26/11 முடிந்தது, முகப்பூச்சுக்கள் குறைத்துக்கொண்ட பெண்கள், சோகமுகத்துடன் மெழுகுவத்தியேந்தி அஞ்சலி செலுத்தினார்கள், தொலைகாட்சி காமிராக்கள் முன்!
இன்று, 6/12, மெழுகுவத்திகளோ, காமிராவுக்கான கண்ணீரோ இருக்காது..
எப்போது எது நடந்தாலும் பதிவெழுத ஒரு வாய்ப்பாகச் சிலர் பயன்படுத்திக்கொள்வார்கள் (என்னையும் சேர்த்துத்தான்).
எப்போது எது நடந்தாலும் பதிவெழுத ஒரு வாய்ப்பாகச் சிலர் பயன்படுத்திக்கொள்வார்கள் (என்னையும் சேர்த்துத்தான்).
துக்கத்தில் அடிபட்டவர்கள் அடுத்த வேலை பார்க்கப்
போய்விடுவார்கள். செத்தவர்கள் வீடுகளில் சிலரது படங்கள் போன வருடம் போட்டுக்
காய்ந்த பூக்களோடு இருக்கும்...
நாசமானது ஒரு வரலாற்றுச் சின்னமானால் என்ன, வசதியானவர்களுக்கான
வாசஸ்தலமாக இருந்தால் என்ன?
நாசம் வெறும்
கட்டிடங்கள் மட்டுமா? எத்தனை மனங்கள்
உடைந்தன? ஒவ்வொன்றும்
எத்தனை விதமான விளைவுகளை ஏற்படுத்தின?
மெழுகுவத்திகள் கரைந்துவிடும் போதே, கவலைகளும்
கரைந்துவிட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும்?
இறந்தவர்களுக்கு நினைவு நாள் என்று ஒன்றை நினைவில்
வைத்துக்கொண்டு அன்றைக்கு பழைய நினைவுகளில் மூழ்குவது எல்லா ஊர்களிலும் உள்ள ஒரு
பழக்கம்.அந்த பழைய நினைவுகள் நாம் அனுபவித்த உணர்வுகளை மீட்டி, நாளை முதல்
வாழ்வின் பரிமானங்களைப் புதுப்பார்வையோடு பார்க்கவே உதவ வேண்டும்.
கற்றுக்கொள்வது என்றால் சிந்திப்பதும் ஆகும், அது சில
நேரங்களில் கசப்பானதாகவும் அமையும்.
மனிதனின் தன்மையென்று நாம் கொண்டாடும் சகமனிதர்களிடம்
இருக்கும் இசைவும் இணக்கமும் ஒரு கலாச்சாரத்தின் உயிர். அது கொல்லப்பட்டால்,அதுவும் வன்முறை
தான், அந்த நாள் துக்கமான நாள் தான்.
ஒரே தேசத்து மக்களிடையே நல்லிணக்கம் செத்த நாள், பாடங்களைக்
கற்றுக்கொடுக்கத்தான் இருக்கவேண்டும். கற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இது இன்னொரு
வாய்ப்பந்தல் போட்டு வெட்டியாய்த் திரிய இன்னொரு சந்தர்ப்பம்.
புரிந்து கொள்வதும்,புரிதலின்
விளைவாக விழிப்புடன் இருப்பதும், விழிப்புடன் இருப்பது வெறியுடன் இருப்பதல்ல
என்று தெளிவடைவதும் தான் ஒரு துயரமான சம்பவத்தின் தேதியை நினைவில்
வைத்துக்கொள்வதற்கான அவசியம்.
இதையும் ஒரு நாடகமாக, சமுதாயக்
கேளிக்கையாக, தனக்கு மனத்தில் ஏற்படாத பாதிப்பென்றாலும் காட்டிக்கொள்ள
வேண்டிய ஒரு நாகரிக நிர்ப்பந்தமாக இவ்வகை நாட்கள் அமைந்து கொண்டிருக்கும் வரை, உண்மையிலேயே
வருந்தியவர்களது உணர்வுகள் மரியாதை இழந்துகொண்டே போகும்.
