருக்கலாம். சுகமாக இருக்க முடியாது. சௌகரியமும் சுகமும் ஒன்றா?

இது சமூகம். இங்கே என்னைத்தவிரவும் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒத்திசைவதே வாழ்க்கை. இது தான் கற்பிக்கப்பட்ட ஒன்று. இது தான் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் அடிப்படை விதி. இதை மாற்றுவதா இல்லை மாறுவதா என்பதே சுயமரியாதையின் அடிப்படைக் கேள்வி- எனக்கு.அந்தந்தநேரத்துகேற்ப என்பது சிக்கலான ஒன்று. அந்தந்த நேரங்கள் யாவும் ஒன்றாய் அமைவதில்லை. அப்படியென்றால் எந்த நேரத்தில் எது நான்?

என் கருத்தைத் திணிக்காமல், பிறர் மகிழ்ச்சியைக் கெடுக்காமல், ஆதிக்கம் காட்டாமல், லாபத்திற்காகவென்று மட்டும் செயல்படாமல், அன்பாக நடிக்காமல்,பண்பை மறக்காமல் செயல் படுவதே நான். முழுதாய்ச் சிரிப்பவனும், முழுதாய் ஆத்திரப்படுபவனுமே நான்.
எனக்கு உபநிஷத்களும் வேதமும் தெரியும்  ஆச்சாரியனாக நடிக்குமளவு- நான் பிராமணனை துவேஷிப்பதில்லை- பார்ப்பனர்களை மட்டுமே- இது புரியாவிட்டால் நாத்திகமும் சுயமரியாதையும் ஒன்றாகவே தெரியும்.    இன்னும் பின்.....

29 comments:

  1. //என் கருத்தைத் திணிக்காமல், பிறர் மகிழ்ச்சியைக் கெடுக்காமல், ஆதிக்கம் காட்டாமல், லாபத்திற்காகவென்று மட்டும் செயல்படாமல், அன்பாக நடிக்காமல்,பண்பை மறக்காமல் செயல் படுவதே நான். முழுதாய்ச் சிரிப்பவனும், முழுதாய் ஆத்திரப்படுபவனுமே நான்//

    well said sir

    ReplyDelete
  2. //
    முழுதாய்ச் சிரிப்பவனும், முழுதாய் ஆத்திரப்படுபவனுமே நான்.
    //

    இது மாதிரி நானும் இருக்க விருப்பம் ! ஆனா முடியலை.

    ReplyDelete
  3. சுயமரியைதைக்குள் தீர்வை தேடினால் சொல் ஒன்றும் செயல் ஒன்றாகவும் இருந்து கொள்ள முடியும் இல்லையா

    ReplyDelete
  4. //சுயத்தை சமரசம் செய்து கொள்ளலாமா? செய்துகொண்டால் சௌகரியமாகக் கூட இருக்கலாம். சுகமாக இருக்க முடியாது. சௌகரியமும் சுகமும் ஒன்றா?//

    அருமை.. உண்மையும் கூட

    ReplyDelete
  5. சௌகரியமும் சுகமும் ஒன்றா?
    Well, the chasm between these two is the fulcrum on which humans suffer.

    ReplyDelete
  6. என்னால் புரிந்து கொள்ள முடியாத விசயங்கள்
    1. மாற்றுக் கருத்துடனான விவாதங்களை தவிர்ப்பது சில பொழுதுகளில் நாகரீகமானது
    2. சபை நாகரீகத்தை சுயமரியாதை என பொருள் கொண்டு இருப்பதால், சுயத்தை சபையிலும் பெற்றோரிடமும் தெரிவிக்காமல் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுத மாத்திரம் உபயோகிப்பது சிலருக்கு சௌகரியமாக இருப்பது பற்றிய உளவியல் கூறுகள்
    3. ஒத்திசைவு கற்பிதம் என்றால் கற்பிதம் தனையே விதியாக ஏற்பது சரிதானா
    4. காலத்திற்கு தக்கபடி சுயத்தை மாற்றும் நபர்களை சந்தர்ப்பவாதிகள் என்பது சரி இல்லையா
    5. தான் திணிப்பது இருக்க, தன் மீது திணிக்கப்படும் கருத்துக்களை எதிர்ப்பதும் கூட சுயமரியைதையை காப்பாற்றும் செயல் இல்லையா

    ReplyDelete
  7. பின்னூட்டங்களை அறியும் பொருட்டு.

    ReplyDelete
  8. தெம்பளித்தீர்கள் சார்!

    ReplyDelete
  9. unmaithan ethayum thiniththal kutathuthan
    polurdhayanihi

    ReplyDelete
  10. //எது சுயம்- இருப்பதா, இல்லை இருப்பதாய்க் காட்டுவதா?//
    சிந்திக்க வைக்கின்றன. சுயங்களில் அழுக்குகள் இருந்தால் சுயமரியாதை இல்லாதவனா? அல்லது சுயமரியாதை குறைந்தவனா?

