நண்பர்களும் தோழர்களும் அன்புடன் என்னை எழுத வைப்பதன் ஒரு பகுதி இது. இங்கே இதைச்சுட்டுவது, வினவு தளத்தில் இருக்கும் பிற கட்டுரைகளையும் நீங்கள் படிக்கலாமே என்பதற்குத்தான்.
இன்னமும் பேனாவால் எழுதுமளவிற்கு தட்டச்சு வரவில்லை.
என் language பாஷையாகி இப்போதுதான் மொழியாகிக்கொண்டிருக்கிறது.இந்த நேரத்தில், இப்படி ஆங்கிலவழி தமிழ் (அதுவும் தேடித்தேடி) அடித்துக்கொண்டிருப்பதில் ஒரு சிக்கல்! இப்படி அடிப்பதையாவது பயிற்சி மூலம் வேகப்படுத்திக்கொள்ளும் ஆர்வக்கோளறின் அதீதத்தில், rudhran என்பதை ruthran என்று அடித்துவிட்டு என் மின்னஞ்சல் வேலை செய்யவில்லை என்றெல்லாம் கவலைப்பட நேர்ந்தது! இது ஆங்கிலம் தட்டும் போது தவறுகளாக வெளிப்படுமோ என்றும் ஓர் அச்சம் ஆரம்பமாக
என்ன தான் எழுதித் தொலைப்பது?
கவிதைகள் போல் சில பாசாங்குகள் செய்யலாமா?
உள் புகுமுன் மனக்குகைக்குள்ளேயே பதுங்கிக்கொள்ளலாம்
கண்களை மூடிக்கொள்ளலாம்
சூரியன் வந்தாலென்ன? விடியல் விரும்பினால்தானே
இங்கே வந்தவர்கள் எண்ணிக்கை உண்மையைவிட அதிகமாகத்தெரிகிறது..சரிசெய்ய நானே உள்நுழைந்தால்கூட எண்ணிக்கை கூடுகிறது
ReplyDeleteஅன்புடன் யாராவது எனக்கு இதை எப்படிச்சரிசெய்வது என்று சொல்லித்தரவேண்டுகிறேன்
என்ன தான் எழுதித் தொலைப்பது?
ReplyDeleteகவிதைகள் போல் சில பாசாங்குகள் செய்யலாமா?//
:-))
பாசாங்கோ, உண்மையோ நீங்கள் தமிழில் எழுதுங்க அவ்வளவுதான் தேவை இப்போதைக்கு...
என்னது எண்ணிக்கை அதிகமாக காட்டுதா? அதெல்லாம் அப்படியில்லை கண்டிப்பாக நிறைய பேர் வந்து செல்கிறோம். இருந்தாலும் நீங்க very funny, doc!
டாக்டர்,
ReplyDeleteஉங்கள் தமிழ் மொழி நடை அழகாக இருகிறது.
உங்களின் அதே கவலையோடுதான் நானும் ஆரம்பித்தேன், இப்பொது பரவாயில்லை.... இனும் சில நாளில் நீங்களும் இதை சொல்லலாம்.....
ReplyDeleteநாம் சொல்வது படிப்பவர்கு புரிந்தால் போதும்..... இபோதெல்லாம் நம் மக்கள் குற்றம் கண்டுபிடிப்பதிலை, அதற்கேற்றார் போல் தம்மை adjust செய்துகொள்கிறார்கள்.... : )
பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்தாகிவிட்டன.இன்று மதியம் தேர்வு முடிந்து மகிழ்ச்சியாக செல்லும் மாணவ,மாணவிகளை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது ..நானும் கடந்து வந்த நிமிடங்கள் தானே இவை.பத்தாம் வகுப்பு தேர்வும் முடிவுறும் விரைவில்..
ReplyDeleteஇந்த மகிழ்ச்சியில் செல்லும் இவர்களில் சிலர்தான் தேர்வு முடிவுகளுக்கு பின்னர் தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர்.
இத்தகைய நிகழ்வுக்கு அடிப்படை காரணம் என்ன?தேர்வு முடிவுகளில் போது இவர்கள் எப்படி கையாள படவேண்டும்?தங்களை தேர்வு முடிவுகளுக்கு தயார் படுத்தி கொள்வது எவ்வாறு என்கிற ரீதியில் ஒரு பதிவை இடுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
டாக்டர் ஷாலினி அவர்களே உங்களிடம் இருந்து இது குறித்து ஒரு உளவியல் ரீதியான பதிவை எதிர்நோக்குகிறேன்.நீங்கள் பதிவு செய்து இருப்பின் "மீள் பதிவு" செய்ய கேட்டு கொள்கிறேன்.
என்னாலும் எழுத இயலும் ஆகினும் முழுவதுமாக பயனுள்ள பதிவாய் சென்றடைய வேண்டும் என்பதால் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
http://karuvarayilirunthu.blogspot.com/2009/03/blog-post_8286.html
ஐயா..திரு சுபாஷின் பதிவை இணைத்துள்ளேன்.தாங்கள் பரிசீலிக்க வேண்டுகிறேன்
வாங்க வாங்க
ReplyDeleteஆவலோடு காத்திருக்கிறோம்
மதிபிற்குரிய டாக்டர் ஐயா ,
ReplyDeleteதங்களது சேவை - இனி
தமிழில் தேவை ...
வாழ்க வளமுடன்
ஜெயம் .
//பாசாங்கோ, உண்மையோ நீங்கள் தமிழில் எழுதுங்க அவ்வளவுதான் தேவை இப்போதைக்கு...//
ReplyDeleteஅதே!
