Monday, February 15, 2010

வெறுப்பாக

இன்று என்னிடம் பேட்டி வேண்டும் ஒரு தொலைக்காட்சியிலிருந்து வந்தார்கள். ஒரு பெண்ணின் வாயிலிருந்து விசித்திரமான பொருட்கள் விழுவதாகவும் அது சாத்தியமா என்றும் கேட்டார்கள். இல்லை என்று சொன்னேன்.
அந்தப் பதில் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை, உடனே வந்த இளைஞர், நிறைய பேர் அதை ஒப்புக்கொள்கிறார்களே என்றார், நான் பார்த்தால்தான் சொல்ல முடியும் என்றேன். ஏன் இப்படி அந்தப் பெண் சொல்கிறார் என்று கேட்டதற்கு, பிரமையாக இருக்கலாம் அல்லது பித்தலாட்டமாக இருக்கலாம் என்று சொன்னேன்.
அப்போதும் அவர்கள் எதிர்பார்த்த ஐந்து நிமிடப் பெட்டி கிடைக்கவில்லை, மெதுவாக அவர், அந்தப் பெண்ணுக்கு முன்பு வலிப்பு நோய் இருந்ததாம், இதைச் சரிசெய்ய சாமியர்கள் மந்திரவாதிகளிடமெல்லாம் போனார்களாம் என்று சொல்ல ஆரம்பித்தபோது, எனக்குக் கோபம் வந்தது.

ஒரு விஷயத்தைப்பற்றி எதற்காகப் பேட்டி? உண்மைகளையும், மறுப்புகளையும் மக்களிடம் கொண்டு செல்லத்தான் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் கேள்விகள் தெளிவாகவும் இருக்க வேண்டும். பரபரப்புக்காக மட்டுமே ஊடகம் என்றால், பொய்கள் மலிவாக விலைபோகும். எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு ஒரு கேள்வி கேட்டால்தான் சரியான விடை கிடைக்கும்.
“ விவரம் தெரியாமல் நீ ஏன் உடனே பதில் சொன்னாய்” என்று என்னைக் கேட்கலாம். எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லலாம், பதில் குறித்து கேள்வி வந்தால் அப்போது விளக்கம் சொல்லலாம் என்பதே என் அணுகுமுறை. ஆனால் இந்த நபரிடம், இவ்வளவுதான் கேள்வியா என்றதும் ஆம் என்றார். அடுத்த கேள்விக்கும் பதில் சொன்ன பிறகு இன்னொரு தகவல் சொன்னார். எல்லாவற்றையும் ஏன் என்னிடம் முதலில் சொல்லவில்லை என்றால், “ நாங்கள் XXX டீவியின் ZZZ நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறோம் என்று பதில் வந்தது. அது தகவல் அல்ல, அங்கிருந்துதான் வந்தார்கள் என்று எனக்குத் தெரியும். அப்படிச் சொன்னது எனக்கு அவர்களின் வீச்சை நினைவுறுத்த! அப்போதுதான் கோபமும் வந்தது.

தொலைக்காட்சி என்றால் மக்களிடம் எளிதாகப் பரவும் ஊடகம் என்பது உண்மைதான், ஆனால் எல்லாருமே அதில் முகம் தெரிந்தால் போதும் என்று இளித்துக்கொண்டு காத்திருப்பவர்கள் அல்ல. புதிதாய் இப்போதெல்லாம் பணி புரிய வரும் இளைஞர்களிடம் இப்படியொரு கருத்து தென்படுகிறது. வாய்வார்த்தையாக இல்லாவிட்டாலும், செயல்பாடுகளில். கையில் மைக்கும் தோளில் காமேராவும் இருந்தால் யாரையும் எளிதில் மடக்கி சில நேரம் அசட்டையாகக்கூட நடத்தலாம் என்பது ஒரு மோசமான எண்ணம்.

சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் நான் திமிராக பதில் சொன்னேன் என்று என்மீது பலர் குறைபட்டார்கள், கோபப்பட்டார்கள். ஆனால் நிகழ்ச்சியில் அன்று பதிவான எல்லாமும் வரவில்லை. வெட்டி ஒட்டி அவர்கள் காட்டும் போது நான் ஆணவமாகத்தெரிந்தேன், என் ஆத்திரம் தெரியவில்லை!
கண்முன்னே வெற்றுப் பரபரப்புக்காக பொய்களையும் கற்பனைகளையும் உண்மை போல் சிலர் பேசுவதும் அதற்கு, சுவைக்கூட்ட என்றே தொகுப்பாளர் தூண்டிவிடுவதும் எனக்கு எரிச்சல் வரவழைத்தது. மனத்தின் வெறுப்பு வார்த்தைகளில்தான் வரவேண்டும் என்பதில்லை, உடல்மொழியாகவும் வெளிவரும். அப்படித்தான் அன்று நடந்தது. ஆனால் நான் பேசும் போது, நாகரிகமில்லாமல் பேசியதாகத்தோன்றியது அவர்கள் செய்த தொகுப்பினால்தான். இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம் என்று பொறுமையோடு (திமிரோடு?) இருந்துவிட்டேன்.