இப்படி நடக்கும் ஒவ்வொரு நாள் பற்றிய நினைவும், யார் என்ன
செய்தார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்வதை விடவும், ஏன் அப்படி செய்தார்கள்
என்று சிந்தித்துப் பார்க்கவும் தூண்ட வேண்டும்.
இது ஒரு விசாரணை தான். ஓய்வு பெற்ற ஒருவருக்கு தரப்படும்
வேலை வாய்ப்பு அல்ல, ஒரு குற்றத்தின்
பின்னனியில் இருக்கும் துரோகத்தை, நயவஞ்சகத்தை, குறுகிய
நோக்கத்தை ஆராயும் ஒரு விசாரணையாக மட்டும் அல்ல, தன்னைமீறி- தன் சூழலை, சமுதாயத்தை, சகமனித மனங்களை
எவ்வளவு தூரம் நாம் அலட்சியப்படுத்தி வருகிறோம் என்னும் சுயபரிசீலனையாக
இருக்கவேண்டும். நம்முள் கனன்றுகொண்டிருக்கும் பேதவெறியை அடையாளம் காணவேண்டும், அப்போதுதான் அது எரிந்து எரித்து எதையும் அழிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.
இன்னும் எவ்வளவோ வருடங்கள் உலகில் இருக்கின்றன, ஏன் நடந்தது யார்
காரணம் என்றெல்லாம் கண்டுபிடித்து அறிக்கை சம்ர்ப்பிக்க அவசரம் இல்லை.
குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களும் மட்டுமல்ல அவர்களது அடுத்த வாரிசுகளும் வேறு
வேலை பார்க்கப் போய்விடுவார்கள்...
எல்லாருக்கும் வயதாகிவிடும்.
கோரத்தின் தன்மை காலத்தில் கொஞ்சம் மழுங்கிவிடும்.
புத்துப்புது நியாயங்கள் உருவாக்கிக்கொள்ளப்படும்.
மெத்தனமும் வன்முறை தான்.
நமக்கு நேரமும் ஞாபகமும் இருந்தால், இன்னும் பல
ஆண்டுகள் கழித்து, காமெராக்கள்
தயாராகிவிட்டபின், மெழுகுவத்திகளைக்
கொளுத்தலாம்..
26/11 was an assault by foreces outside the country working with forces inimical to india within the country.Dec 6th is the result of communal violence and that demolition should be condemned.Those who condemn what happened in Dec 6th and the hindutva should also condemn the foreces responsibe for 26/11. 26/11 could not be reduced to an attack on a hotel or a city.It was a war against India, part of the proxy war Pakistan had been conducting through muslim fundamentalists
ReplyDeletewithin India and outside.Perhaps you as a
pseudo-secularist and someone associated with that stalinist party is least bothered about this. You write this
26/11 முடிந்தது, முகப்பூச்சுக்கள் குறைத்துக்கொண்ட பெண்கள், சோகமுகத்துடன் மெழுகுவத்தியேந்தி அஞ்சலி செலுத்தினார்கள், தொலைகாட்சி காமிராக்கள் முன்!
Who knows you might have silently celebarated 26/11 with cakes and wine.
பழைய நினைவுகள் நாம் அனுபவித்த உணர்வுகளை மீட்டி, நாளை முதல் வாழ்வின் பரிமானங்களைப் புதுப்பார்வையோடு பார்க்கவே உதவ வேண்டும்.
ReplyDeleteNice words Dr.
Thanks for a nice inspirational post.
6/12 இந்துக்களூக்கா, இந்திய முஸ்லிம்களூக்கா.அது ஆயிரம் ஆண்டு கோயிலா,முன்ணூறூ ஆண்டு முஸ்லிம் வசமான இடமா.காலம் மழுங்கியதால் நியாயம் இடம் மாரக்கூடாது.
