நவராத்திரி முடிந்தபின், நாயகி வருவாளா?
கேட்கவும் பேசவும் நிறைய இருக்கிறது.தவம் புரிந்தால், தானாய் வரம் கிடைக்கும்- இது பேரமல்ல, ஊதியம்.
தவம் ஒரு கவன ஈர்த்தலா?
கவன ஈர்ப்புக்கு இன்னொரு பெயர் நினவூட்டல்!யாருடைய கவனத்தை ஈர்க்க தவம்?
முன்பொரு முறை எழுதியது-
திருவளரும் தினம் வளரும்...
தவமமர வரம் கிடைக்கும்
தானாக முயலாமலே.
தானாக முயலாமலே.
இந்த ஒன்பது நாட்கள்தானா தவம்?
மீதி வாழ்க்கையின் மற்றைய நாட்கள்?
நீயில்லாமலா நான் என்று கேட்கக்கூட முனையாத வாழ்வில்
நீ இருப்பதை எப்படி நான் எனக்கே நிரூபிப்பது? நான் நீ என்று பேதமில்லாமல் நான் வாழ்வதாய் நம்பும் போது..
நீ?
நான் தவமியற்ற அருகதையற்றவன் எனும் மனுவின் பக்கமா நீ?
பதிவர்களுக்காகவும் பதிவிற்காகவும் எழுதி ஓய்ந்த பின்
இது பராசக்திக்கு எழுதும் பதிவு...
அவளுக்குத் தமிழும் தெரியும் என்பது-
என் பல நம்பிக்கைகளில் ஒன்று
இன்னும் கொஞசம் எழுதினால் நூறு வார்த்தைகளாவது தேறும்,
ஆனால் பொய்யாகி இந்த நிஜத்தை அசிங்கமாக்கும்.
நன்றாக உள்ளது :)
ReplyDelete//யாருடைய கவனத்தை ஈர்க்க தவம்?
ReplyDeleteமுன்பொரு முறை எழுதியது-
திருவளரும் தினம் வளரும்...
தவமமர வரம் கிடைக்கும்
தானாக முயலாமலே.// super
“பதிவர்களுக்காகவும் பதிவிற்காகவும் எழுதி ஓய்ந்த பின்
ReplyDeleteஇது பராசக்திக்கு எழுதும் பதிவு..”
ஆனால் பதிவர்களுக்கும் உந்து சக்தியாக இருக்கிறது இந்த பதிவு
>இன்னும் கொஞசம் எழுதினால் நூறு >வார்த்தைகளாவது தேறும்,
ReplyDelete>ஆனால் பொய்யாகி இந்த நிஜத்தை >அசிங்கமாக்கும்.
நிஜம்!!
//பொய்யாகி இந்த நிஜத்தை அசிங்கமாக்கும்//
ReplyDeleteபொய்யாக்கி இந்த நிஜத்தை வேறோரு அர்த்தமாக்கும்..
காரநீ..
மனமாகும்..
மனம் ஒழுகி..
மனம் பெருகி...
மீண்டும்...
பதிவர்களுக்காகவும் பதிவிற்காகவும் எழுதி ஓய்ந்த பின்
ReplyDeleteஇது பராசக்திக்கு எழுதும் பதிவு...
Straight from the core.........
"நீயில்லாமலா நான் என்று கேட்கக்கூட முனையாத வாழ்வில்
ReplyDeleteநீ இருப்பதை எப்படி நான் எனக்கே நிரூபிப்பது?"
சிந்திக்க வேண்டியதொன்று ...அருமை .. வாழ்த்துக்கள் :))
//இந்த ஒன்பது நாட்கள்தானா தவம்?
ReplyDeleteமீதி வாழ்க்கையின் மற்றைய நாட்கள்?//
''நாம் தெய்வம் சார்ந்த விடுமுறைகளில் மட்டுமே கொஞ்சமேனும் மன நேர்மையை நாடுகின்றோம் '' என்பதை, மேற்கண்ட தங்களின் வரிகள் உணர்த்தின.
குடுகுடுப்பைக்காரனுக்கு
ReplyDeleteகதவடைக்கிறாள்,
கொலு படியில்
இருப்பதும் அவனேயென
அறியாதவள்!
நம்பி கை கூப்பும் போது கூட இல்லையோ என்̀̀̀̀̀̀றெழும் ஒரு சந்தேகம்.
ReplyDelete//நம்பி கை கூப்பும் போது கூட இல்லையோ என்̀̀̀̀̀̀றெழும் ஒரு சந்தேகம்//
ReplyDeleteஒரு வரியில் பலருடைய உண்மையை சொல்லியுள்ளீர்கள். நான் கை கூப்புவதையே விட்டுவிட்டேன். சந்தேகத்தினால் அல்ல, எதையோ எதிர்பார்த்து கை கூப்புவது எனக்கு அவமானமாக இருப்பதால்.