இன்று இந்தப் பேட்டி. இதிலும் நான் பேசிய ஓரிரு நிமிடங்களுக்கு வேறு விதமான கேள்விகளைத்தொகுத்து என்னை முட்டாளாகக் காட்ட முடியும்.
இதற்கு என்ன செய்யலாம். இனி எந்த ஊடகவியலாளரையும் அணுக விடாமல் இருந்து விடலாமா? அப்படிச் செய்வதும் சரியல்ல, சில நேரங்களில் பொய்களைக் கண்டிக்கவாவது பேச வேண்டிவரும்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஊடகங்களுடன் தொடர்பு கொண்டவன் என்ற முறையில் தற்போது ஒரு தரச்சரிவு தெரிகிறது.
சிரத்தையின்மையா, அனுபவமின்மையா இல்லை தங்கள் சக்தியின்மீது வளர்த்துக் கொண்டுள்ள அதீதமான கற்பனையா என்று தெரியவில்லை. வெறுப்பாக இருக்கிறது.வருத்தமாகவும் இருக்கிறது.
எல்லாருமே அப்படியில்லை என்று நம்பவும் மனம் விரும்புகிறது.

47 comments:

  1. .
    ருத்ரன்,
    நீங்கள் மட்டும் அல்ல , பலரும் திரித்து வெளியிடுகிறார்கள் என்றே சொல்கிறார்கள்.

    1. செய்தி என்றால் யாரும் எப்படியும் போடலாம். அது செய்தியாளரின் பார்வை.
    அதாவது , நிகழ்வை ச்ய்தியாக்கும் செய்தியாளரின் பார்வை சார்ந்தது.

    2.பேட்டி என்றால் அப்படியே இருக்க வேண்டும். வெட்டுதல் , ஒட்டுதல் அதில் இருக்கக்கூடாது.

    பேட்டி என்று யாரும் உங்கள் கருத்துக்காக வரும் போது , "நான் சொன்னதை சொன்னபடி , கேட்ட கேள்வியுடன் மட்டுமே ஒளி / ஒலி பரப்ப வேண்டும் . எந்த இடைச்செருகலும் , துண்டித்தலும் இருக்கக்கூடாது" என்று ஒப்பந்தம் போட முடியாதா?

    அப்படி இல்லாத பட்சத்தில் என்ன பேட்டி ? யாருக்காக அது?

    .

    ReplyDelete
  2. இவைகளை எப்படி எதிர்கொள்வது என்பது என்னைப்போன்ற சாதாரண ஆட்களுக்கு ஒரு பிரச்சினைதான்

    ReplyDelete
  3. //......ஆனால் எல்லாருமே அதில் முகம் தெரிந்தால் போதும் என்று இளித்துக்கொண்டு காத்திருப்பவர்கள் ....//

    அந்த கற்பிதம்.... பின்னே

    இது //.....செயல்பாடுகளில். கையில் மைக்கும் தோளில் காமேராவும் இருந்தால் யாரையும் எளிதில்.....//

    பின்னே, இது ...

    //......தங்கள் சக்தியின்மீது வளர்த்துக் கொண்டுள்ள அதீதமான கற்பனையா என்று தெரியவில்லை....//

    குருட்டுத்தனமான காட்டடி எல்லா இடத்திலும் நடத்துறதுதான். காலப் போக்கில அதுவும் எப்படி செல்லுபடியாகுதுன்னும் தெரிஞ்சிக்கிறாங்கதானே.... exceptional cases would be there like you, but rarely they will run into one. Therefore, you just be an unpalatable one to give them a taste for a change ;-)

    ReplyDelete
  4. //தங்கள் சக்தியின்மீது வளர்த்துக் கொண்டுள்ள அதீதமான கற்பனையா..//

    30வினாடி சந்தோஷத்துக்காக நிறைய பேர் இருப்பதினால் வரும் அதீத கற்பனையாகத்தானிருக்கும்.

