Sunday, July 4, 2010

விவேகம்.



“யாரும் யார் மாதிரியும் ஆகி விட முடியாது, ஒருவர் முன்மாதிரி என்றால் அதற்குமுன் அவர்மாதிரி யாருமே இல்லை என்பதால்தான்.”- இது விசாரணை நாடகத்தில் ஒரு வசனம். இந்த வசனத்தை எழுதிய நான் நிறைய பேர் மாதிரி ஆக வேண்டும் என்று சிறு வயதில் நினைத்திருக்கிறேன். எங்கள் வீட்டிற்கு வழக்கமாய் வரும் ரிக்க்ஷாகாரர் போல ஆக வேண்டும் என்பதில் ஆரம்பித்து எம்ஜியார் வரை அந்தக் கற்பனை ஆசை விரிந்து கிடந்தது, அந்த விவரம் புரியா வயதில்தான் மனத்துள் நாயக பிம்பங்கள் விரைவாகவும் பெரிதாகவும் அமையும். அப்படித்தான் பத்து வயதுக்குள் எனக்கு இன்னொரு நாயகன். அவர்மாதிரி ஆகவேண்டும் என்று பத்து வயதில் நான் நினைத்தது புரியாத வயதின் அறியாத நிலை. முப்பது வயதிலும் இதே மாதிரி பல இளைஞர்கள் உளறுவது தான் பரிதாபம். பக்கத்து வீட்டுச் சாதனையாளரைப் போலக்கூட ஆக முடியாதவர்கள் இவரைப் போல் ஆக வேண்டும் என்று இன்னும் ஆசைப்படுகிறார்கள்.

இவரது முகமும் இவரது படங்களில் தொனிக்கும் உடல் மொழியும் வசீகரமானவை. இவர் மீது எனக்கு ஒருவித ஆர்வம் மிகுந்த நேசம் ஏற்பட இவரது புகைப்படங்களே காரணம். 
அவர் எவ்வளவு பெரிய ஞானி என்பது தெரியாமல் “பார்க்க சூப்பரா இருக்கார்” என்றே நான் சிறுவயதிலோல் அவரிடம் மயங்கினேன்.


அவர் சாமியார்தான், எனக்கு இப்போதெல்லாம் சாமியார் என்று சொன்னாலேயே மனத்தைப் பிராண்டுவது போல உள்ளது. அவர் இந்து மதத்தைப் பரப்பவே அமெரிக்கா சென்றார். எனக்கு மாத போதகர்கள் மீது வெறுப்பு உண்டு. ஆனாலும் இந்து சாமியாரான இவர் மீது என் மதிப்பும் மரியாதையும் நெருக்கமாய் உணரும் மனநிலையும் மாறியதே இல்லை. பத்து வயதில் அவர் மீது அவரது இயல்பான பொலிவினால் வந்த ரசிப்பு மெல்ல காலப்போக்கில் அவரைப் படிக்கும் போது வியப்பாகவும் மதிப்பாகவும் மாறியது. இன்றும் இந்த நிலையேதான் நீடிக்கிறது. இன்றும் அவர் என் ஆதர்சங்களில் ஒன்று என்றாலும் அவரைப் போல ஆக நான் முயல்வதுமில்லை விரும்புவதுமில்லை. அவர் மட்டுமே அவரைப்போல் இருக்க முடியும் நகல்கள் சீக்கிரம் சாயம் வெளுத்துச் சீரழிந்து கிடக்கும்.
அவரைப்பற்றி பல்வேறு தவறான கருத்துகள் நிலவுகின்றன. போலி ஆன்மீகமும் அரைகுறை அனுபவமும் கொண்டவர்கள் இவர், ஒருவன் சுயஇன்பம் அனுபவித்தால் தன் சக்தியை இழந்து விடுவான் என்று சொல்லிருப்பதாகச் சொல்வார்கள். அவரது எழுத்துக்கள் பேச்சுகள் எல்லாமும் இன்று கிடைக்கின்றன, எங்கேயும் அவர் இப்படிச் சொன்னதில்லை. இதைக் கூட விடலைகளின் கற்னையாகவும் வியாபாரிகள் பயன்படுத்தும் விற்பனை உத்தி என்றும் சற்று ஒதுக்கலாம். ஆனால் இவர் இந்துமத எழுச்சிக்கு அடையாளமாகக் காட்டப்படுவது தான் கொடுமை.
அவரது காலத்தில் இந்தியா அடிமை நாடு. மக்களிடம் விழிப்புணர்வு உருவாக்க மதத்தையும் பயன்படுத்தினார்- பிறகு வந்த காந்தியைப்போல. ஆனால் இன்று இந்து மதவெறியர்கள் இவரைச் சொந்தம் கொண்டாடி இவர்மூலம் இளைஞர்களை இழுக்கலாம் என்று பார்க்கிறார்கள். இது கொடுமை, ஆபத்தானது. இவரது மார்க்கம் அத்வைதம். கடவுளும் நீயும் வேறல்ல எனும்போது கடவுள் எப்படி வேறுவேறாகக் கிடக்கும்?
இவரைப் பற்றிப் பேசும்போது, பொதுவாக ஒரு விஷயம் முன்வைக்கப்படுவதில்லை. அதுதான் இவரது பொதுவுடைமை சார்ந்த புரட்சி தூண்டும் பார்வை.
இது அவரது எழுத்துகளிலிருந்து தொகுக்கப்பட்ட நூல். இதை வெளியிட்டவர்கள் அவரது ஆசிரமத்தைச் சார்ந்தவர்கள்தான். இன்னூலிலிருந்து சில வரிகள்-