டாக்டர் ருத்ரன் கூட எங்களைப் போல் தமிழ் வலைப்பதிவு எழுதுகிறார் என்று சொல்லிக்கொள்ளலாமே :)
எழுதுங்கள்.
ReplyDeleteநீங்கள் சொல்ல வேண்டிய செய்திகள் பல உண்டு.
அவற்றால் நல்ல பயன்கள் விளைய நிறைய வாய்ப்பிருக்கிறது.
நன்மை நோக்கிய புதிய வழிநடையைத் (தமிழில் எழுதுவது)தொடங்குங்கள்.
நன்றி.
//
ReplyDeleteசூரியன் வந்தாலென்ன? விடியல் விரும்பினால்தானே
//
அருமையான வரிகள்.
தட்டச்சு துரிதமாக அடித்து நீங்கள் நிறைய எழுதித் தள்ள வாழ்த்துக்கள்.
டாக்டர் டிவிக்களில் உங்களின் பேட்டியைக் காண்பதோடு சரி. தங்களின் வலைப்பதிவினைக் கண்டு மெத்த மகிழ்ச்சி. இன்றைய சமூகத்திற்கு தங்களைப் போன்ற உளவியலாளர்கள் அதி முக்கியம். தாங்களால் தான் மூடப்பழக்க வழக்கங்களை வெளிச்சம் போட்டு காட்ட இயலும். தாங்கள் தொடர்ந்து தமிழில் எழுத விரும்புகிறேன்
ReplyDeleteடாக்டர்.. இது எப்போ ஆரம்பித்தீர்கள்..??? மிகவும் மகிழ்ச்சி.
ReplyDeleteஇங்கேயும் ஒஷோ பற்றி எழுத சொல்ல வற்புறுத்த மாட்டேன். நீங்களே செய்வீர்கள் என்று தெரியும்.
வாழ்த்துகள்.
சூர்யா
சென்னை
விடுதலை
ReplyDeleteமகிழ்ச்சி !
தமிழ் பதிவுக்கு நன்றி டாக்டர்
கண்களை மூடிக்கொள்ளலாம்
ReplyDeleteசூரியன் வந்தாலென்ன? விடியல் விரும்பினால்தானே
arumai intha uvamai
தமிழ் பதிவுக்கு நன்றி டாக்டர்
ReplyDeleteஅலட்டாமலேயே அசத்துறீங்க சார்!
ReplyDeleteஐயா உங்களின் ஆங்கில தளத்துக்குள் என்போன்றோர் நுழைவதற்கு தயங்கியே வெளியே நிற்கிறோம். நீங்கள் தமிழில் எழுதுவது எவ்வளவு மகிழ்வானது. பாசாங்குத்தனமில்லாமல், இறுக்கமில்லாமல் நீங்கள் எழுதுவது உங்களின் பழகுமுறையும் இப்படித்தான் என்று ஒரு நேசத்தை ஏற்படுத்துகிறது. என்ன எழுதுவது என்பதை விட தமிழில் எழுதுங்கள் போதும். உங்கள் எழுத்து இயல்பிலேயே எல்லாப்போலித்தனங்களையும் சுட்டும் சொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ReplyDeleteதோழமையுடன்
செங்கொடி
மதிப்பிற்குரிய டாக்டர் ருத்ரன் ஐயா,
ReplyDeleteஎனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், அதைப் படிக்கும் போது ஒரு சினேகம் உண்டாவதில்லை. பிடித்தவர்களின் எழுத்தையே படித்தாலும். தயவு செய்து தமிழில் எழுதுங்கள். என் போன்றவர்கள் உங்களின் எழுத்துக்களோடு நன்கு பரிச்சயமாக அது உதவும்.
நன்றி.
மதிப்பிற்குரிய டாக்டர் ருத்ரன் ஐயா,
ReplyDeleteஎனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், அதைப் படிக்கும் போது ஒரு சினேகம் உண்டாவதில்லை. பிடித்தவர்களின் எழுத்தையே படித்தாலும். தயவு செய்து தமிழில் எழுதுங்கள். என் போன்றவர்கள் உங்களின் எழுத்துக்களோடு நன்கு பரிச்சயமாக அது உதவும்.
நன்றி.
இதை நான் வழிமொழிகிறேன்
//இங்கே வந்தவர்கள் எண்ணிக்கை உண்மையைவிட அதிகமாகத்தெரிகிறது..சரிசெய்ய நானே உள்நுழைந்தால்கூட எண்ணிக்கை கூடுகிறது
ReplyDeleteஅன்புடன் யாராவது எனக்கு இதை எப்படிச்சரிசெய்வது என்று சொல்லித்தரவேண்டுகிறேன்//
நம் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையில் நாம் எவ்வளவு தடவை நமது தளத்துக்கு வருகிறோமோ
அதுவும் கூடும். இதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வருகை தரும் நேயர்களின் எண்ணிக்கையை மட்டும்
தரக்கூடிய விட்ஜெட்டுகளைப் பயன் படுத்தலாம்.
நிற்க. உங்களது மன நிலைப் பதிவுகள் எங்கே உள்ளன ? அதற்கான வலைப்பதிவு பெயர் என்ன?
சுப்பு ரத்தினம்.
ஸ்டாஃப்ஃபோர்டு, யூ.எஸ்.ஏ.
http://vazhvuneri.blogspot.com
நான் உங்களின் முதல் ரசிகன்.பிறகு நான் ஒரு
ReplyDeleteஉங்களின் முன்னால் பேஷன்ட்.உங்கள் தமிழ்
பதிவு முயற்சிகள் மனதுக்கு நெருக்கத்தையும்
சந்தோஷத்தை தருகிறது.நன்றி.