    ReplyDelete
  5. interviewers coming from television, they are thinking themselves that they have a HORNS on their heads..
    they need compulsorily a psychological treatment and sir, next time you please prescribe some medicines to them.

    ReplyDelete
  6. சாலையில் போகிற வருகிறவர்களின்
    கருத்து என்று காண்பிப்பது கூட அவர்களுடைய எழுத்துக்களைத் தான் சொல்ல சொல்கிறார்கள்

    ReplyDelete
  7. \\எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லலாம், பதில் குறித்து கேள்வி வந்தால் அப்போது விளக்கம் சொல்லலாம் என்பதே என் அணுகுமுறை.\\

    மிகச் சரியான அணுகுமுறையே..

    அப்பொழுதுதான் அவர்களுக்கு ஏற்றவாறு விசயத்தைக் கொடுக்க முடியும்.

    வாழ்த்துகள் திரு.ருத்ரன் அவர்களே

    ReplyDelete
  8. ///////நிகழ்ச்சியில் அன்று பதிவான எல்லாமும் வரவில்லை. வெட்டி ஒட்டி அவர்கள் காட்டும் போது நான் ஆணவமாகத்தெரிந்தேன், என் ஆத்திரம் தெரியவில்லை!/////


    ............வருத்தத்துக்குரியது. டி.வி. நிகழ்ச்சிகளில், ethics இல்லாமல் போய்விட்டது, இதன் காரணம். எல்லாவற்றிலும் அரசியலும் விளம்பரமும் வியாபாரமும் தான் முன் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மனசாட்சி அல்ல.

    ReplyDelete
  9. /எல்லாருமே அப்படியில்லை என்று நம்பவும் மனம் விரும்புகிறது./
    இந்த நம்பிக்கையில்தான் வாழ்க்கை ஓடுகிறது!

    ReplyDelete
  10. Tv மட்டுமல்ல இன்று பத்திரிக்கைகளும் அப்படிதான் இருக்கிறது. ஆ.வி மற்றும் பல பத்திரிக்கைகள் அப்படிதான் இருக்கு.

    இங்கே தாகத்திற்கு கோக்கோ, பீரோ தருகிறார்கள். தண்ணீரும், மோரும்தான் வயிற்றுக்கு நல்லது என்று நாம் சொன்னால் பைத்தியக்காரனாய் சித்தரிக்கப்படுவோம்

    ReplyDelete
  11. இந்த மாதிரி ஏதாவது வேலைக்காவாத விஷயத்தப் பத்திப் பரபரப்பாச் சொல்லிட்டு கூட ஒரு சின்ன டப்பாக்குள்ள ”இதைப் பற்றி மரு. ருத்ரனின் கருத்து” அப்படின்னு ஒரு எக்ஸ்பர்ட் ஒப்பீனியன் போட்டுட்டா அவங்க தரமும் கூடிடும்ல.. அதுக்குத் தான்.. விட்டுத் தள்ளுங்க..

    ReplyDelete
  12. ....அப்படியே அவர்கள் விருப்பப்படி (எடிட்டிங் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் நேரம் போன்ற நிர்வாகச் சிக்கல்கள் ) மாற்றம் செய்து இருந்தாலும் , அதை ஒளி/ஒலி பரப்பும் முன் உங்களிடம் காட்டி அனுமதி பெற்ற பின்னரே ஒளி/ஒலி பரப்பவேண்டும் என்று ஒப்பந்தம் செய்தபின்னர் பேட்டியைத் தொடங்கலாம்.

    அது இல்லை என்றால் விளம்பரம் உங்களுக்கும் விருப்பமான ஒன்றாகவே தெரிகிறது. :-)

    நீயா நாயா போன்ற வெட்டி மன்றங்களில் ஒளி/ஒலி பரப்பப்படும் உங்களின் துண்டு துண்டான கோர்வையற்ற விளக்கங்கள் , சேதத்தையே ஏற்படுத்துகிறது. அவர்களின் பரபரப்புக்கு நீங்கள் ஊறுகாயாக‌ அல்லது பகடைக்காயாக பயன்படுதப்படுகிறீர்கள். :-(((

    **

    அப்போலோ ஆசுபத்திரிக்குத்தான் விளம்பரம் வேண்டும். அரவிந்த கண் மருத்துவமனைக்கு அல்ல. :-)))

    .