ReplyDelete26/11 அவமானத்தின் அடையாளம். எல்லோரும் தலை குனிவது சரிதான்
/புரிந்து கொள்வதும்,புரிதலின் விளைவாக விழிப்புடன் இருப்பதும், விழிப்புடன் இருப்பது வெறியுடன் இருப்பதல்ல என்று தெளிவடைவதும் தான் ஒரு துயரமான சம்பவத்தின் தேதியை நினைவில் வைத்துக்கொள்வதற்கான அவசியம்/
ReplyDeleteரொம்ப சரியாக சொனனீ்ர்கள்!
//கோரத்தின் தன்மை காலத்தில் கொஞ்சம் மழுங்கிவிடும். புத்துப்புது நியாயங்கள் உருவாக்கிக்கொள்ளப்படும்.
ReplyDeleteமெத்தனமும் வன்முறை தான். //
நீங்கள் சொல்லுவது நிதர்சனம் டாக்டர் ..
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
//மனிதனின் தன்மையென்று நாம் கொண்டாடும் சகமனிதர்களிடம் இருக்கும் இசைவும் இணக்கமும் ஒரு கலாச்சாரத்தின் உயிர். அது கொல்லப்பட்டால்,அதுவும் வன்முறை தான், அந்த நாள் துக்கமான நாள் தான்.//
ReplyDeleteஇது தனி மனித இழப்பிற்கு பின்பும் கூட உணர வேண்டிய விசயம்தானே? எத்தனை பேர் ஒருவர் இறந்த அன்று மட்டும் சிறந்த எதிரியாக நினைத்தவரைக் கூட நாகரிகம் கருதி வாய் நிறைய பாராட்டி முதலைக் கண்ணீர் வடித்து விட்டு, மறுநாள் எப்பொழுதும் போலவே ஓட்டத்துடன் ஓடுகிறார்கள், அது போலவே இந்த தேசம் சார்ந்த நிகழ்வுகளும் அதனையொட்டிய "புத்துப்புது நியாயங்கள் உருவாக்கிக்கொள்ளப்படும்" போலவே!
மனித உயிர்களைவிட கட்டிடங்களின் மதிப்புத் தான் உங்களுக்கு பெரிதாக போய்விட்டது போல? சிறுபான்மையினரை இப்படி உசுப்பேத்தினால் பெரியாளாகிவிடலாம் என்று யாரோ தப்பாக உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள்! ரொம்ப நல்லவரு சார் நீங்க!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete"இப்படி நடக்கும் ஒவ்வொரு நாள் பற்றிய நினைவும், யார் என்ன செய்தார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்வதை விடவும், ஏன் அப்படி செய்தார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவும் தூண்ட வேண்டும்." மிக மிக சரியான வார்த்தைகள் , டாக்டர் .
ReplyDeleteகட்டிடம் இடிக்கப்பட்டது உள் நாட்டினர் செய்த சுயநலசதி, அதுவும் எதிரியின் தாக்குதலும் ஒன்றல்ல. நாளையே இன்னொரு கசாப் வருவதை மக்களாகிய நாம் தடுக்க முடியாது, ஆனால் இன்னொரு வெறிபிடித்த கும்பல், நாட்டின் அமைதியைச் சீர்குலைக்காமல் தடுக்க முடியும். விழிப்புடன், விருப்பமுமிருந்தால்
ReplyDelete"கட்டிடம்" இடிக்கப்பட்டது ?????மருத்துவர் அவர்களுக்கு,
ReplyDeleteசிறப்பான பதிவு,
மசூதியை கட்டிடம் ஆக்கிவிட்டது பார்ப்பனீயம், நீங்களும் ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
kalagam
மெத்தனமும் வன்முறைதான் பளீரென புரிய வைத்த சொல்.
ReplyDelete//இன்னொரு வெறிபிடித்த கும்பல், நாட்டின் அமைதியைச் சீர்குலைக்காமல் தடுக்க முடியும். விழிப்புடன், விருப்பமுமிருந்தால்//
ReplyDeleteநிதர்சனமான உண்மை டாக்டர்