Sunday, February 8, 2009

அன்புடன்

தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் நிறையவே இருந்தும் அதற்கான முயற்சி, பயிற்சி, பக்குவம் பொறுமை இல்லாததால் இத்தனை மாதங்களாக தயக்கம் இருந்தது. இப்போதும் ஒன்றும் பெரிதாக வேகம் வந்துவிடவில்லை. வேகமாக எழுதிப்பழகிவிட்டதால் மெதுவாக தட்டச்சு செய்வதில் பல சிந்தனைகள் வார்த்தைகளாவதற்குள் காணாமல் போய் விடுகின்றன.
இருந்தும் முயற்சிக்கிறேன்.

6 comments:

  1. ருத்ரன் சார்,
    எழுத எழுத பழகிவிடும்.. சிந்தனை காணமல் போவது சகஜம் தான் ஆனால் பதிவுகள் எழுத எழுத கண்டிப்பா சரியாகிடும்..

    ReplyDelete
  2. சார்,
    வணக்கம்.
    நீங்கள் உங்கள் எழுத்துப்பணியை தொடர நாங்கள் உளமார வேண்டுகிறோம்.

    ReplyDelete
  3. அன்பிற்க்கும் உயர்மதிப்றிக்குரிய ஐயா மருத்துவர் ருத்தரன் அவர்களுக்கு,

    தங்கள் எழுத்துப்பணி தொடர வேண்டுகின்றேன்....

    நன்றி,

    அன்புடன்,
    தமிழ். சரவணன்

    ReplyDelete
  4. வாங்க டாக்டர், தமிழ்ல வந்தாச்சா? சந்தோஷம். தட்டச்சுதானே அது பாட்டுக்கு பழகப் பழக உங்க சிந்தனையோட விரல்கள் போட்டி போட ஆரம்பித்துவிடும்.

    தமிழிலும் உங்கள் எழுத்தை தரிசிக்க ஆவலுடன். :-)

    ReplyDelete
  5. மதிப்பிற்குரிய அய்யா ,
    தங்களது சேவை மென் மேலும் வளர
    வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன் ...

    மேலும் கவியரசுவின்
    பாடல்களை மேற்கோள் இடவும்
    வேண்டுகிறேன் ....

    அன்புடன்
    மா சிங்காரவேலு .

    ReplyDelete
  6. தாங்கள் வேகமாக தட்டச்சு செய்ய இத்தளம் உதவும் என்றால் மிக்க மகிழ்ச்சி

    தள முகவரி : http://www.iit.edu/~laksvij/language/tamil.html

    ReplyDelete