    ReplyDelete
  13. அன்புள்ள Dr.ஐயா ,
    கோபம் இருக்கும் இடம் தான் குணம் இருக்கும் .பேட்டி எடுப்பவர்கள் தாங்கள் நினைக்கும் பதிலை கூறவேண்டும் என்று நினைத்தால் பேட்டி எதற்கு ?
    " இதிலும் நான் பேசிய ஓரிரு நிமிடங்களுக்கு வேறு விதமான கேள்விகளைத்தொகுத்து என்னை முட்டாளாகக் காட்ட முடியும்" .
    தங்களின் தைரியமான அணுகு முறை சரி .அந்த தைரியத்திற்கு கிடைக்கும் பரிசு தான் ஆனவகாரனாகவும் ,திமிர் பிடித்தவனாகவும், சித்தரித்தல் என்றால் அதற்காக அவர்களுக்கு கூழை கும்பிடு போடவேண்டிய எந்த அவசியமும் இல்லை .

    ReplyDelete
  14. Thats what media is about these days - sensationalism. And then they call themselves socially responsible! While I agree that its completely outrageous, stupid and irresponsible of them to expect you to answer their half-baked question, without giving the necessary details, i think the other outbursts aren't valid.

    For one, if those people were haughty, they wouldn't have come to you again for the 'byte' bcos both shows u are talking about (i can easily guess which ones they are) are produced by the same production house. There are some psychiatrists who come to their show on and off, there are even some regulars to the show- so they wudnt have come to you again...particularly, after realising that you wouldn't talk trash just to get ample airtime on a primetime show. And No, Im not sticking up for them - i have no connection whatsoever with them, im a media buff and have a fairly good knowledge about these channels and programmes and i just thought you should think about this too.

    And about the earlier show, my grouse (going by what i saw) is that your points/reasoning did not come through properly...anger dominated and hence clarity suffered a little. Or so it seemed to me, a regular viewer of whatever u appear in, on tv :)

    ReplyDelete
  15. interesting.

    மைக்கேல் ஜாக்சனின், மொத்த உருவமும், சின்னா பின்னப் படுத்தப்பட்டது, இந்த மாதிரி வெட்டி/ஒட்டிய பேட்டியால்தான் என்பது நினைவில் வருகிறது.

    very powerful villains, the media guys. பரபரப்புக்காக அடுத்தவன் வாழ்க்கையை பத்தி கவலைப் படாமல், என்ன வேணும்னாலும், திரித்து விற்கிறார்கள்.

    ReplyDelete
  16. //கையில் மைக்கும் தோளில் காமேராவும் இருந்தால் யாரையும் எளிதில் மடக்கி சில நேரம் அசட்டையாகக்கூட நடத்தலாம் என்பது ஒரு மோசமான எண்ணம்.//

    Its true

    english channels paarthu (LIKE POGO} parkil beachil ippadi oru abatha show nadathukiRaarkaaL

    ReplyDelete
  17. //வெட்டி ஒட்டி அவர்கள் காட்டும் போது //

    ஒரு நிகழ்ச்சியை எப்படி வேண்டுமானாலும் எடிட்டிங் மூலமாக மாற்றிவிட முடியும் என்பதை நானும் அன்று உணர்ந்தேன்.. தொடர்பு இல்லாமல் தங்களின் கோபமான வார்த்தைகள் வெளிப்பட்ட போது இவ்வாறு எடிட்டிங் தவறு அப்பட்டமாகத்தெரிந்ததால்... உங்களை உணர்ந்து கொண்டேன் ருத்ரன் ..அது உங்கள் தவறு அல்லவென்று...

    ReplyDelete
  18. //எல்லாருமே அப்படியில்லை என்று நம்பவும் மனம் விரும்புகிறது//

    REALLY GOOD HEARTED RUDHRAN...!

    ReplyDelete
  19. நான் பத்திரிக்கையாளன் அல்ல., அவர்களுக்கு பரிந்துபேச. இங்க எல்லாரும் அவர்களை [ பத்திரிக்கையாளர்கள் ] பெரும்

    தவறிழைத்தது போல் பேசுராங்க. அவங்க அந்த மாதிரி செய்ய காரணம்,மக்கள் நாம தான்.விளம்பரத்தில இருந்து, சினிமா எல்லாமே fantasizing ஆ இருந்தாதன நம்மல்ல பெருவாரியான மக்கள் கவனிக்குறோம். நிஜத்த என்னைக்கு நேசிக்குரோமோ then they will stop manipulating .அப்படின்னு நான் நம்புறேன்

    ReplyDelete
  20. உங்களை சீற விட்டு வேடிக்கை பார்க்க ஒரு சாரார் உள்ளனர் அவ்வளவே.
    இதனால் ஏற்ப்டும் சாதக பாதகங்கள் குறித்து அவர்களுக்கு கவலையுமில்லை.