"காலங்காலமாய் தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடக்கும் மக்கள்தான் அடுத்து ஒரு புரட்சி செய்யப் போகிறார்கள், அப்போது ஒரு புதிய சமுதாய மார்க்கம் உருவாகும்.
“உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டித்தான் முதலாளித்துவம் மேலோங்குகிறது, அதன் வியாபாரமயமாக்கப்பட்ட மயக்கத்தில்தான் சமூகம் கிடக்கிறது. ஜாதி இருக்கிறது, அதை வைத்து மக்களில் சிலர் ஒடுக்கப்படுகிறார்கள்; அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள்தான் உழைக்கும் வர்க்கம். அவர்களது உழைப்பு இயல்பாக எவ்வித கவனயீர்ப்புக்க்காகவுமன்றி தினசரி நியமம் போல் நடக்கிறது., இந்த உழைப்பின் சுரண்டல் வெகு நாள் நீடிக்காது.
“அடுத்த சமுதாய மாற்றம் ருஷ்யாவிலோ சீனாவிலோ தான் நடக்கும்.
“அதைத்தொடர்ந்து இங்கேயும் நடக்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவும் போராடவும் பழக வேண்டும். ...”
இதை இவர் பேசியது 1900 ஆண்டில். அப்போதே மார்க்ஸ் எழுதிவிட்டாலும், லெனின் முயன்று கொண்டிருந்தாலும் இந்தியாவில் ஒரு சாமியார் இதைக் கணித்தது தான் முக்கியம். இவர் பிறப்பாலும் சூழலாலும் இந்துவாக இருந்தாலும் இவரது கொள்கைகளும் கோட்பாடுகளும் இன்றைய இந்துதுவா அரசியல் போல கோணலானவை அல்ல. வள்ளலாரின் சமரச சன்மார்க்கமும் விவேகானந்தர் தன் குருவிடம் பயின்ற அத்வைத சாரமும் ஒரே மார்க்கத்தின் வேறு கோணங்கள், இவற்றையும் அரசியலாக்கி மதவெறி ஊட்ட முயல்பவர்களிடம் எச்சரிக்கை வேண்டும்.
இன்று அவர் இறந்த நாள். என் ஆன்மீக நாயகனுக்கு ஒரு நமஸ்காரம்.









19 comments:

  1. என்னுடைய வணக்கதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..

    ReplyDelete
  2. /ஆனாலும் இந்து சாமியாரான இவர் மீது என் மதிப்பும் மரியாதையும் நெருக்கமாய் உணரும் மனநிலையும் மாறியதே இல்லை/
    அதே.

    ReplyDelete
  3. His works can be a good introduction to hinduism.

    ReplyDelete
  4. எனக்கும் பிடித்த ஒரு ஞானி... (சாமியார் என்று சொன்னால் இன்று அர்த்தம் வேறு!!)

    ReplyDelete
  5. அவரின் கருத்துக்கள் முழுதாய் மக்களை சென்றடையவில்லை என்பதை வெளிக்காட்டும் தெளிவான பதிவு

    ReplyDelete
  6. எனக்கும் ஆரம்பித்தில் ஒரு மயக்கம் இருந்தது... அப்புறம் ராமகிருஷ்னா எனை கவர்ந்தார். விவேக்கின் நூல் எதோ ‘சுயமுன்னேற்ற’ நூலகளை போலத்தான் உள்ளது எனக்கு.

    1900ல் ஒரு சன்னியாசி கூறியது ஆச்சரியமே...