    ReplyDelete
  11. இந்த விவாதங்களுக்கு நான் மதிப்பளிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் உங்கள் கட்டுரையின் நடுநிலைக்கு நான் மதிப்பளிக்க வேண்டும்..

    காதல் என்பதே அளப்பரிய விட்டுகொடுக்கும் மனதுடன் இருவர் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வு. ராஜன் நாத்திகவாதியாக இருந்தாலும் தான் காதலித்த பெண்ணின் விருப்பத்தை மதிப்பதுதான் காதலின் மகத்துவத்தை புரிந்தவர்கள் செய்யும் செயல்..

    தன் வாழ்நாள் முழுவதும் தன் மொத்த விருப்பு வெறுப்புகளை பகிர்ந்துகொள்கிற ஒருத்திக்காக கொள்கைகளை விட்டுகொடுப்பது தவறாகாது. இதனை பற்றி விமர்சிப்பது என்பது நாத்திகம் பற்றிய பார்வைக் குறைபாடு ஆகும்.

    என் ஆதரவு ராஜனுக்கும் - ரேவதிக்கும் எப்போதும் உண்டு.. தயவு செய்து போலி ஆதிக்கம் மற்றும் நாத்திகவாதிகள் கொஞ்சம் இந்த விசயத்தில் விலகியிருங்கள்..

    ReplyDelete
  12. //எனக்கு உபநிஷத்களும் வேதமும் தெரியும் ஆச்சாரியனாக நடிக்குமளவு- நான் பிராமணனை துவேஷிப்பதில்லை- பார்ப்பனர்களை மட்டுமே//

    எனக்கு இவை எதுவும் தெரியாது. எனவே யாரையும் துவேஷிப்பதில்லை.
    நான் சரியா..சொல்லுங்களேன்..

    ReplyDelete
  13. //நடிக்காமல்// என்ற ஒற்றை வார்த்தை இந்த மொத்த பதிவின் பொருளை கொண்டு போய் விடக்கூடிய சக்தி கொண்ட வார்த்தை.

    என் முகத்திரையை நானே கிழித்து என்னை நானே முழுதாய் பார்க்கும் பக்குவம் எனக்கு வந்துவிட்டால், என்னை புரியாதவர்களுக்கு புரியவைக்க அல்லது என்னை புரிந்தவர்களுக்கு என் செயல்களை தனியாக விளக்க நான் தனியாக நேரம் செலவுசெய்ய தேவை இல்லை...!

    அருமையான ஒரு பகிர்வு, இன்னும் தொடருங்கள்.

    ReplyDelete
  14. //நாத்திகமும் சுயமரியாதையும், நானும் என்றே இந்தத் தலைப்பு இருந்திருக்க வேண்டும். ஒரு நண்பரின் திருமணத்திற்குச் சென்று வாழ்த்திவிட்டு வந்தால், நான் மணமக்களை மட்டுமே பார்ப்பேன்- அங்கிருக்கும் புரோகிதனை அல்ல. தெரிந்தவர் தென்பட்டால் பேசுவேன். நண்பர்களுடன் சிரிப்பேன். என்னை எதிரியாக நினைத்துச் செயல்பட்டவர்களைத் தவிர்ப்பேன்- அச்சத்தினால் அல்ல, நாகரிகத்தினால். எதிர் கருத்து உள்ளவர்களுடனும் அம்மாதிரி நேரங்களில் விவாதம் தவிர்ப்பேன், அச்சத்தினால் அல்ல, நாகரிகத்தினால்.

    நாகரிகம் தான் சுயமரியாதை- எனக்கு.//

    இங்கேயே பதிவும் முடிந்துவிட்டது :))

    ReplyDelete
  15. ***என் கருத்தைத் திணிக்காமல், பிறர் மகிழ்ச்சியைக் கெடுக்காமல், ஆதிக்கம் காட்டாமல், லாபத்திற்காகவென்று மட்டும் செயல்படாமல், அன்பாக நடிக்காமல்,பண்பை மறக்காமல் செயல் படுவதே நான்.**

    Dr. R!

    What can I say? I am not sure what made to write this, NOW? Your post somehow caught me as something was bothering me recently.

    Sometimes I do things for friends, society, and the loved ones which I dont really believe in . May be because I dont want to make a "big scene" there about what I believe. I think every honest human-being does that at times. Any reasonable man will understand why I am doing something which I dont really believe in? . I expect "educated people" are civilized enough to understand my "situational fake belief" or whatever you want to call that. It bothers me/rather irritates me when someone uses such a situation and try to theorize wrongly about me! However, I am ready to honestly answer the individual that I do things which I dont believe in and this is one of those situations!