    ReplyDelete
  21. My Dear Doctor I would say , you can avoid recorded shows and choose for live shows always, thereby you can avoid to some extent of all these ridiculous things.

    It's hurting when we come to know that ur hurt. U can take care of urself but we?? need to come to you for that :-)

    ReplyDelete
  22. இது முழுக்க முழுக்க உண்மை. நான் ஒரு செய்தியாளனாக, தொலைக்காட்சி விவரண நிகழ்ச்சி இயக்குனராக பணிபுரிந்தவன்
    என்ற வகையில் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதே போல சில பன்னாடைகள் தொலைக்காட்சியில் முகம் வர வேண்டும் என்பதற்காக செய்யும் கூத்துகளை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. விளம்பர மோகத்திற்கு ஒரு அளவே இல்லையா? திரு.ருத்ரன் அவர்களே இதுவும் ஒரு மன நோய்தானே?

    ReplyDelete
  23. பரபரப்புக்காகவே இயங்கும் இந்த உலகம்! இதை நினைத்துப் பதறுவதை விட நிதானமாகவே பதில் சொல்லிவிடலாம், ஆனால் நிதானம் இழக்கச் செய்துவிடத்தான் செய்கின்ற பல செயல்கள்.

    ReplyDelete
  24. most of the TV channels do this, especially english tv channels are more worse. Thats why Ilayaraja, ARR, goundamani do not encourage these TV interviews.

    ReplyDelete
  25. ஐயா! ஊடகங்களைப்பொறுத்தவரை தங்கள் கருத்து 100% உண்மை.இவர்களின் திரித்தல்களை நம்பும் பார்வையாளர்கள் குற்றவாளிகள்.அதோடு அவர்களிடம் ”நாங்கள் யார் தெரியுமா?”போக்குதான்.ஆனால் அவர்களின் தகிடுதத்தங்களைத் தங்களைப்போன்றோர் அனுமதிக்கக்கூடாது என்பது என் போன்றோரின் தாழ்மையான வேண்டுகோள்.(அனுபவத்தினால் வந்த கோபம்)

    ReplyDelete
  26. ஐயா! ஊடகங்களைப்பொறுத்தவரை தங்கள் கருத்து 100% உண்மை.இவர்களின் திரித்தல்களை நம்பும் பார்வையாளர்கள் குற்றவாளிகள்.அதோடு அவர்களிடம் ”நாங்கள் யார் தெரியுமா?”போக்குதான்.ஆனால் அவர்களின் தகிடுதத்தங்களைத் தங்களைப்போன்றோர் அனுமதிக்கக்கூடாது என்பது என் போன்றோரின் தாழ்மையான வேண்டுகோள்.(அனுபவத்தினால் வந்த கோபம்)

    ReplyDelete
  27. //நான் ஆணவமாகத்தெரிந்தேன், என் ஆத்திரம் தெரியவில்லை!//

    உங்களின் நியாயமான ஆத்திரம் தான் அன்று தெரிந்தது. அந்த நிகழ்ச்சியில் நடந்த அசட்டுத்தனத்தின் மீதான கோபம் தான் என்னுடைய பதிவு.

    //பரபரப்புக்காக மட்டுமே ஊடகம் என்றால், பொய்கள் மலிவாக விலைபோகும்.//

    தற்போது இந்தியாவிலுள்ள அனைத்து ஊடகங்களும் அப்படித்தான் இருக்கின்றன.

    ReplyDelete
  28. நேற்று ஆங்கிலத்தில் இட்ட பின்னோட்டத்தில் உங்களது முந்தைய நிகழ்ச்சியைப் பற்றிதான் பெரும்பாலும் என் கருத்தைத் தெரியப்படுத்தினேன். ஆனால் நேற்று இரவு நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு நொந்துதான் போனேன். அந்தப் பெண்ணுக்கு உடனடி சிகிச்சை தேவையென்பது ஆறாவது அறிவிருக்கும் யாருமே சட்டென்று புரிந்து கொள்ளக் கூடிய விஷயமில்லையா? என்ன கொடுமையிது? அதுவும் பரபரப்பு கூட்டுகிறேன் என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு நடுவே அந்த எடிட்டிங்...ஐயோ...இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்கவோ தடுக்கவோ யாருமேயில்லையா...சே...

    உங்கள் கருத்து தெளிவாகவும் திரிக்கப்படாமலும் உங்கள் தொழில் நேர்மைக்குட்பட்டே இருந்தது. அந்த விதத்தில் ஒரு சிறிய ஆறுதல். ஆனால் அந்த ஆவி ஆசாமியும் அந்த ராஜவம்சத்துக் கதையும்...அட போங்கப்பா.