    ReplyDelete
  7. வியப்பு மிகுந்த பல தகவல்கள் அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. Great post! Informative and inspiring. Please write more like this, Doctor. Thank you.

    //இவரைப் பற்றிப் பேசும்போது, பொதுவாக ஒரு விஷயம் முன்வைக்கப்படுவதில்லை. அதுதான் இவரது பொதுவுடைமை சார்ந்த புரட்சி தூண்டும் பார்வை. //
    !!!

    ReplyDelete
  9. நல்ல பதிவு. ரொம்ப பெரிய மனிதர்.அவரை பற்றிய சில தகவல்களை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி.

    ReplyDelete
  10. அவர் தொடர்பான சிகாகோவில் உள்ள இடங்களை தேடி, ரெண்டு நாள் முன் சிலவற்றை நேரில் சென்று பார்த்தோம். நீங்கள் பகிர்ந்தவற்றில் சிலவற்றை நானும் உணர்ந்தேன்.

    ஆளுயர சிலை - ஏறும் படியெல்லாம் உபயதாரர் பெயர்கள்.

    அந்த காலகட்டத்தில், எவ்வளவு பெருமையோடும், பெருமிதத்தோடும் வந்து போயிருக்கிறார் என்று நினைத்து கொண்டிருந்த வேளையில் கண்ணில் பட்டது, அவரது பெயரால், ஸ்ரீ ஸ்ரீ அவர்களால் திறந்து வைக்கப் படப்போகும், தியான மண்டபத்திற்கான விழா அழைப்பு. விழா பந்தலில் சிறப்பு இருக்கைக்கான கட்டணம் $500 மட்டுமே, சிறப்பு பந்தியில் உணவிற்கும் சேர்த்து.

    அங்கிருந்து அவர் வழி வந்த சர்வசமய வழிப்பாட்டு நிலையத்திற்கு போனால், வழிபாடு முடிந்து, வரிசையாக, காவியில் இருந்த இருவரிடம் காலில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்...அவர்கள் இருவரோ, அவர்களுக்குள் ஏதோ பேசி கொண்டிருந்தார்கள் - காலில் விழுபவர்களை கவனியாமல்.

    ReplyDelete
  11. Thanks for giving out this Dr.

    Now I am recalling his amazing & historical words on September 11, 1893 at Chicago.

    Here are some drop of trinkets.

    //Sisters and Brothers of America,

    It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world; I thank you in the name of the mother of religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects.//

    Thanks Dr.
    http://naanummanithan.blogspot.com

    ReplyDelete
  12. இந்துத்துவ வாதிகள் தாங்கள் கூறுவது போல அவரை முன்னிலை படுத்தலாம். ஆயினும் அவர் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி கூறிய சில கருத்துக்கள் சரியில்லை. அதுவும் அவர் மனோபாவம் என்பதால் தங்கள் கருத்துடன் வேறுபடுகிறேன்.

    ReplyDelete
  13. இவர் என்னுடைய நாயகனும்.. ஆன்மீகத்தின் காரணமாய் அல்ல.. இளைஞர்களை ஊக்கப்படுத்தியதற்காக .. விளையாடுங்கள், ப்ரே செய்யா விட்டாலும் பரவாயில்லை என்று கூறியதாக நினைவு..

    ReplyDelete
  14. ஸேம் பிஞ்ச்!

    நானும் தலைவரோட ரசிகன்தான். சும்மா நம்பிக்கை அடிப்படையில் போதனை செய்கிறவர்களுக்கு மத்தியில் ராஜ யோகாவின் முன்னுரையில் ‘எதையும் நீயே அனுபவித்து உணருமுன் நம்பாதே’ என்று ஆரம்பிப்பது வித்யாசமானது.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  15. பாவம் விவேக்!
    இந்து மத ஐக்கானாகி பேர் கெட்டு போச்சு!, நானெல்லாம் அவரை மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர் என்கிறேனே!

    ReplyDelete
  16. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இவரின் ஞானஒளி வாசித்து இருக்கிறேன். இவரை எனக்கு பிடிக்கும் (நீங்கள் சொல்வதுபோல்).

    ReplyDelete
  17. சின்ன வீடு என்ற சொல் எப்படிக் கொச்சைப் படுத்தப்பட்டுள்ளதோ அதே போல் சாமியார் என்ற சொல்லும் ஆகிவிட்டது.
    சுவாமி விவேகானந்தரை சாமியார் என்று விளிப்பது அவரை அவமானப்படுத்துவதுபோல இருக்கிறது.

    ReplyDelete
  18. Good post and thanks for sharing these info.

    ReplyDelete