    I hope I made some sense here! :)

    ReplyDelete
  16. சுயத்தை சமரசம் செய்து கொள்ளலாமா? செய்துகொண்டால் சௌகரியமாகக் கூட இருக்கலாம். சுகமாக இருக்க முடியாது.

    நிச்சயமாக சுய நலத்திற்க்காக சமரசம் செய்ய வேண்டும் என்றால் நமக்கு கொள்கையே தேவையில்லை.

    பொது நலத்தில் சமரசமே உகந்தது.

    நன்றி.

    ReplyDelete
  17. //நான் பிராமணனை துவேஷிப்பதில்லை- பார்ப்பனர்களை மட்டுமே- //

    முற்றிலும் மாறுபடுகிறேன். சூத்திரன் பிராமணன் என்று எவனும் இல்லை, பார்பனர்கள் தாழ்த்தப்பட்டோர் உண்டு. எனவே நான் பார்பனரை துவேஷிப்பதில்லை பிராமணர்களை மட்டுமே என்றிருக்க வேண்டும், ஏனெனில் பிராமணன் என்பது உருவாக்கிக் கொண்ட பிம்பம்.

    ReplyDelete
  18. Whatever I do is acceptable, as long as it helps four people - Nayagan (sorry I do not have Tamil font)

    But the problem is, the four people are myself, my wife and my two kids.

    ReplyDelete
  19. நல்ல கருத்துக்கள்..சுயமரியாதையை பற்றி பேசறப்ப, எதுக்கு பார்ப்பனியத்தை பத்தி பேசுறீங்க?. பிராமனர்களுகுள்ள நெறைய ஏற்ற தாழ்வுகள் இருக்கும்-ல. சுயமரியாதை எல்லா மனுஷனுக்கும் பொது தானே.

    ReplyDelete
  20. உண்மை உண்மை
    நெஞ்சை தொட்ட கருத்து

    ReplyDelete
  21. சக மனிதனின் உரிமைகளைப் பாதுகாப்பவன்தான் சுயமரியாதையுடன் வாழ தகுதி படைத்தவன்.

    ReplyDelete
  22. அன்று உங்களது செய்கைகளை கவனித்து உள்வாங்கிக்கொண்டேன் சார் , நன்றி

    ReplyDelete
  23. i will answer all queries tomorrow

    ReplyDelete
  24. "அந்தந்தநேரத்துகேற்ப என்பது சிக்கலான
    ஒன்று"
    இந்த வர்களை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி போட்டிருக்கலாம்,,சில அதிமேதாவிகளின் மண்டையில் உறைக்குமாறு,,
    இதை நாங்கள் சொன்னால் நாங்கள் போலி ஆத்திகவாதியாகவோ நாத்திகவாதியாகவோ முத்திரை குத்தப் படுகிறோம்
    நல்ல கருத்துகள் சார் ,,நன்றி

    ReplyDelete
  25. //எது சுயம்- இருப்பதா, இல்லை இருப்பதாய்க் காட்டுவதா? அதைப் பேணும் பொருட்டே சுயம் தனக்குத்தானே மதிப்பளித்துக்கொள்கிறது.//

    நல்ல பதிவு / ஆரம்பம் டாக்டர். ஒரு நபிமொழியிலும் தன் சுயத்தை இழந்து மற்றவர்களுக்காக (அவர்களை சிரிக்க வைக்கும் பொருட்டு அல்லது அவர்களின் நன்மதிப்பை பெறும் பொருட்டு) கோமாளியாக மாறுபவர்களை முஹம்மது நபியவர்கள் எச்சரித்துள்ளனர். தன் சுயத்தை விட்டுக்கொடுத்து பெரும் மரியாதை, மரியாதையே அல்ல. இதுவே உண்மை. Well started post, I wish if it could be elaborated on 'maintaining one's self' all time :)

    ReplyDelete
  26. உங்களின் முழுதாய்ச் சிரிப்பவன் நான் என்பதில் உடன்படுகிறேன். ஆனால் முழுதாய் ஆத்திரப்படுபவனில் அல்ல. ஆத்திரம் அடக்கு என்ற ஔவையின் வரியில் எனக்கு நம்பிக்கை அதிகம். பிறர் மகிழ்ச்சியைக் கெடுக்காமல் நம் முழு ஆத்திரம் கண்டிப்பாய் சாத்தியமில்லாததால்.

    ReplyDelete
  27. சுயம் என்பது சந்தர்பம் சாராததாய் இருப்பதே இல்லை பல சமயங்களில்...

    ReplyDelete
  28. அருமையான பார்வை, டாக்டர்

    ReplyDelete