    எனக்கு இப்போது தோன்றுவதெல்லாம் இதுதான். நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு அந்தக் குடும்பத்தினர் ஆவி ஆசாமியைத் தேடிப் போகக் கூடும். இன்னும் அவர்கள் நிலை மோசமாகலாம். இதற்கெல்லாம் இடையில் அடுத்த நிகழ்ச்சிக்கான ப்ரொமொ... நடிகை கனகாவின் பிரச்சினை குறித்து. பாவம் அப்பெண்ணிற்குமே உதவி தேவை...அவர் எது குறித்தோ பயந்திருக்கிறார் அல்லது வேறு ஏதோ பிரச்சினை என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அவரை வேறு மாதிரி காட்டி விடுவார்கள். இங்கும் ஒரு ஆவியுலக பெண்மணி வேறு.

    பதிவிடலாம். புலம்பலாம். ஐயோ பாவம் என்று குடும்பமாய் பரிதாபப்படலாம் அல்லது மனசாட்சியின்றி வம்படிக்கலாம். பிறகு?

    why cant there be more awareness on mental illnesses? isn't it high time? one the one side, it seems like the taboo on such illnesses is coming down and on the other, incidents like these are jolting.

    உண்மையிலேயே மனம் பாரமாயிருக்கிறது. அதே நேரம் உங்கள் புரொஃபெசன் குறித்தும் உங்கள் நேர்மை குறித்தும் யோசித்தால் ஆறுதலாகவும் மரியாதையாகவும் இருக்கிறது. இப்படி பின்னோட்டம் மட்டுமே இட முடிந்த எங்களைப் போன்றவர்கள் செய்ய முடியாததை நீங்கள் செய்கிறீர்கள். அதை நினைத்து நீங்கள் சற்றே ஆறுதலடையலாம். உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் டாக்டர்.

    ReplyDelete
  29. கிட்ட தட்ட எல்லா ஊடகங்களும் இதை தான் செய்கின்றன.., பத்திரிக்கைகளின் தலையங்கத்தை பாருங்கள் எல்லாமெ வெறும் வெற்று பரபரப்பு செய்திகளே

    ReplyDelete
  30. நேற்று ஒளிபரப்பான நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியை பார்த்தேன், எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது, ஒரு முறி நீங்கள் எழுதி கொடுத்த மருந்தை அருகிலிருந்த மருந்து கடையில் வாங்க போயிருந்தேன், அந்த கடையில் ஒருவர் புதியவர் மற்றொருவர் பழையவர் போலும், புதியவர் என்னிடமிருந்த மருந்து சீட்டை வாங்கி மருந்துகளை எடுத்து வைத்துவிட்டு, ஒவ்வொரு மருந்திற்கான விலையையும் பழையவரிடம் கேட்டு பில் தயாரித்துக் கொண்டிருந்தார், வேறு ஏதோ செய்து கொண்டே விலையை புதியவரிடம் சொல்லிக்கொண்டிருந்த பழையவர், மருத்துவர் எழுதிய சீட்டை வாங்கி பார்த்துவிட்டு, 'இந்த ரெண்டு மருந்தும் இப்போதைக்கு ஸ்டாக் இல்லைங்க' என்று சொல்லிவிட்டு புதியவர் எடுத்து வைத்திருந்த மாத்திரைகளை எடுத்துச் சென்று அதன் பெட்டிகளில் வைத்துவிட்டார். எனக்கு இந்த செய்கையின் அர்த்தம் விளங்கவில்லை, 'அவர் எடுத்து கொடுக்கவிருந்த மாத்திரைகளைஎல்லாம் திரும்ப எடுத்துட்டு போயிடீங்களே' என்றேன். அதற்க்கு அந்த பழையவர் சொன்னார், இவன் கடைக்கு புதுசும்மா டாக்டர் எழுதிய மாத்திரைக்கு பதில் அதே compositionல வேற தயாரிப்பில் வருகிற மாத்திரைகளை எடுத்துவச்சிருக்கான், டாக்டருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான், நேரே என் கடைக்கு வந்து என்னை 'நீ டாக்டரா நான் டாக்டரான்னு கேட்பாரு' என்றார்.
    உங்களைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தொலைகாட்சியில் உங்கள் பேட்டியை வெட்டி ஓட்டினாலும் உண்மை தெரியும், ஆனால் அந்த பேட்டியை அப்படி வெட்டி ஒட்டி அவர்கள் தேவைகேற்றபடி உபயோகிப்பது (உங்களைப் போன்ற மருத்துவரின் கருத்தை ஒளிபரப்பு செய்வது) கண்டனத்துக்குரியது. இனிமேல் பேட்டி எடுக்கும் போது conditions என்னவென்பதை தெரிவித்து பின்னர் பேட்டி கொடுங்கள், அதற்காக இனி பேட்டி எடுக்க வருபவரை வரவேண்டாம் என்று சொல்லிவிடுவது என்பது உங்கள் கருத்து சுதந்திரத்தை நீங்களே வைத்துகொண்டு விடுவது போன்றதாகிவிடுமே. எங்களைப் போன்ற பலரும் அறிய செய்வது எங்களுக்கும் பயனுடையது அல்லவா.

    ReplyDelete
  31. //பேட்டி என்று யாரும் உங்கள் கருத்துக்காக வரும் போது , "நான் சொன்னதை சொன்னபடி , கேட்ட கேள்வியுடன் மட்டுமே ஒளி / ஒலி பரப்ப வேண்டும் . எந்த இடைச்செருகலும் , துண்டித்தலும் இருக்கக்கூடாது" என்று ஒப்பந்தம் போட முடியாதா?பேட்டி என்று யாரும் உங்கள் கருத்துக்காக வரும் போது , "நான் சொன்னதை சொன்னபடி , கேட்ட கேள்வியுடன் மட்டுமே ஒளி / ஒலி பரப்ப வேண்டும் . எந்த இடைச்செருகலும் , துண்டித்தலும் இருக்கக்கூடாது" என்று ஒப்பந்தம் போட முடியாதா?//

    ஆளுங்கட்சி டிவியா இருந்தா ?

    அட என்னங்க ! அவங்க பேனர்ல நடிச்சுட்டு சம்பள பாகி கேட்ட மூணு பேருக்கும் மறுநாளே ரெய்டு பறக்குது !

    ReplyDelete
  32. டெம்ப்ளேட் நல்லா இருக்கு டாக்டர் !

    ReplyDelete
  33. //அப்போலோ ஆசுபத்திரிக்குத்தான் விளம்பரம் வேண்டும். அரவிந்த கண் மருத்துவமனைக்கு அல்ல. :-)))//

    இதுல எதுனா உள்குத்து கீதா?!

    ReplyDelete
  34. //விசித்திரமான பொருட்கள் விழுவதாகவும் அது சாத்தியமா என்றும் கேட்டார்கள்.//

    வாந்தியா இருக்கும்னு சொல்லி இருந்தா ஓடிருப்பானுங்க சார் !

    ReplyDelete
  35. /கையில் மைக்கும் தோளில் காமேராவும் இருந்தால் யாரையும் எளிதில் மடக்கி சில நேரம் அசட்டையாகக்கூட நடத்தலாம் என்பது ஒரு மோசமான எண்ணம்./

    வாஸ்தவம் தான் !

    ReplyDelete
  36. அன்பான டாக்டர் திரு ருத்ரன்,

    I cannot but remind you at this juncture that you are indeed a self confessed fan of an equally preposterous fame seeking and untruthfull publishing brigade called வினவு and its equally untruthfull
    publishing associates. Being the case, your comments about the current values in public broadcasting and its elder sister, publishing, looks quite hypocritical.

    உங்களைப்போன்ற அறிவில் முதிர்ச்சியடைந்த, நேர்மையான ஒருவர் ஒரு சார்பாக கோபம் கொண்டால், அந்த கோபத்திற்கும் ஆதங்கத்திற்கும் அடித்தளமான நேர்மயின்ன்மையை நினைத்து சும்மா இருக்க முடியவில்லை!Thats why the comment. Any way, the point is, any comment that you make about public honesty, decorum and decency with வினவு associates on your side devalues the whole excercise.

    நன்றி

    ReplyDelete
  37. அவர்களின் தொழில்...

    என்ன செய்ய..

    நன்றி..

    ReplyDelete
  38. // ராஜன் said...

    ஆளுங்கட்சி டிவியா இருந்தா ?

    அட என்னங்க ! அவங்க பேனர்ல நடிச்சுட்டு சம்பள பாகி கேட்ட மூணு பேருக்கும் மறுநாளே ரெய்டு பறக்குது !//


    ராஜன்

    :-)))

    ஆளுங்கட்சி டிவியா இருந்தா ஆப்புத்தான் . இதில் சந்தேகம் என்ன ?
    ஆளுங்கட்சி என்ன ஆளுங்கட்சி ... யாராவது பேட்டை ரவுடி கேபிள் ஒனரா இருந்தாக்கூட அவரை எதிர்த்தால் ஆப்புதான். வாழ்க்கை சின்னாபின்னமாகிடும்.

    **

    ஏதோ 'ஏப்ப சாப்ப' டிவி வந்தா கேட்கலாம்....ஒப்பந்தம்போட தயாரான்னு.

    என்ன பண்றது இராஜன் ,கேட்டுப் பார்க்கலாம். அதை மீறி அதிகாரவர்க்கத்திடம் ஒன்றும் செய்ய முடியாது .

    ஒரு மாற்று இயக்கமாக செயல்படாமல் தனி மனிதனாக இயங்குவது ஆப்புக்கான உத்திரவாதம் என்பதை அறிவேன்.

    .

    ReplyDelete
  39. // ராஜன் said...

    //அப்போலோ ஆசுபத்திரிக்குத்தான் விளம்பரம் வேண்டும். அரவிந்த கண் மருத்துவமனைக்கு அல்ல. :-)))//

    இதுல எதுனா உள்குத்து கீதா?! //

    உள்குத்தா... அப்படீன்னா? :-)))

    இந்தமாதிரி விழா , பேட்டி எல்லாம் எதற்கு? இவர் செய்யும் நல்ல பணிகளை செய்து கொண்டு இருந்தாலே போதும். பேட்டிகள் மூலமும் விழாக்கள் மூலமும் சாதிக்கப்பொவது ஒன்றும் இல்லை. அதற்குத்தான் அரவிந்த் மருத்துவமனை உதாரணம். அவர்கள் டிவியில் ப்ரைம் டயத்தில் விளம்பரமோ , பேட்டியோ கொடுப்பது இல்லை. அது பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கு.

    **

    அதிகாரம் வர்க்கம், நண்பர்கள், குடும்பம் என்று அனைவரும் பல நேரங்களில் சகித்துக்கொண்டோ அல்லது விருப்பத்துடனோ விட்டுக்கொடுக்கத்தான் செய்கிறார்கள்.

    எந்த நிர்பந்தங்களும் இல்லாதபோதாவது, சுயமாக இருக்க முயற்சிக்கலாம்.

    **

    பல முரண்கள் ருத்ரனிடம் உண்டு.

    1. கொஞ்ச நாளைக்கு முன்னால் "சமஸ்கிரகத்தை நக்கிப்பிழைக்கும் நாய்கள்" வசனப்புகழ் கதை எழுதுபவரின் பாராட்டுவிழாவிற்கு, ருத்ரனின் பெயர் தவறாக அச்சிடப்பட்டது என்பதற்காக, போலாமா ? வேணாமா ? என்று பதவில் பதிவு செய்து இருந்தார். அப்புறம் போய் வந்தார்.

    2.நண்பரை பொதுவில் விமர்சிக்க மாட்டார் டாக்டர். இதே டிவி இவரின் நண்பரின் டிவியாக இருந்தால் கமுக்கமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அல்லது பெயர் / டைட்டில் தவறாக இருந்தாலும் நண்பருக்காக போய் வந்த மாதிரி நண்பருக்காக இணக்கமான பேட்டி கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.


    ..

    ReplyDelete
  40. as a sane person had remarked the show depicted a mentally ill probably with epileptic focus in their programme; and the shameful thing i have to record is-
    the producer who took pains to tell me that he had not edited me is not apologeti about the cheap depiction in the show!

    ReplyDelete
  41. டாக்டர் சத்தியமா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது கொஞ்சம் தமிழ தவழ விடுங்க

    ReplyDelete
  42. I also saw that program. I think that girl is suffering from Schizophrenia, since she told that she is living with voices. She needs psychiatric treatment. I also saw an advertisement that this particular channel is going to start another show about paranormal powers. This particular channel is well known for creating paranoia about ghost, black magic, paranormal powers among people. I will better watch Chutti TV or Discovery channel in tamil.

    ReplyDelete
  43. ofcourse you are correct.We share your feelings. Moral and social integrity is subdued for commercial purpose and cheap thrills.

    malmathi & venmathi

    ReplyDelete
  44. கோபம் வேண்டாம் டாக்டர்.. அவர்களும் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள்தானே.. அவர்களின் முதலாளிகள் யார் என பாருங்கள்

    ReplyDelete
  45. மனம் நம்புவது மட்டுமே உண்மையாக இருக்க முடியும்

    ReplyDelete